
வெண்தலைக் கழுகு (Haliaeetus leucocephalus), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினங்களில் ஒன்று (மற்றையது பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இக்கழுகை அமெரிக்கக் கழுகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் கனடாவிலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த அலாஸ்காவில் வாழ்கின்றன.

இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. கொன்றுண்ணிப் பறவைகளான இவை மீன், சிறு பறவைகள், எலி முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீனகளைப் பற்றுவதில் திறமையானவை