கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நவரத்தினங்களின் பண்புகள்
முத்து (pearl)


முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.


முத்தின் மருத்துவ குணங்கள்


முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.


இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.

யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.வைரம் (diamond)


உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .


கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.வைரத்தின் மருத்துவ குணங்கள்


மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.


யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..! வைடூரியம் (cat's eye)
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது . நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல் .மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும் .பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும் .மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும் .


சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும் .பூர்வீக சொத்து கிடைக்கும் .நிலையான வருமானம் அமையும் .முகத்தில் வசீகரம் உண்டாகும் .வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்

அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் ,7 16 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும் ,2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...! மாணிக்கம் (ruby)


இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .


பண்புகள்


மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .


மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .


யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!


சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம் . எண்கணித படி 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும் , பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம். மரகத பச்சை (emerald)


ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.


பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.


மரகதத்தின் மருத்துவ குணம்


மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?


மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம் புஷ்பராகம் (topaz)


இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.


கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.


யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்


தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்
பவழம் (coral)இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.


சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.


அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.


பவழத்தின் மருத்துவ குணங்கள்ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.


யாரெல்லாம் பவழம் அணியலாம்


பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.


சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.


அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.


பவழத்தின் மருத்துவ குணங்கள்ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.


யாரெல்லாம் பவழம் அணியலாம்


பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம். நீலம் (sappihire)
ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.


தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

நீலகல்லின் மருத்துவ குணம்


கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.


யாரெல்லாம் நீலம் அணியலாம்


சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம் கோமேதகம் (hessonits )


புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.


உத்தியோக உயர்வை கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்


கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?


திருவாதிரை,சுவாதி,சதய நட்சத்திர காரர்கள்.மற்றும் எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம். எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!


அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!


ஞாயிறு
மாணிக்கம்,கோமேதகம்
..
திங்கள்
முத்து,வைடூரியம்
..
செவ்வாய்
பவழம்
..
புதன்
மரகதம்
..
வியாழன்
புஷ்பராகம்
..
வெள்ளி
வைரம்
..
சனி
நீலம்
சந்திர காந்தகற்கள் (moon stone),சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்


இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.மருத்துவ குணங்கள்


தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.


யாரெல்லாம் அணியலாம் ..?

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.
சூரிய காந்த கற்கள்இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும் .துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.

யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம். நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு பார்வை


செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.


பதிக்கும் முறை

மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.


நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்


நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.


யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?


மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.


பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும். அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!
மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்

முத்து
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்
புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்
கோமேதகம்


உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு விரல்
மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்டரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்..ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.


ரத்தின நிபுணர்கள் ஏனோ... எந்த தொழிலுக்கு எந்த கல் ஏற்றது என்ற தகவலை வெளியிடுவதில்லை. எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.


புஷ்பராகம்


கல்வித்துறை
கலைத்துறை
எழுத்து துறை
பொருளாதார துறை
சமய துறை
அற நிலைய துறை


..
வைரம்


விவசாயம்
நிர்வாகம்
கோழிப்பண்ணை
பால் பண்ணை
பழ மரங்கள் பயிரிடுவோர்


கோமேதகம்


ஜோதிடர்
கைரேகை நிபுணர்
அரசியல் விமர்சகர்


முத்து


உலோகம்
இசைதுறை
கணித துறை


மரகதம்


அலங்கார பொருள் விற்பனை
துணி
எண்ணை
காகிதம்
ஏஜன்ஸி
காண்ட்ராக்ட்


மாணிக்கம்


அரசு சம்பந்த பட்ட தொழில்
விளையாட்டு சம்பந்த பட்ட தொழில்
நடிப்பு துறை


பவழம்


கட்டிட தொழில்
மின்சாரம்
காவல் துறை
இராணுவம்


நீலம்


வீட்டு மனை,வீடு விற்பனை
இரும்பு
ஒரே நேரத்தில் பல தொழில் செய்பவர்கள்


வைடூரியம்
சட்டம்
நீதிமன்றம் சம்பந்த பட்ட தொழில்
மருத்துவம்
அச்சு கலை
திரைப்படத்துறை
பத்திரிக்கைத்துறை
மேலே சொன்ன கற்கள் அனைத்தும் அந்தந்த தொழிலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியவை.எனினும் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதத்தின் பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த கற்களோடு ஜாதகரின் அதிர்ஷ்ட கல்லையும் இணைத்துப் போடுவது கூடுதல் சிறப்பு.வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்
வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்-- நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்
நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல் -- நடு விரல்


பவழம்

உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்டரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்..ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.


ரத்தின நிபுணர்கள் ஏனோ... எந்த தொழிலுக்கு எந்த கல் ஏற்றது என்ற தகவலை வெளியிடுவதில்லை. எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.


புஷ்பராகம்


கல்வித்துறை
கலைத்துறை
எழுத்து துறை
பொருளாதார துறை
சமய துறை
அற நிலைய துறை


..
வைரம்


விவசாயம்
நிர்வாகம்
கோழிப்பண்ணை
பால் பண்ணை
பழ மரங்கள் பயிரிடுவோர்


கோமேதகம்


ஜோதிடர்
கைரேகை நிபுணர்
அரசியல் விமர்சகர்


முத்து


உலோகம்
இசைதுறை
கணித துறை


மரகதம்


அலங்கார பொருள் விற்பனை
துணி
எண்ணை
காகிதம்
ஏஜன்ஸி
காண்ட்ராக்ட்


மாணிக்கம்


அரசு சம்பந்த பட்ட தொழில்
விளையாட்டு சம்பந்த பட்ட தொழில்
நடிப்பு துறை


பவழம்


கட்டிட தொழில்
மின்சாரம்
காவல் துறை
இராணுவம்


நீலம்


வீட்டு மனை,வீடு விற்பனை
இரும்பு
ஒரே நேரத்தில் பல தொழில் செய்பவர்கள்


வைடூரியம்
சட்டம்
நீதிமன்றம் சம்பந்த பட்ட தொழில்
மருத்துவம்
அச்சு கலை
திரைப்படத்துறை
பத்திரிக்கைத்துறை
மேலே சொன்ன கற்கள் அனைத்தும் அந்தந்த தொழிலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியவை.எனினும் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதத்தின் பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த கற்களோடு ஜாதகரின் அதிர்ஷ்ட கல்லையும் இணைத்துப் போடுவது கூடுதல் சிறப்பு.ஆங்கில முறைப்படி அதிஷ்ட கற்களை தேர்வு செய்வது எப்படி...?

ஆங்கிலேயர்கள் தாங்கள் பிறந்த மாதத்தின் படி ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.இப்படி தேர்ந்தெடுக்கும் முறை 1912 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பொற்கொல்லர் கூட்டத்தில் அங்கீகரிகப் பட்டது.


ஜனவரி
கார்னட்


பிப்ரவரி

அமிதிஸ்ட்

மார்ச்

அக்வாமெரின் (அல்லது) ப்ளட் ஸ்டோன்

ஏப்ரல்

வைரம்

மே

மரகதம்

ஜூன்

முத்து (அல்லது) சர்டோனிக்


ஜூலை

மாணிக்கம்


ஆகஸ்ட்

பெரிடாட் (அல்லது) சர்டோனிக்


செப்டம்பர்

நீலம்


அக்டோபர்

ஓப்பல்(அல்லது) டூர்மலின்


நவம்பர்

டோபாஸ்


டிசம்பர்

டர்காய்ஸ் (அல்லது) லாபிஸ் லஜூலி