கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

புதன், 19 ஜனவரி, 2011

வெற்றி நிரந்தரமல்ல; தோல்வி இறுதியானதுமல்ல
அஞ்சனக்கல்


அஞ்சனக்கல் என்னும் ஒரு கல் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. நீலாஞ்சனம் அல்லது கருமாக்கல் என்றழைக்கப்படும் இந்த கல் பூமியில் விளையும் கருமா வகை பாதையில் கீழிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது.
ஆன்டிமணி, ஆர்சனிக், சல்பர், சிலிகா மற்றும் ஆக்சிஜன் ஆகியன இணைந்து காணப்படும் இந்த கல் பல்லாண்டுகளாக கண்களுக்கு மை தீட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென் தமிழக பகுதிகளில் கரப்பான் போன்ற தோல் நோய் உள்ள இடங்களின்மேல் இந்த கல்லை ஒட்டச்செய்து இறுக்கக்கட்டி பின் இந்த கல்லை இழுத்து தோல் நோயை சித்த வைத்தியர்கள் குணப்படுத்துகின்றனர். இதிலிருந்து ஆன்டிமோனியம் என்னும் சத்து பிரித்தெடுக்கப்பட்டு கண்ணோய்க்கான மருந்துகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அண்டங்காக்கையின் தலையில் இருக்கும் முடிச்சுபோன்று இந்தக்கல் காணப்படுவதால், இது அண்டங்காக்கையிலிருந்து தோன்றியதாக முன்னோர்கள் நம்பினர். வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட மைகளை கண்ணில் பூசுவதை தவிர்த்து, இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட நீலாஞ்சன மையை சித்த மருந்துக்கடைகளில் வாங்கி பயன்படுத்தினால் பலவகையான கண் நோய்கள் வராமல் கண்களை காத்துக் கொள்ளலாம்.
26 வகையான ஆயுதங்களைக் கொண்டு ரண சிகிச்சை செய்ததாக
சித்த மருத்துவம் மூன்று வகையான வைத்திய முறைகளை அடிப்படையாக கொண்டது. தேவர் முறை என்பது ஒலி மற்றும் மந்திர உச்சாடணங்களைக் கொண்டு மனதை அமைதிப்படுத்தி, நோயை குணப்படுத்துவதாகும். மானிடர் முறை என்பது இயற்கையாக கிடைக்கும் மூலிகை, தாது மற்றும் உயிரினப் பொருட்களைக் கொண்டு நோயை குணப்படுத்துவதாகும். மூன்றாம் முறையான ராட்சஷ முறையில் கத்திகளை கொண்டு தேவையற்ற உறுப்புகளை அறுத்தும், கழிவுகளை வெளியேற்றியும் செய்யும் ரண சிகிச்சையாகும். சத்திரகத்தி, குறும்பி, கருமூக்குவாய், கடுமுள்வாங்கி, மூக்குசலாகை, மட்டகோலூசி, பொட்டு, கழச்சிக்கோல், வட்டமயிர்கத்தி, படல ஊசி, கைவாள், கல்லுருவி, ஆரா என்பது போன்ற 26 வகையான ஆயுதங்களைக் கொண்டு ரண சிகிச்சை செய்ததாக பண்டைய தமிழ் நூல்கள் சொல்கின்றன. இவை போர்செப்ஸ், நைப், காட்டரி, புரோப், நீடில் போன்ற தற்போதைய நவீன மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகளை ஒத்து இருப்பது வியப்பிற்குரிய விஷயமே தசைகளில் ஏற்படும் இறுக்கத்திற்கு அதற்கு தேவையான உடற்பயிற்சியை அடிக்கடி செய்ய வேண்டும். ஓமம், சீரகம், சோம்பு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, அத்துடன் மொத்த அளவு கருப்பட்டி சேர்த்து அம்மியில் அரைத்து, பட்டாணியளவு தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வெந்நீர் அருந்த வாயுப்பிடிப்பு நீங்கும் பாஸிபுளோரா


நல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், குறைந்த அளவு உணவு, நல்ல எண்ணங்கள், சிறு உடற்பயிற்சி, தியானம் போன்ற அமைதியான தூக்கத்தை அருகில் கொண்டு வருகின்றன. அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா.

பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை. குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம்.

பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம் மகாகனி!

இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். மனித உறுப்புக்களின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இறுதியில் மரணத்தில் தள்ளும் தன்மை கொண்டது இந்த நோய்.

சித்த வைத்தியத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. வெந்தயம், சுண்டை, பாகல், வேம்பு, நிலவேம்பு போன்ற பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை.

இந்த வகையில், மகாகனி மூலிகையும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த பசுமை காடுகளில் இந்த அரிய மூலிகை காணப்படுகிறது. மிக, மிக கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்ட மகாகனியின் பட்டை, உலர்ந்த பழத்தோல் ஆகியவை "தேன்காய்' என்ற பெயரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படுகின்றன.

இதிலுள்ள பேராக்மலின் லிமனாய்டுகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. மகாகனியின் பட்டை, பழத்தோல் ஆகியவற்றை 10 கிராம் அளவில் எடுத்து, 500 மி.லி., நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். அது, 125 மி.லி., அளவிற்கு சுண்டிய பின், தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவு குறையும். மகாகனி பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 500 மி.கி., அளவிற்கு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்போ, பின்போ சாப்பிட்டு நீர் அருந்தலாம்.

மருந்துகள் உட்கொள்ளும் போது சர்க்கரை அளவு மிக குறைந்து, குறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாகனி ஒரு மாமருந்து கொசுத்தொல்லை... இனி இல்லை


கொசுக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். கொசு கடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்புவதைவிட கொசு நம்மை கடிக்காமல் பார்த்துக் கொள்வதே உத்தமம். ஆகவேதான் நம் வீட்டில் கொசு நுழையாதபடி ஜன்னல், கதவுகளை வலை வைத்து அடைத்துவிடுகிறோம். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் நம் வீட்டிற்குள் இருக்கும் கொசு இனப்பெருக்கம் செய்து, நம்மை துரத்தி துரத்தி கடிக்கின்றன.
வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான கொசுக்கள் ஆட்சிபுரிகின்றன. அவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. கொசு கடித்தால் பரவும் நோய்கள்கூட ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகத்தான் நோய் குறிகுணங்களை உண்டாக்குகின்றன. ஆனால் கொசு கடித்த உடனேயே தோன்றும் அரிப்பானது நிற்காமல் தொடர்ந்து தடிப்புகளாகவும், சிவப்பு கீறல்களாகவும் சில சமயங்களில் புண்களாகவும் மாறிவிடுகின்றன.
சிறு குழந்தைகள், வறட்சியான, மென்மையான தோல் உடையவர்கள், சளி போன்ற ஒவ்வாமை உடையவர்கள், மலைப் பிரதேசங்களுக்கு செல்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்கள் அடிக்கடி கொசுக்கடியின் ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். கொசு நம்மை கடிக்கும்போது ஒரு வகையான திரவத்தை நமது தோலுக்குள் செலுத்தி, மரத்துப்போகச் செய்து, பின் தேவையான ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது. நாம் என்னதான் இலவசமாக ரத்ததானம் செய்தாலும் நமது ரத்தத்திற்கு கட்டணமாக அரிப்பு, தடிப்பு, எரிச்சல், புண்கள், கீறல்கள், நோய் கிருமிகள் என பல உபாதைகளை நமக்கு கொடுத்துவிடுகின்றன.
கொசு கடித்த இடங்களில் சிவப்பான குருக்கள் தோன்றி, பின் புண்ணாக மாறி, இறுதியில் தழும்பாக நிலைத்து விடுகின்றன. முழங்கை, முழங்காலுக்கு கீழ்ப்பட்ட பகுதிகளிலேயே கொசுக்கடியினால் ஒவ்வாமை ஏற்படுகின்றன. கொசுக்களை அழிக்க பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதால் இயற்கையே ஏற்படுத்தி தந்த பாதுகாப்பு மூலிகைதான் டியுரண்டா என்ற ஸ்கை பிளவர்.
டியுரண்டா எரெக்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புதர்செடிகள் மலைப்பகுதிகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும், வீட்டு வாசலிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன.
நீல நிற, கொத்து கொத்தான பூக்களை உடைய டியுரண்டாவில் சப்போனின்களும், மன மயக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதன் பழுத்த பழங்கள் லார்வா கொசுக்களை அழிக்கும் தன்மை உடையதால் மழை அதிகம் பெய்யும் மலைப்பிரதேசங்கள் மற்றும் குளிர்பிரதேசங்களில் இயற்கையாகவே இந்த தாவரங்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இதன் பழுத்த பழங்கள் தரையில் விழுந்து, மழைநீரில் ஊறி கொசு லார் வாக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்துகின்றன.
டியுரண்டா செடி இலைகளை மைய அரைத்து கொசுக்கடியினால் ஒவ்வாமை ஏற்பட்ட இடங்களில் தடவிவர ஒவ்வாமை நீங்கி, தோல் தடிப்பு மற்றும் தினவு குறையும். டியுரண்டா செடி இலைகளை இடித்து, சாறெடுத்து, 2 பங்கு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி, பதத்தில் வடிகட்டி தடவிவர அரிப்பு நீங்கும்.
டியுரண்டா செடியின் பழுத்த பழங்களை வேப்பெண்ணெயில் நன்குஊறவைத்து, தெளிப்பான் மூலம் கொசு அதிகம் பரவும் இடங்களிலும், நீர் தேங்கியுள்ள இடங்களிலும் தெளித்துவர கொசு பெருக்கம் கட்டுப்படும். கொசு லார்வாக்கள் அழியும் சுகமாக சுவாசிக்கலாம்!

நுரையீரலை தாக்கக்கூடிய நுண்கிருமிகள், ஒட்டடை, வாகனப்புகை, பூக்களின் மகரந்த தூள்கள், செயற்கை நறுமண திரவியங்கள் போன்றவற்றால் நுரையீரலின் பாதை, மூச்சுக்குழல்களின் நுனிகள் ஆகியவற்றில் இறுக்கம் ஏற்பட்டு, சுருங்குகின்றன. அதுமட்டுமின்றி நுரையீரலின் காற்று குமிழங்கள் நிரந்தரமாகவோஅல்லது தற்காலிகமாகவோ விரிந்தோ அல்லது ஒட்டியோ காணப்படுகின்றன. இதனால் அன்றாட செயல் பாட்டிற்கு ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை என்னும் உயிர் காற்று கிடைக்காமல் செல்கள் திணறுகின்றன. இதனால் கூடுதல் ஆக்சிஜனை வேண்டி, மூளையின் கட்டளைப்படி நுரையீரல் வேகமாக சுருங்கி, விரிய ஆரம்பிக்கிறது. இதுவே மூச்சிரைப் பின் ஆரம்ப கட்டமாகும். நாட்கள் செல்லச் செல்ல அவ்வப்போது தோன்றும் இந்த மூச்சிரைப்பானது அடிக்கடி தோன்றி ஆஸ்துமாவாக மாற ஆரம்பிக்கின்றது.
நுரையீரல் பாதையில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் கிருமித்தொற்றினால் இயல்பாகவே நுரையீரலின் உட்புறம் தங்கியுள்ள சளிச்சவ்வானது அழற்சியுற்று, சளி கசிவை அதிகப்படுத்தி, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, மூக்கின் உட்புறம் மற்றும் தொண்டைப்பகுதியில் ஒருவித அரிப்பு, தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத் துகின்றன. இதன் தீவிர நிலையில் கடுமையான இருமல் மற்றும் தொண்டைவலியும் உண்டாகி, கிருமித்தொற்று அதிகரித்து, சுரமும் உண்டாகிவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த உட்கொள்ளும் எதிர் உயிரி மருந்துகளால் தற்காலிமாக கிருமித் தொற்று நீக்கப்பட்டாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, அடிக்கடி சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற தொல்லைகள் உண்டாகின்றன.
நுரையீரல் பாதையில் ஏற்படும் கிருமித்தொற்றை நீக்கி, ஒவ்வாமையை கட்டுப் படுத்தி, அதனால் அதிகமாகும் ஹிஸ்டமைன்களை குறைத்து, மூச்சுப்பாதை, மூச்சுக்குழல் ஆகியவற்றை விரிவடைச் செய்யும் அற்புத மூலிகைதான் எபிட்ரா, ஆங்கில மருத்துவத்தில் இதிலிருந்து வேதி முறையில் பிரித்து எடுக்கப்படும் எபிட்ரின், நார்எபிட்ரின் போன்ற மருந்துகள் சுவாசத்தொல்லையை நீக்க பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
எபிட்ரா ஜெரார்டியானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட எபிட்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரங்கள் இமயமலைப் பகுதிகளில் பெருமளவு வளர்ந்து காணப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள எபிட்ரின், எபிட்டிராக்சேன், சுடோஎபிட்ரின் போன்ற வேதிச்சத்துகள் நுரையீரல் பாதையில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, சுவாசத்தை எளிதாக்குகின்றன.
நேரிடையாக எபிட்ராவை மருந்தாக உட்கொள்ளாமல். இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துகளை மருந்தாக உட்கொள்ளும் பொழுது மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவு உட்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் எபிட்ரா மூலிகையின் உபபொருட்களை உணவாக உட்கொள்ள தடை விதித்துள்ளனர். ஆனால் உலர்ந்த எபிட்ரா மூலிகைப்பொடியை 100 முதல் 200மில்லி கிராமளவு தினமும் உட்கொள்வது எந்தவித பக்கவிளைகளும் இல்லாமல் சுவாசத் தொல்லைகளை நீக்கும், உலர்ந்த எபிட்ரா இலைகளை 50 முதல் 100மில்லிகிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட இரைப்புநோய் நீங்கும்.
எபிட்ரா, ஆடாதோடை, நிலவேம்பு, அதிமதுரம், வால்மிளகு, மருதம்பட்டை, கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கர்க்கடாகசிங்கி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, பொடித்து, சலித்து 200மிலி கிராம் தினமும் இரண்டு வேளை தேனுடன் கலந்து சாப்பிட வறட்டு இருமல், இரைப்பு ஆகியன நீங்கும்.
சளி நன்கு வெளியேறும், சுவாசம் சுலபமாகும். சித்தா, ஆயுர்வேதா மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோப்லின் என்னும் இருமல் மாத்திரை மற்றும் மருந்துகளில் எபிட்ரா சேர்க்கப்படுகிறது. இதனை காலை-1 , இரவு-1 தினமும் இரண்டு வேளை 10 நாட்கள் உட்கொள்ளலாம்