கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வியாழன், 13 ஜனவரி, 2011

நாக மாணிக்கம் என்பது உன்மையா


நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.

எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.

இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.
இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.

இந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.அவற்றை நம்புவதும்நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது.சிலவற்றை மனித உணர்வாலும், சிலவற்றைப் பாசத்தாலும்,சிலவற்றை தியானத்தால் மட்டுமே உணரமுடியும்.


இந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க ஆரம்பித்தார்.முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார்.அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன்,அவரது அழியாத காவியம்:அர்த்தமுள்ள இந்துமதம்,பாகங்கள்20க்கும் மேல்!!!)

இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.