கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு

தீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் மிகப் பழமையானது. அவற்றைத் தவிர நமக்கு தீமையை விளைவிக்கும் பல்வேறு பிரயோகங்கள் உள்ளன. அவற்றில் பலவும் வெளியில் தெரியாது செய்யப்படும் நிகழ்வுகள். நம்முடன் நம்மை அறியாமல் இருந்து கொண்டு நம்மை அழிக்கும் 'தீய ஆவிகளின்' செயல்கள்தான் கொடுமையானது. அதை எளிதில் கண்டு பிடிக்கவும் முடியாது. இந்த உலகில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என பலர் பல இடங்களிலும் இருந்தாலும், அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டு விட முடியும். ஆனால் தீய ஆவிகளை ஏவும் மனிதர்களையும், அந்த தீய ஆவிகளையும் நாம் எளிதில் அடையாளம் காண முடியாது. தீய ஆவியின் ஏவலை நான் நேரடியாக பார்த்த மூன்று சம்பவங்களைக் (ஒன்று பெங்களூரில் நடந்தது, மற்றொன்று மகராஷ்டிர மானிலத்தில் நடந்தது, மூன்றாவது மத்தியப் பிரதேசத்தில் நடந்தது ) குறித்து பல வருடங்களுக்கு முன்னரே எழுதி உள்ளேன். தீய அவைகளைப் பற்றி எனக்கு அப்போது அதிகம் தெரியாது. இந்தக் கட்டுரை எங்கோ கிளம்பி எங்கோ செல்வது போன்ற பிரமையைத் தரலாம். ஆனால் இதனுடன் தூரமாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட சில விஷயங்களை நாம் முதலில் அறிந்து கொண்டால்தான் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதினால் இதை மூன்று அல்லது நான்கு பாகங்களாக பல விஷயங்களை உள்ளடக்கி வெளியிடுகிறேன். ஆகவே இதில் கூறப்பட்டு உள்ள அனைத்தையும் ஒரே கட்டுரைப் போல படிக்க வேண்டும். தீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று போன்றவற்றைக் குறித்து பல்வேறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. தீய ஆவிகள், பில்லி, சூனியம், கருப்பு, காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் பற்றி விவரிக்கும் முன் அவற்றை பிரயோகிக்க தேவையான மூலாதாரமான சக்தியைத் அவற்றுக்குத் தருவது எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சக்தியைத் தரும் மந்திரங்களின் மூலமே நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதமே என்பதே உண்மை .
வேதங்கள் படைக்கப்பட்டதின் காரணம் மனித குல மேம்பாட்டிற்கும் அவர்களை நல் வழிப்படுத்தவுமே என்பது நம்பிக்கை. வேதங்களைப் படைத்தது பிரும்மா என்றும், இல்லை அதைப் படைத்தது பரப்பிரும்மமாக இருந்த சிவபெருமானே என்றும் இரண்டு விதக் கருத்துக்கள் உள்ளன. 'பிருஹடரன்யகோபனிஷத்' எனும் நூலின்படி வேதங்கள் பரபிரும்மனின் மூச்சுக் காற்றே என்றும் அவை தனியாக படைக்கப்பட்டது அல்ல என்றும் கூறுகிறது. வேதங்கள் மிக மிகப் பழமையானது. அதன் காலம் தெரியவில்லை. 1000-500 BCE காலத்தை சேர்ந்ததாக கூறப்படும் வேதங்களை முதலில் பிரும்மாவின் மகனாக கருதப்படும் வேத வியாசரே சீரமைத்து அர்த்தங்களைத் தந்தாராம். அதன் பின் அதற்கு மந்திர உச்சாடனைகளைத் தந்து அந்த வேத மஹா நூல்களை சப்த ரிஷிகள் எனக் கருதப்பட்ட ஏழு ரிஷி முனிவர்கள் இயற்றியதாக கூறுகிறார்கள்.
அதர்வ வேதத்தை விளக்கும் ஒரு புத்தகம் அந்த வேதங்களில் நான்காவதான அதர்வ வேதத்தை பிரும்மாவின் உடலில் இருந்து வெளி வந்தவர்களான அதர்வன் என்ற ரிஷியும், அக்னியையே பெரும்பாலும் வணங்கி வந்த அங்கீரஸ் என்ற முனிவரும் சேர்ந்து இயற்றி உள்ளதாகவும், அந்த வேதத்தில்தான் இயற்கையைக் கட்டுப்படுத்தி ஒருவர் நினைக்கும் விதத்தில் அதை சற்று நேரம் மாற்றி வைத்து இருக்கக் கூடிய மந்திர சித்திகளைக் தரக் கூடிய விஷயங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதே வேதத்தில் மந்திர தந்திரங்களினால் ஏற்படும் தீமைகளை விலக்கிக் கொள்ளவும் மந்திரங்கள் உள்ளனவாம். ஆயுர்வேத சிக்கிச்சைக்கான வழி முறைகளும் உள்ளனவாம். ஆனால் இந்த வேதத்தை அனைவராலும் எளிதில் சித்தி கொள்ள முடியாது. அதைக் கற்றுக் கொள்ள முறையான ஒரு குரு தேவை. குருவிடம் இருந்து விசேஷமான காயத்ரி மந்ரோபதேசம் (இந்த காயத்ரி, அனைவரும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் அல்ல) பெற்றுக் கொண்டப் பின்னரே இந்த வேதத்தைப் பயில முடியுமாம். ஆகவே இந்த வேதத்தைப் பயின்றவர்களிடம் இருந்து மந்திர தந்திரங்களை பிரயோகிக்கும் முறைகளைக் கற்று அறிய முடியும். ஆனால் மஹா வேதமான அதர்வனாவை கற்றறிந்து அவற்றின் மூலம் மந்திர உச்சாடனைகளை முறையாகப் பயன்படுத்தினால் அதன் மூலம் மனித மேம்பாட்டுக்கு பல விதங்களிலும் உதவிட முடியும். சித்திகளைத் தரும் மந்திரங்கள் என்பது என்ன? சித்திகளை அடைய அதர்வன் வேதம் மட்டும் போதுமா? இல்லை பல்வேறு சக்தி தேவதைகள் மற்றும் துர்தேவதைகளை உபாசனம் செய்து சக்தியைக் அடைய முடியுமா? நமது சாஸ்திரங்களில் பல்வேறு ஆராதனை முறைகள், பூஜை முறைகள் போன்றவை கூறப்பட்டு உள்ளன. அவற்றில் காணப்படும் மந்திரங்களை உச்சரித்து நமது தெய்வங்களை வழிபடும்போது நமக்கு பல சித்திகள் கிடைக்கின்றன. அப்படி என்றால் பல புத்தகங்களில் காணப்படும் மந்திரங்களை தினமும் படித்து, அவற்றைக் ஓதி தெய்வத்தை பூசித்து மந்திர சித்தியை அடைய முடியுமா? ஆலயங்களிலும், வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் ஓதப்படும் மந்திரங்கள் மூலம் நாம் சித்திகளைப் பெற முடியுமா? அது முடியாது. காரணம் மந்திரங்களின் தன்மை மாறுபட்டவை. சில மந்திரங்கள் ஆலயங்களில் ஓதப்படவே அமைக்கப்பட்டு உள்ளன சில மந்திரங்கள் ஹோமங்கள், பூஜைகள் போன்றவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டவை சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்ய ஏற்படுத்தப்பட்டவை சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்தப்பின் அவற்றை ஆட்டு விக்க ஏற்படுத்தப்பட்டவை சீல மந்திரங்கள் வீடுகளில் நடைபெறும் சுப மற்றும் அசுப காரியங்களுக்காக ஏற்பட்டவை சில மந்திரங்கள் ஒருவருக்கு தனித் தன்மையில் சித்தி கிடைக்க மற்றும் அனுகூலங்களைப் பெற உதவும் சில மந்திரங்கள் மனித குல மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் உள்ளன. இப்படியாக உள்ள மந்திரங்களில் ஆலயங்களில் ஓதப்படும் மந்திர ஒலிகள் அந்தந்த ஆலயத்தில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே கூடுதல் சக்தியைத் தரும். அவற்றை மெருகேற்றும். அந்த மந்திரங்களை ஓதும் பண்டிதர்களுக்குக் கூட மந்திர சித்தி கிடைக்காது. காரணம் அந்த மந்திரங்கள் குறிப்பிட்ட சில காரியங்களை மட்டுமே செய்யக் கூடியவை.
ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு ஆவாஹன தேவதை உண்டு. அந்த தேவதைகளிடம் லட்சக்கணக்கான அடிமை தேவதைகள் உண்டு. அந்த அடிமை தேவதைகளிடம் அடிமை அணுக்கள், அதாவது படைவீரர்கள் உண்டு. அந்த அடிமை தேவதைகள் மற்றும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு பணி புரியுமாறு அமைக்கப்பட்டு உள்ளவை. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேவதைப் பட்டாளங்களும் உயிர் அணுக்களும் உண்டு. அவை அந்த தெய்வத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. ஒரு தெய்வத்துக்கு பல அவதாரம் இருந்தால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் குறிப்பிட்ட தேவதைப் பட்டாளம் உண்டு. அந்த பட்டாள தேவதைகள் ஒரு குறிப்பிட்ட தெய்வ ஆலயத்தில் சுற்றித் திரியும் என்பது மட்டும் அல்ல எங்கெங்கே அந்த தெய்வம் ஆராதிக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் அந்த தெய்வத்தை முன் நிறுத்தி, ஹோமங்கள் போன்றவை நடைபெறுமோ அங்கெல்லாம் லட்சக் கணக்கில் குறிப்பிட்ட தெய்வத்தின் ஆவாஹன தேவதையிடம் உள்ள அந்த தேவதைப் பட்டாளம் பகுதி பகுதியாகப் பிரிந்து சென்று அந்த குறிப்பிட்ட தெய்வத்தை சுற்றித் திரியும். உதாரணமாக ஒரு ஆலயத்திற்குள் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலை இருந்தால் அது வைக்கப்பட்டு உள்ள அந்த கருவறைக்குள்ளேயே அவை சுற்றிக் கொண்டு இருக்கும். அவை நம் கண்களுக்குத் தெரியாது. உயிரணுக்களைப் போல சிறிய அளவிலேயே இருக்கும். அந்த தேவதைகளின் பணி என்ன ?
ஆலயங்களுக்குள்ளும், குறிப்பிட்ட கடவுளையும் எப்போதுமே சுற்றிக் கொண்டு இருக்கும் அந்தக் கடவுட்களின் அடிமை தேவதைகள் ஒவ்வொரு ஆலயத்திலும், ஹோமங்களிலும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் கல்லாக உள்ள சிலைக்கு உள்ளே எடுத்துச் செல்லப் படுகின்றன. கல்லுக்குள் எப்படி ஒரு உயிர் நுழைய முடியும்? கடவுளுக்கும் இருப்பது ஒரு ஜீவன் அல்லது ஆத்மாதானே, அது ஒரு ஆலயத்தில் இருந்து விட்டால் அந்தக் கடவுள் வேறு எங்குமே இருக்க முடியாதா? எப்படியும் நாம் நினைக்கலாம். இதுவும் நல்ல கேள்வியே ! தெய்வம் என்பது ஒரு ஆத்மாவைக் கொண்டு ஒரு உயிராக பிறந்தது அல்ல. அவற்றுக்கு உருவம் இல்லை. பிரவாஹம் மட்டுமே உண்டு. அதாவது கண்களில் படாத பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை தன் வட்டத்தில் வைத்துக் கொண்டு உள்ள பந்து போன்ற ஒரு நிலை. ஆனால் அந்த நிலை தனித்தன்மை வாய்ந்தது. நாம் எப்படி அதை கற்பனை செய்து பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட உருவில் நமக்கு முன் தோன்றும். அந்த நிலையில் உள்ள ஒவ்வொரு தெய்வமும் தன்னிடம் உள்ள பல லட்சக்கணக்கான அணுக்களில் தனது சக்தியை செலுத்தி எங்கெங்கு தன்னை ஆராதித்து பூஜைகள் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றில் சிலவற்றை அனுப்பி வைக்கும். தோண்டத் தோண்ட தங்கம் என்பார்களே, அப்படி அதனிடம் உள்ள உயிர் அணுக்கள் முடிவில்லாதவை. எங்கெல்லாம் தாம் சிலையாக ஆராதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் அவருடைய அந்த சக்தி அணுக்கள் சென்று அந்த சிலைக்குள் ஜடமாக அமர்ந்து கொள்ளும். அப்போது என்ன நடக்கின்றது?
வேண்டுகோட்களுக்காக ஓதப்படும் மந்திரங்கள் வெற்றிடத்தில் சுற்றித் தெரியும் அடிமை தேவதைகளினால் சிலைக்குள் உள்ள தெய்வங்களின் அனுக்களிடம் கொடுக்க அவை அவற்றை மேலே உள்ள ஆண்டவரிடம் கொண்டு சென்று கொடுக்க, அவர் அவற்றில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற அருள் புரிவார். அந்த அருளாசிகள் மீண்டும் அந்த சிலை வழியே வேண்டுபவர்களை வந்தடையும் என்பதை விளக்கும் படம். சிலைக்கு வெளியில் ஓதப்படும் மந்திரங்களை அந்த சிலைக்குள் உள்ள தெய்வத்தின் அணுக்கள் எப்படி கிரகித்துக் கொள்கின்றன? அந்த ஆலயத்திலும், ஹோமங்கள், பிற பூஜைகள் போன்றவை நடைபெறும் இடங்களில் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலையை நமது கண்களுக்குப் புலப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அடிமை தேவதைகள் ( உயிர் அணுக்கள் அங்கு காவலுக்கு சுற்றிக் கொண்டு இருக்கும் பணியை மட்டுமே செய்கின்றன) அங்கு ஓதப்படும் மந்திரங்களை கிரகித்துக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு அந்த தெய்வத்தின் உடலுக்குள் புகுந்து அங்கு உள்ள தெய்வ அணுக்களிடம் வைத்து விட்டு வெளியில் வரும். மீண்டும் மீண்டும் மந்திரங்கள் ஓதி முடியும் வரை அதையே செய்யும். சிலையில் அமர்ந்து கொண்டு உள்ள உயிர் அணுக்கள் அவற்றை உடனடியாக தமது தெய்வத்திடம் அனுப்பி வைக்க, அவர் அந்த மந்திர ஒலியின் தன்மைக்கேற்ப அந்த உயிர் அணுக்களின் சக்தியை மேன் மேலும் பெருக்குவார். அது மட்டும் அல்ல, அவற்றுக்கு தன் சார்பில் செய்ய வேண்டிய சில விசேஷ சக்திகளையும் அளிப்பார். இப்படியாக சிலைக்குள் உள்ள தெய்வத்தின் உயிர் அணுக்கள் சக்திகளைப் பெற்றுக் கொள்ளும். அந்த உயிர் அணுக்கள் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப முடிவு எடுத்து தமது தெய்வத்திடம் வேண்டப்படும் அந்த வேண்டுகோளை அவர் சார்பில் நிறைவேற்றியப் பின் அவரிடம் உடனடியாக தாம் செய்ததை அவரிடம் தெரிவிக்கும். இதை ஒரு விதத்தில் பார்த்தால் நாம் கூறுகிறோமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் மின் ஒலி மற்றும் ஒளி அலைகள் என்று, அதே தத்துவம்தான். ஆகவேதான் ஒரு சிலையை ஆவாஹிக்க, ஆவாஹிக்க அந்த சிலையின் சக்தி கூடுகிறது என்கிறோம். நாம் வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ' நீ உரத்துக் குரலில் வேண்டினால் அது சிலையின் காதில் சென்று விழவா போகின்றது'. அது தவறான கருத்து . நாம் குரல் கொடுத்துக் கூறுவதை நமது கண்களுக்குத் தெரியாத தேவதைகள் அந்தந்த தெய்வத்திடம் மேலே கூறியபடி எடுத்துச் சென்று வைக்கும்போது, மேலுலகில் உள்ள தெய்வம் அதை உணரும். அதற்கேற்ப அந்த தெய்வம் நமக்குத் தேவையான நல்லதை செய்யும். இது எதற்காக கூறப்படுகிறது என்றால் மந்திரங்களில் சக்தி எப்படிப்பட்டது, அது எப்படி கல்லுக்குள்ளேயும் ஊடுருவ முடிகின்றது என்பதை எடுத்துக் காட்டவே. கல்லுக்குள்ளேயே ஊடுறுவ முடிந்த மந்திர சக்திகள் மனிதர்களுக்குள் ஊடுறுவ முடியாதா? இதுவே பில்லி -சூனிய- தீய ஆவிகளின் பின்னணி ! மந்திரங்களின் இப்படிப்பட்ட ஊடுருவும் சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டே மந்திர சக்தியைப் ஒருவர் பெறுவார். அப்படி மந்திர சக்திகளைப் பெறுபவர் எதற்காக அவற்றை பெற நினைக்கின்றார்? சிலர் தாம் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக தெய்வங்களை ஆராதிக்கின்றார்கள் சிலர் தனக்கு தனிப்பட்ட முறையில் ஆன்மீக சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக சக்தி தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் சில ஆன்மீகவாதிகள் மனித குல மேம்பாட்டிற்கான வழி முறைகளுக்குப் பயன்படுத்த அந்த தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் தீய வழிகளில் பயன்படுத்த (வியாபார நோக்கம்) தேவதைகளை வசியம் செய்கிறார்கள் ஆமாம் ஒருவருக்கு சக்தியைத் தருவது தெய்வமா இல்லை அவரது ஆவாஹன - அடிமை தேவதைகள்- அணுக்கள் போன்ற தேவதையா? எந்த ஒரு தெய்வமும் எவருக்குமே நேரடியாக தானே வந்து அவர்களுக்குள் அமர்ந்து கொண்டு சக்தியை தருவது இல்லை. அப்படி நடக்கும் என்றால் அவரவர் நேரடியாக தெய்வங்களின் சக்தியைப் பெற்று விடுவார்கள். அப்படி என்றால் ஒருவர் சக்தியை எப்படிப் பெறுகிறார்கள்? அதற்கு சில விதி முறைகள் உள்ளன. முதலில் இதைப் படியுங்கள்.
இந்த பிரபஞ்சத்தில் விண்வெளியில் அநேக ஆவிகள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன்கள் உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. அதற்கு சாதாரணமாக ஒரு வருட காலம் ஆகும். அதாவது அதற்கு முதலாம் ஆண்டில் திதி கொடுத்தப் பின்னர்தான் அது மறு பிறப்பு எடுக்கும் என்று கூறுகிறார்கள். அதுவரை அவை ஆவிகள் எனும் ஆத்மாக்களாக சுற்றித் திரியும். இப்படி சுற்றித் திரியும் ஆத்மாக்களையும் கட்டுப்படுத்தி வைக்க லட்சக்கணக்கான காவல் தேவதைகள் படைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு அடிமை தேவதைகள் மற்றும் படை அணுக்கள் உண்டு. ஒவ்வொரு தேவதையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான ( இது பத்து இருபது போன்ற கணக்கில் அல்ல, பல லட்சக் கணக்கில் வரும்) ஆத்மாக்களை தன் வசத்தில் வைத்து இருக்கும். அந்த தேவதைகள் யார் தெரியுமா? பல்வேறு தெய்வங்களின் வசம் உள்ள அதே தேவதைகள்தான்!! உதாரணமாக சிவபெருமானை ஆராதித்து மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் சிவபெருமானை சேர்ந்த குழு தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஒரு உதாரணத்துக்காக கூறப்பட்டது. அது போல பிற தெய்வங்கள், தேவதைகளை ஆராதித்தவர்களின் ஆத்மாக்கள் அந்தந்த தெய்வங்களின் தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருந்தவாறே மேலுலகம் நோக்கிப் பயணிக்கும். மரணம் அடைந்தவர்களின் ஆத்மா குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளாக உள்ள ஆத்மாக்கள் அதற்கான பன்னிரண்டு நாட்கள் காரியம் முடிந்ததும், பதிமூன்றாம் நாள்-சுபஸ்வீகாரம் என்று கூறுகிறார்களே அன்றைக்கு மேல் உலகில் சென்று மறு பிறப்பு எடுத்து விடும் என்பார்கள். ஆனால் அது சரியான கூற்று அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவை மேலுலகம் செல்லும் என்பது வரை மட்டுமே சரியான கருத்து. அதற்கு முன்னர் அவை பன்னிரண்டு பந்த நிலைகளைக் கடக்க வேண்டும். அதற்குப் பின்னரே அது மேல் உலகிற்குச் சென்றப் பின் அதன் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு அதற்கு உரிய அடுத்த ஜென்மம் முடிவு செய்யப்படும். அதற்கு ஒரு வருட காலம் ஆகும். அந்த காலத்தில்தான் அதாவது ஒரு வருடகாலத்துக்கு அவை பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டிய பயணத்தில் இருக்கும். ஒரு வருட காலமா? பல நிலைகள் என்றால் என்ன? அது ஏன் தேவை ? மேலுலகத்துக்குச் செல்லும் ஆத்மாக்கள் பதினோரு நிலைகளை கடந்து பன்னிரண்டாவது நிலையை கடந்தப் பின்னரே அவற்றின் அடுத்த ஜீவனைப் பற்றிய முடிவு எடுக்கப்படுகின்றது. அப்போது (ஒரு வருடத்துக்குப் பின்) அந்த ஆவிகளின் சொந்தக்காரர்கள் அதற்கு வருடாந்திர திதி கொடுத்தப் பின்னரே அது மனித பந்தங்களின் நினைவுகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுகின்றது. அது என்ன பன்னிரண்டு பந்தங்கள் எனும் படிகள் ? முதலாவது பந்தம் அந்த ஜீவன் மரணம் அடைந்த வீடு. இரண்டாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை {தாயார் (சக்தி என்பவள் பெண்ணினம் என்பதினால் முதலில் பெண்ணினத்தையே ஏற்கின்றார்கள்)} உருவாக்கியவரின் (தாயாரின் தந்தை- தாத்தா) பந்தம் மூன்றாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தாயார்) உருவாக்கியவரின் (தாயாரின் தாயார்- பாட்டி) பந்தம் நான்காம் பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவரை (தந்தை) உருவாக்கியவரின் (தந்தையின் தந்தை- தாத்தா) பந்தம் ஐந்தாம் பந்தம் அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தந்தை) உருவாக்கியவளின் (தந்தையின் தாயார்- பாட்டி) பந்தம் ஆறாம் பந்தம், அந்த ஜீவனை பெற்றேடுத்தவளின் பந்தம் (தாயார் ) ஏழாவது பந்தம் அந்த ஜீவனை பெற்றேடுத்தவரின் பந்தம் (தந்தை ). எட்டாவாது பந்தம் அந்த ஜீவனின் சகோதரிகள். சொந்த சகோதரி இல்லை என்றாலும் அவருடைய உடன் பிறவா சகோதரிகளும் -சித்தப்பா, பெரியப்பா மகள்கள், மாமனின் மகள்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். ஒன்பதாவது பந்தம், அந்த ஜீவனின் சகோதரர்கள். சொந்த சகோதரர்கள் இல்லை என்றாலும், அவருடைய உடன் பிறவா சகோதரர்களும் -சித்தப்பா, பெரியப்பா மகன்கள் , மாமனின் மகன்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பத்தாவது பந்தம், அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவர். ஒரு வேளை அந்த ஜீவன் திருமணம் ஆகாதவர்கள் என்றால் அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவராக பூர்வ ஜென்மத்தில் இருந்த உயிரற்ற ஆத்மாவை கணக்கில் கொள்வார்கள். பதினொன்றாவது பந்தம், அந்த ஜீவனின் மகள்கள். அவளுடையக் குழந்தைகள் . அந்த ஜீவனுக்கு மகள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகள்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பன்னிரண்டாம் பந்தம், அந்த ஜீவனின் மகன்கள் மற்றும் அவரது குழந்தைகள். அந்த ஜீவனுக்கு மகன்கள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகன்கள் - இந்தக் கணக்கில் வருவார்கள். இப்படியாக அந்த ஜீவன் பன்னிரண்டு பந்தங்களைக் கடந்து விட்டு பதிமூன்றாம் நிலையை எட்டும்போது அவருக்கு வருடாந்திர திதி கொடுக்கப்படும்போது அவருடைய ஜீவன் முக்தியை அடையும். ஆகவே எந்த ஒரு ஜீவனும் ஒரு வருடத்திற்கு வேறு ஜென்மம் எடுப்பது இல்லை. அந்த ஜீவன்கள் அந்த பன்னிரண்டு பந்த வளைவுகளையும் கடந்து மேலுலகை அடைய வேண்டும். ஒவ்வொரு பந்த எல்லைக்குள் நுழையும் போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வாயில் வழியாகத்தான் அது அடுத்த பந்தத்திற்குள் நுழைய இயலும். ஏன் எனில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் அதை சார்ந்த உறவினர்களுக்கு பாத்யை இருக்கும். ஆகவே மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் ஜீவன்கள் அவரவர் பந்த வாயில் வழியேதான் செல்ல முடியும். ஒவ்வொரு படியிலும் அந்த நுழை வாயிலை கண்டுபிடிக்க அந்த ஜீவனுக்கு 28 முதல் 30 நாட்கள் ஆகும். தோராயமாக ஒவ்வொரு மாதமும் அந்த ஆத்மாவின் திதி வரும் நாள் அன்று அதை அவை கண்டு பிடித்து அடுத்த பந்தத்தின் படியில் நுழையும். ஆகவே ஒரு ஜீவன் முப்பது நாட்கள் அந்த பந்த வளைவுக்குள் சுற்றித் திறந்தவாறு இருந்தபடியேதான் அந்த வாயிலை அடையும். இதற்கும் தீய ஆவிகளுக்கும் என்ன சம்மந்தம் என்கின்றீர்களா? அதுதான் முக்கியமான கேள்வி. விண்வெளியில் பந்தங்களின் பாதையை சுற்றி பெரும் விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், துர் தேவதைகள் என பலவாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் அவற்றினால் அந்த வெற்றிடத்தில் ஒருவரை ஒருவர் தொட முடியாது. அங்குள்ள தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்பு கொள்ள முடியும். அது போல அடுத்த பிறவியை எடுக்க காத்துக் கொண்டு இருக்கும் அங்குள்ள நல்ல ஆவிகள் அங்குள்ள நல்ல தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்புக் கொள்ள முடியும். இதுவும் தெய்வ நியதி. அதே சமயத்தில் தீய ஆவிகள் மற்றும், தேவதைகள் போன்றவர்கள் மட்டும் அவரவர்களின் பந்தப் பாதையிலும் செல்ல முடியும். ஆனால் அடுத்தப் பிறவியை எடுக்கக் காத்திருக்கும் நல்ல ஆவிகளினால் அந்த பந்தப் பாதை எவற்றிலும் நுழைய முடியாது. ஆகவே நல்ல தேவதைகள், மற்றும் தீய ஆவிகள் போன்றவை சில பந்தப் பாதையில் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அனைத்து தீய ஆவிகளுமே அந்த பந்தப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் என்பது கிடையாது. யமராஜரிடம் தண்டனைப் பெற்று தீய ஆவிகளாக மாறி குறிப்பிட்ட காலம்வரை இருக்க வேண்டிய தீய ஆவிகள் தமது தண்டனைக் காலம் முடியும்வரை வெற்றிடத்திலேயே கூட சுற்றிக் கொண்டு இருக்கும். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் அந்த விண்வெளி வெற்றிடத்திற்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மா செல்ல முடியாது. மரணம் அடைந்தவர்களின் ஆத்மா முதலில் பந்தப் பாதைக்குள்தான் நுழைய முடியும். பன்னிரண்டு பாதைகளையும் கடந்து விட்டு பதிமூன்றாவது இடத்தில் அது பெறும் தண்டனைக்கு ஏற்பவே அவை வெற்றிடத்துக்குள் நுழைய முடியும். ஒவ்வொரு பந்தங்களின் பாதையும் மூன்று வழிப் பாதை ஆகும். ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பாதைகள் தொடர்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஒவ்வொரு மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களும் மேலுலகை நோக்கி நல்ல நினைவுடன் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள முதல் பாதை வழியே போய்க் கொண்டு இருக்கும்போது வழி முழுவதும் அதன் பக்கத்துப் பாதையில் சூட்ஷுமத்தில் சுற்றித் திரியும் தீய ஆவிகள் அவற்றை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். அந்த தீய ஆவிகள் யார்? அவை தம்முடைய கர்ம வினையினால் மேலும் பிறவி எடுக்க முடியாமல் போய் தீய ஆவிகளாக சுற்றித் திரிபவை. பல வருடங்களுக்கு அவை அந்த நிலையில் அங்கு சுற்றித் திரியும். அடுத்து ஏற்கனவே மேலுலகம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் சில ஆத்மாக்கள் வழி தவறிப் போய் தீய ஆவிகளிடம் சிக்கிக் கொண்டவை. மற்றவை அகால மரணத்தை தழுவி தீய ஆத்மாக்களாக மாறி மேலுலகம் சென்று கொண்டு இருந்தவை. இந்த தீய ஆவிகள் அனைத்தும் இரண்டாவது பாதையில் செல்லத் துவங்கிவிடும். இப்படியாக நல்ல ஆத்மாக்கள் செல்லும் பாதையின் பக்கத்துப் பாதையிலேயே சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள், நல்ல ஆத்மாக்களை தொடர்ந்து தம்முடையப் பாதையில் வருமாறு அழைத்துக் கொண்டே செல்லும். மூன்றாம் பாதை அகன்றப் பாதை. அதில் நல்ல தெய்வீக தேவதைகளும், அவர்களின் அடிமை தேவதைகளும், படையினரும் உண்டு. அவை மேலுலகம் சென்று கொண்டும், கீழ் உலகிற்கு வந்த வண்ணமும் இருக்கும் பாதை அது. இப்படியாக மூன்று பிரிவை சேர்ந்த ஆத்மாக்கள், ஆவிகள் மற்றும் தேவதைகள் என்பவை அந்த மூன்று வழிப் பாதையில் சென்று கொண்டு இருக்கும். தீய ஆவிகள் மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்களை பக்கத்துப் பாதையில் இருந்து அழைத்துக் கொண்டும், பயமுறுத்திய வண்ணமும் , அவற்றின் கவனத்தை திசை திருப்பிய வண்ணமும் அவற்றுடன் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும். நல்ல ஆத்மாக்களைப் போல நடித்துக் கொண்டே அவை தம்முடன் அந்தப் பாதையில் வருமாறு முதல் பாதையில் செல்லும் ஆத்மாக்களை அழைக்கும். ஆனால் அவற்றால் அந்த ஆத்மாக்களை தொட முடியாது. முன்னரே கூறியபடி மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் குறிப்பிட்ட பந்தங்களின் நுழை வாயில் வழியேதான் அடுத்த பந்த வளைவுக்குள் செல்ல முடியும். அதற்கான வாயிலைக் கண்டு பிடிக்க அதற்க்கு முப்பது நாட்கள் ஆகும். அதே சமயம் மந்திரவாதிகள் செலுத்தும் மந்திரங்கள் இரண்டாவது வளைவுக்குள் தம்முடையக் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகளுடன் தொடர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனாலும் அந்த மந்திரங்களினால் நல்ல ஆத்மாவை அங்கிருந்து கொண்டு கைப்பற்ற முடியாது. காரணம் மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாதை உண்டு. அவை அனைத்துமே அதில்தான் சென்று கொண்டு இருக்க முடியும். அப்படிச் செல்கையில் அந்த வழியை தவற விட்டு பக்கத்தில் உள்ள பாதையில் அவை சென்று விட்டால் மட்டுமே அவை தீய ஆத்மாக்களின் கைகளில் விழுந்து சிறைபட்டு, அவற்றின் அடிமைகளாகி விடும். இரண்டாம் வளையத்துக்குள் சுற்றித் திரியும் தீய ஆவிகளை மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா, அந்த தீய ஆவிகளின் துணைக் கொண்டே முதலில் மேலுலகை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாவை தடம் புரளச் செய்ய தேவையானவற்றை மந்திரங்கள் மூலம் செய்து கொண்டு இருப்பார்கள். நல்ல ஆத்மாக்கள் எப்போது தடம் புரண்டு செல்கின்றன? ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு வளையத்துக்குள் முப்பது நாட்களுக்குள் தான் செல்ல வேண்டிய நுழை வாயிலை கண்டு பிடிக்கும். ஆகவே அந்த நாளை நெருங்கும் முன்னரே அதைத் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள் அவற்றின் கவனத்தை திசை திருப்பி விட முயற்சிக்கும். அதில் ஏமார்ந்து போகும் சில நல்ல ஆத்மாக்கள் சில நேரங்களில் தனது வாயிலை கண்டு பிடிக்க முடியாமல், நுழை வாயிலை கடந்து சென்று விடும். இப்படியாக முப்பது நாட்களுக்குள் தாம் செல்ல வேண்டிய பந்த நுழைவாயிலை கண்டு பிடிக்க முடியாமல் போன ஆத்மாக்களினால் அதன் பின்னர் அதன் நுழை வாயிலைக் காண முடியாது. ஆகவே கடக்க வேண்டிய நுழை வாயிலைத் தவற விட்டு விட்ட நல்ல ஆத்மாக்கள் இரண்டாவது பாதையில் போய் விழுந்து விடும். இது தவிர்க்க முடியாதது . இது நியதி. இப்படியாக தீய ஆவிகளிடம் விழுந்து விடும் நல்ல ஆத்மாக்கள் அந்த பாதைக்குள் நுழைந்த உடனடியாக தீய ஆத்மாக்களாகி விடுகின்றன. அந்த நேரத்தில்தான் மந்திரவாதிகளின் கட்டுக்குள் உள்ள தீய ஆவிகள் அப்படி விழும் ஆத்மாக்களை இழுத்துக் கொண்டு பாதையின் வெளியில் சென்று விடும். இப்படியாக தீய ஆவிகளினால் வெளியில் இழுத்து வந்து விடப்பட்டு விட்ட அந்த ஆத்மாக்களை மந்திரங்களை ஏவி தம்மிடம் சிறை வைத்து விடுவார்கள். அதன் பின் தமக்கு எப்போது தேவையோ அப்போது அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள். விண்வெளியில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் தீய ஆவிகளில் தாம் எப்படியாவது மனிதப் பிறவியில் மீண்டும் சென்று விட வேண்டும் எனத் துடிக்கும் ஆவிகளும் உண்டு. ஆகவே அப்படிப்பட்ட தீய ஆவிகள் வேண்டும் என்றே அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளின் கட்டுப்பாட்டில், தாமாகவே சென்று விழும். அப்படி வலிய வந்து தன்னிடம் அடைக்கலம் ஆகும் தீய ஆவிகளை அந்த துர்தேவதைகளை ஆராதிக்கும் மந்திரவாதிகள் அதனை வேண்டிக் கொண்டு அவற்றை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். காரணம் துர்தேவதைகள் மூலம் தம்மிடம் விழுந்து விட்ட ஆவிகளை எப்போது வேண்டுமானாலும் மனித உடல்களுக்குள் சென்று புகுந்து கொண்டு வருமாறு கூற முடியும். அதற்காக அதிக மந்திர பிரயோகங்களை செய்ய வேண்டியது இல்லை. அதனால் விரையமாகும் மந்திர சக்தியை தக்க வைத்துக் கொள்ளலாம்.
மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் தமக்கு விதிக்கப்பட்டு உள்ள பாதை வழியே சென்று கொண்டு இருக்கும்போது சந்தர்ப்பவசத்தினால் அவற்றில் சில எதனால் தீய ஆவிகளாகி விடுகின்றன ? அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன். பதிமூன்றாம் பாதைக்குள் நுழைந்தப் பின்னர்தானே ஆத்மாக்கள் அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைப் பெறும் எனும்போது, அங்கு செல்லும் முன்னரே எப்படி வழியில் தீய ஆவிகளாக மாறி விட முடியும் விடும் என்கிறீர்களா? இதைப் படியுங்கள். பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன் சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்பு தகவல்களைக் கூற வேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத வேண்டி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது. ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின் இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன. அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம சாபம் பெற்ற அவற்றுக்கு 'பூமியில் மனிதப் பிறவி எடுத்து மரணம் அடைந்து பந்தப் பாதையில் செல்லும்போது தீய ஆவியாக மாறி இத்தனைக் காலம் அவதிப்பட வேண்டும்' என்ற பூர்வ ஜென்ம தண்டனைக் கிடைத்து இருக்கும். அதற்கேற்பவே அவை நடு வழியிலேயே இப்படி தீய ஆவிகளாகி விடுகின்றன. அந்த துணை பிரிவு எதற்காக உள்ளது? ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அப்படிப்பட்ட தண்டனையை ஆத்மாக்கள் பெறுகின்றன. அது என்ன பெரிய குற்றம்? ஒரு ஜென்மத்தில் அவை குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியக் குற்றமே அது. குலதெய்வ அவமரியாதை அத்தனைப் பெரிய குற்றமா? அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா? ஆமாம். அதைப் பற்றி ''தர்மராஜா கி கஹானியான்'' என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கதையை படிக்க வேண்டும். அந்தக் கதையில் நடுவில் வரும் பகுதி இது - "....... மிகவும் பக்தி வாய்ந்த, எப்போதுமே கடவுள் சிந்தனையுடனே இருந்த ஒரு மன்னனின் மரணத்துக்குப் பிறகு அவன் ஆத்மா யமலோகத்துக்கு (ஆறு ஜென்மங்களுக்குப் பிறகு) சென்றது. அதற்கு முன்னர் அந்த ஆத்மா ஆறு ஜென்மங்களாக தீய ஆவியாகவும், துர்தேவதையாகவும் இருந்து எட்டாவது ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவே பிறந்து மரணம் அடைந்து இருந்தது. இப்படியாக எட்டாவது ஜென்மத்தில் யமலோகத்துக்குச் சென்ற அந்த மன்னனின் ஆத்மா மனம் ஒடிந்துப் போய் கண்ணீர் மல்க யமதர்மராஜரிடம் கேட்டது 'தர்மராஜா, நான் ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் பெரும் தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்தும், கொடைகளை தாராளமாக செய்தும், பூஜை புனஸ்காரங்களை செய்தும் எனது வாழ்க்கையைக் கழித்தேன். ஆனாலும் அந்த ஜென்மத்தில் மரணம் அடைந்து இங்கு வந்து கொண்டு இருந்தபோது வழியில் நான் தீய ஆவியாகிவிட வேண்டி இருந்தது. ஆறு ஜென்மங்கள் நான் துர்தேவதையாக அலைந்து, பல குடும்பங்கள் பாழடையக் காரணமாக இருந்து விட்டேன். நான் துர்தேவதையாக இருந்தபோது செய்த பாவங்களுக்காக என்னுடைய வம்சாவளியினரே பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள் . அத்தனை தானம் செய்தும், தெய்வ பக்தி கொண்டும் இருந்த நான் ஏன் துர்தேவதை ஆக வேண்டி இருந்தது? நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே! அப்படி இருந்தும் எனக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது? நியாயமாகப் பார்த்தால் மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய்? நீ செய்தது முறையா?' அதைக் கேட்ட யமராஜர் கூறினார் ''மன்னனே, ஏழு ஜென்மங்களுக்கு முன்னாலும் நீ ஒரு மன்னனாகவே இருந்தாய். அப்போது நீ அளவற்ற புண்ணியங்கள் மற்றும் தானங்களும் செய்தாய். நீ வேண்டாத தெய்வங்கள் இல்லை. அதுவும் உண்மை. ஆனால் நீ அதே ஜென்மத்தில் நீ செய்த மிகப் பெரிய குற்றம் (இந்த ஜென்மத்துக்கு ஆறு ஜென்மத்தின் முன்னால்) நீ உன் குல தெய்வத்தைத் தவிர பிற தெய்வங்களை வழிபாட்டு பூஜித்ததே. குல தெய்வத்தை நீ ஒரு இரண்டாம் பட்ச தேவதையாகவே கருதி அதற்கு உரிய மரியாதைக் கொடுக்கவில்லை. நீ செய்த யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் என அனைத்திலும் நீ இந்த தெய்வம், அந்த தெய்வம் என எந்தெந்த தெய்வங்களை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தார்களோ அவற்றுக்கே பெரும் அளவில் மரியாதைகளைத் தந்தாய். அதற்குக் காரணம் நீ இன்னும் பெரும் செல்வம் மற்றும் பெரும் புகழை அடைய நினைத்தாய். ஒன்றை மறந்து விட்டாய் மன்னா ....என்ன யாகம், ஹோமம், பூஜை என இருந்தாலும், முதலில் நியதிப்படி வினாயகரை வழிபட்டப் பின், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் அருளைப் பெற்றுக் கொண்டுதான் மற்ற பூஜைகளைத் தொடங்க வேண்டும். நீ யாரை வேண்டுமானாலும் பூஜை செய்து வணங்குவதை உன் குல தெய்வம் தடுப்பது இல்லை. ஆனால், உன் குலத்தைக் காக்க என்று படைக்கப்பட்டு உள்ள குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவதை அது எப்போதும் ஏற்பதில்லை. நீயோ வேறு பல தெய்வங்களை வணங்கி இடையே இடையே குல தெய்வத்தை ஒரு சம்பிரதாயத்துக்காக வணங்கினாய். குலதெய்வம் என்பது உனக்கு தாய் மற்றும் தந்தையைப் போல. ஆகவே ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் குலதெய்வத்தை நீ இப்படி புறக்கணித்ததினால் அந்த குல தெய்வம் உன் வம்சத்தில் யாரையுமே தன்னை இனி வணங்க வேண்டாம் என உன் வம்சத்தை விட்டு விலகிக் கொண்டு விட்டது. ஆகவேதான் ஏழாவது ஜென்மத்திலும் குலதெய்வம் இல்லாத வம்சத்தை நீ சென்றடைந்து இங்கு வந்துள்ளாய். நானும் உன் குலதெய்வத்தைப் போல சில நியதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவரே. நான் வரும்போதே எனக்கு சில சட்ட திட்டங்கள் தரப்பட்டு விட்டன. அந்த நீதி மற்றும் தர்ம சாஸ்திரப்படி குல தெய்வத்தை அவமதித்தவர்கள் மரணம் அடைந்தப் பின் என்னிடம் வந்து தண்டனைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இங்கு வரும் வழியிலேயே ஆறு ஜென்மத்திற்கு தீய ஆவிகளாகி விடுவார்கள் என்பது விதியாக உள்ளது. அதற்குக் காரணம் குல தெய்வங்கள் என்பவை ஒரு சம்பிரதாய தெய்வங்கள் அல்ல. அவை பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று தெய்வங்களின் அவதாரங்களினால் சில காரியங்களுக்காக படைக்கப்பட்டவை. அவற்றின் கீழ் சில ஆத்மாக்கள் வம்சாவளியாக வாழ்ந்து கொண்டு இருக்கும். அந்த வம்சங்களை காத்து அவர்களுடைய கணக்கு வழக்குகளை அவை பரப்பிரும்மனிடம் தம்மைப் படைத்தவர்கள் மூலம் அனுப்புகின்றன குல தெய்வங்கள் . அந்தக் கணக்குகளே என்னிடமும் வருகின்றன. அவற்றை நான் தவிர்க்கவோ மாற்றவோ முடியாது. குலதெய்வம் யார் என்றே தெரியாமல் உள்ளவர்கள் தன்னை வணங்கவில்லை என்பதினால் குல தெய்வம் கோபம் அடைவது இல்லை. அடுத்த 13 வம்சங்களில் அது தன்னை தெரிந்து கொள்ளும் என்று அதற்குத் தெரியும். ஆனால் குல தெய்வம் யார் என்று தெரிந்தும் அந்த தெய்வத்தை இரண்டாம் நிலைக் கடவுளாக வணங்கி உதாசீனப்படுத்துவதை ஒரு போதும் குல தெய்வங்கள் மன்னிப்பது இல்லை. அதனால்தான் அந்த செயலை செய்பவர்கள் அடுத்த ஆறு ஜென்மங்கள் தீய ஆவிகளாக வாழ்ந்து கொண்டு ஆறு ஜென்மங்களைக் கழிக்க வேண்டும் என்பது நியதி உள்ளது. இது நான் படைக்கப்பட்டபோதே எழுதப்பட்டு உள்ள விதி. உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குலதெய்வத்தை நன்றாக அடையாளம் கண்டு கொண்டும் அவற்றை உதாசீனப்படுத்தியது என்பதற்காக கிடைத்த தண்டனை. அடுத்த ஆறு ஜென்மங்களையும் நீ இப்படித்தான் கழிக்க வேண்டும். வேறு வழி இல்லை. உன் குல தெய்வம் உன்னை விட்டு சென்றுவிட்டது. அதனால் என்ன வேறு தெய்வங்களை வணங்கினால் அது நம்மைக் காப்பற்றுமே என்று நினைக்கலாம். அது நடக்காது. அது கானல் நீரைப் போன்றது. குல தெய்வத்தை வணங்காதவர்கள் பிற தெய்வங்களை வணங்கி அவற்றின் அருளைப் பெற்றாலும் அவை வழிப்போக்கனைப் போன்றதே. மேலுலகம் வந்தாலும் அதை நான் ஏற்பது இல்லை. தீய ஆவியாக இருந்த உன் ஆறு ஜென்ம பாவக் கணக்கைப் பார்க்கும்போது, அதற்கான தண்டனையாக மீதி உள்ள ஆறு ஜென்மங்கள் பிறப்பு எடுத்து இங்கு வந்து மீண்டும் துஷ்ட தேவதையாக மாறி அதில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் பிறப்பு எடுத்து தீய ஆவியாகவே இருக்க வேண்டும் என்றே உள்ளது . இப்படியாகவேதான் மீதி உள்ள ஆறு ஜென்மங்களையும் நீ கழிக்க வேண்டும். அதனால்தான் முதல் ஜென்மத்தில் நீ குலதெய்வத்தை அவமதித்தக் குற்றத்துக்காக என்னிடம் வந்து தண்டனைப் பெரும் முன்னரே விதிப்படியே தீய ஆவியாக மாறி விட்டாய். 'அதற்கு மாற்று வழி இல்லையா' என்று மனமுடைந்து கேட்ட மன்னனின் ஆத்மாவிடம் தர்மராஜா கூறினார் ' அதன் வலிமையைக் குறைக்க ஒரே வழி, மீண்டும் பிறப்பு எடுத்ததும் உன்னுடைய குல தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டு முதல் பூஜையை அதற்க்கு செய்து கொண்டு இருந்தவாறு அதை தொடர்ந்து வணங்கிக் கொண்டே இரு. அதை விட்டு விடாதே. அதனால் அது தன் மனதில் தன்னை அவமதித்ததை எண்ணிக் கொண்டே இருக்காமல் கருணைக் கொண்டு அமைதியாகி விடும். அது உனக்கு ஆசிகளைக் கூறாவிடிலும், உன் வம்சாவளிகளுக்கு பாதிப்பையாவது ஏற்படுத்தாது. '' என்றார். குலதெய்வ உதாசீனத்துக்காக இத்தனைப் பெரிய தண்டனையா? குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா? அதற்காகவே தனி நியதி உள்ளதா என்பதையும் கேட்பவர்கள் அவற்றை உதாசீனப்படுத்துவது எத்தனைப் பெரிய குற்றமாக கருதப்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள கீழே உள்ளதைப் படியுங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை ஐந்து நிலைக் கடவுட்கள். மூலாதாரமான பரப்பிரும்மனையும் சேர்த்து ஆறு நிலைக் கடவுட்கள் உள்ளனர். குலதெய்வம் என்பது இந்த ஐந்து நிலைகளில் ஒரு நிலையில் உள்ளவை என்பதின் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டு உள்ளார்கள். (எப்படிப் பார்த்தாலும் குல தெய்வங்கள் மூன்று பிரிவுகளில் மட்டுமே உள்ளன. அவை பிரும்மா-விஷ்ணு மற்றும் சிவன் என்பவர்கள்) அதாவது இந்த உலகை தன் சக்தி மூலம் படைத்த பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா , விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளிவந்த அவதாரங்கள்தான். உண்மை என்னவென்றால் அவரவர் மனதுக்கு ஏற்ப அவரவருக்கு கிடைத்தக் காட்சியைக் கொண்டு ஒரு உருவம் பெற்றவர்கள். இப்படியாக ஒரு உருவம் பெற்றவர்களே குல தெய்வங்களும் . உண்மையில் அவர்கள் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவருக்கு தூதுவர்களாக உள்ளவர்கள். குலதேவங்களுக்கு என தனிப்பட்ட சக்திகள் எதுவும் இல்லை. அவை வைத்துள்ள அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனின் சக்திகளுக்கு உட்பட்டவையே. அவற்றையும் கொடுத்தது அவரே. படைப்புக்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்டப் பிரிவு உண்டு. அவை அந்தப் பிரிவில்தான் பிறவி எடுத்தும், மரணம் அடைந்தும் பதிமூன்று ஜென்ம காலத்தைக் கழிக்க வேண்டும். அப்போது அந்த பிரிவிற்கான தலைவரையே அவர்கள் வழிபாட்டு வணங்க வேண்டும். அந்தப் பிரிவின் தலைவரே குல தெய்வம் என்பது. ஆகவேதான் அந்தப் பிரிவினர் அந்தப் பிரிவின் அதிபதியை ( குலதெய்வம்) வணங்குவது அவசியம். முதலில் கூறியிருந்தேனே ஆலயங்களில் அந்தந்த தெய்வங்களின் தேவதைகள் பக்தர்களின் வேண்டுகோளை அந்தந்த தெய்வத்துக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன என்று அதே தத்துவம்தான் இங்கும். குலதெய்வம் என்பது பரப்பிரும்மனின் படைப்பின் குறிப்பிட்ட பகுதியின் தூதுவரே. அவர்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் (அதாவது Through Proper Channel என்பார்களே அதைப் போல ) அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையானக் குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு இப்படியான தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.
இப்படியாக குல தெய்வ நிந்தனையின் விளைவாக சாபத்தைப் பெற்ற மனிதப் பிறவிகளின் மரணம் அடைந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் மேலுலகம் சென்று மீண்டும் பிறப்பு எடுக்க முடியாமல் வழியிலேயே பாதை மாறி விழுந்து ஆறு ஜென்மங்களுக்கு தொடர்ந்து தீய ஆவிகளாகிக் கொண்டு அவதிப்படுவது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆகவே தன்னை அவமதித்து ஆத்மாக்களாக மாறியவை எந்தப் பிறவியை எடுத்து மரணம் அடைந்து இருந்தாலும் அந்த ஆத்மாக்கள் தீய ஆவிகளாகி அல்லல்பட்டு வம்ச விருத்தி அடையாமல் சுற்றும் என்ற சாபத்தைப் பெறுகின்றன. குல தெய்வத்தை அவமதிப்பது அத்தனை கடுமையானது. அது மட்டும் அல்ல ஒரு வம்சத்தின் சில ஆத்மாக்கள் இப்படிப்பட்ட பூர்வ ஜென்ம வினை சாபத்தினால் தீய ஆவியாகி விடுவதினால் அந்த ஆத்மாக்களின் வாரிசு வம்சாவளியினால் அதற்கு கொடுக்கப்படும் திதி அவற்றை சென்று அடைவது இல்லை. அதனால் பரிதவிக்கும் அந்த ஆத்மா தீய மனதைப் பெற்று விடுவதினால் தனது வம்சாவளியினருக்கு பல விதங்களில் தொல்லைகளை தரத் துவங்கும். மேலும் அப்படி தீய ஆத்மாக்களாக மாறும் குடும்பங்கள்தான் ஏவல்களுக்கு எளிதாகி விடுகின்றன. அவர்களுடைய குடும்பத்தினர் மூலம் தீய ஆவிகள் எளிதில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இப்படியாக பூர்வ ஜென்ம வினையினால் இரண்டாவது பாதையில் தள்ளப்படும் நல்ல ஆத்மாக்கள் தீய ஆவிகளினால் சிறைப் பிடிக்கப்பட்டு வளையத்தின் வெளியில் இழுத்து செல்லப்பட்டு எளிதில் வசப்படுத்த முடியும் நிலைக்குச் சென்று விடுகின்றன . மந்திரவாதிகள் தன் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் மூலம் அதிக அளவில் இந்த மாதிரியான சாபத்தைப் பெற்ற ஆவிகளை தம் வசம் பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை தாம் கூறியபடி செய்யுமாறு ஏவி விடுவார்கள். அவற்றைக் கொண்டே நல்லவற்றையும், கெடுதலையும் செய்கிறார்கள். தீய ஆவிகள் என்றாலும், அதை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கூறியபடித்தான் அவை காரியம் ஆற்ற முடியும். அவர்களை மீறி அதனால் எதுவுமே செய்ய முடியாது. கொடுத்தக் கட்டளைகளை நிறைவேற்றாமலும் இருக்க முடியாது. ஆனால் அதனால் சில தீமைகளும் அந்தந்த மந்திரவாதிகளுக்கு ஏற்படுகின்றன. அந்த தீய ஆவிகளே தமது சக்திக்காக மந்திரவாதிகளின் சக்திகளை உறுஞ்சத் துவங்கி விடும். மந்திரவாதிகளுடைய ஆத்ம சக்தி அதனால்தான் குறைந்து கொண்டே போவதினால் அவர்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்வதும் இல்லை. பல நேரங்களில் உடல் நலமின்றிப் போகிறார்கள். இதே தத்துவம்தான் துர்தேவதைகளின் தத்துவமும். அவை புகுந்து விட்ட இடத்தில் உள்ளவர்களின் சக்திகளை உறுஞ்சிக் கொண்டுதான் அவை தொடர்ந்து இயங்க முடிகின்றது. இனி பில்லி சூனியங்களை யாருக்கு, எப்படி வைக்கின்றார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதையும், அதைப் போல துர்தேவதையை ஏவுவது யார்? அதன் விளைவுகள் என்ன, இந்த செயல்களுக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறேன். பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா? அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக் கூற்று உண்மை அல்ல. பில்லி சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு என்கிறார்கள். அவர்களில் ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் உண்டு. மேலும் பாண்டிச்சேரி அரபிந்தோ ஆஸ்ரமத்தின் அன்னை மற்றும் காஞ்சி மகாபெரியவாள் எனும் பரமாச்சாரியார் போன்றவர்கள் வாழ்கை சரித்திரங்கள் மூலமும் பில்லி சூனியன்களைப் பற்றி அறிய முடிகின்றது. பரமாச்சாரியார் அப்படிப்பட்ட ஒரு மந்திரவாதியை கடிந்து கொண்ட நிகழ்ச்சி அவர் வாழ்கை சரித்திரத்தில் உள்ளது. ஒருமுறை பரமாச்சாரியாரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்து இருந்தாள். நெற்றி நிறைய குங்குமம். பழுத்த சுமங்கலிப் போல இருந்தாள். ஆனால் அவள் செய்வினை செய்பவள். அவள் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தவுடன் பரமாச்சாரியார் அங்கிருந்தவர்களிடம் ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வருமாறு கூறினார்கள். ஒரு கூடை நிறைய கொண்டு வந்தப் பழங்களை அவர் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லி விட்டு 'போ .......இதை எடுத்துக் கொண்டு போ...உனக்குத்தான் தினமும் செய்வினை செய்ய நிறைய எலுமிச்சைப் பழம் தேவைப் படுகிறதே' என்று கூற அவள் திகைத்து நின்றாள். தான் செய்வினை செய்பவள் என அவருக்கு எப்படித் தெரிந்தது? அப்படியே பரமாச்சாரியார் கால்களில் தடாலென விழுந்து கண்ணீர் விட்டு அழுதபடி தான் அதுவரை செய்து வந்த தவறான காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டாள். அவர் கூறினார் ' சரி......., நீ ....இங்கிருந்துப் போகும் போது ஏதாவது ஒரு பசு மாட்டின் காதில் செய்வினை மந்திரங்களை கூறி விட்டுச் சென்று விடு' என அவளிடம் கூறி அனுப்பினார். அவளும் அதையே செய்ய அவளது மந்திர சக்திகள் அனைத்தும் அந்த ஷணமே மறைந்ததாம்'' . இதை எதற்காக கூறினேன் என்றால் பில்லி- சூனியம் என்பது உண்மையாகவே உள்ளது என்பதை எடுத்துக் காட்டத்தான். பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும் பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை. ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள். ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான் மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார்? முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே. நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள். சிதைகளில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் தீய தேவதைகள் மயானங்களில் பெரும்பாலும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும். இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன!!! அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன். பெண்ணின் தீய ஆவி மந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின் காரணங்கள்:- வறுமை நீங்க வேண்டும் தொழில் நன்கு செழிக்க வேண்டும் திருமணம் நிறைவேற வேண்டும் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் வேலைக் கிடைக்க வேண்டும் காதலில் வெற்றி பெற வேண்டும் தனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும் தமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும் சொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல) ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும் வேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும் குறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும் இப்படியான பலவித எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள். அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் - தேவதைகளின் மூலமே- இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா என்பது வேறு விஷயம். தீய ஆவிகளைக் கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்? யாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு யாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு யாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு கர்ம வினை உள்ளவர்களுக்கு மற்றும் அதிக அளவில் பெண்களுக்கு (இதற்கான காரணம் சரியாக விளங்கவில்லை) ஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள்? முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும். அந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன? யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவிகள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால் அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்றை முறுக்கும், நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்). இப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும். அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வது அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும். அந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா? அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ''ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.'' அதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் செய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை உச்சரித்தவண்ணம் தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள். துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும். இதே காரியங்களை தேவதைகள் மூலம் இரு பிரிவினரும் நிறைவேற்றினாலும் அவர்களுக்கு கட்டுப்படாத இன்னொரு துர்தேவதையின் பிரிவும் உள்ளது. அதன் செயல்பாடுகளும் தீமைகளை தருபவை. அவற்றின் வழி முறையே தனி. அதை இனி பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம். மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் தீய தேவதைகள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தோம். அது போல விண்வெளியில் சுற்றி அலையும் துர் தேவதைகள் அல்லது தீய ஆவிகள் என்ன செய்கின்றன? அவைகளே மந்திரவாதிகளை விட இன்னும் ஆபத்தானவை. முன்னரே நான் கூறினேன் அல்லவா, இந்த விண்வெளியில் சுற்றித் திரியும் துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் யாருடைய உடலிலாவது சென்று புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக தீமைகளை விளைவிக்கும். அவை மனதில் ஒரே ஒரு நினைவு மட்டுமே இருக்கும். தான் பூமியில் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெளியில் சுற்றித் திரிவதினால் தானும் ஒரு கடவுளுக்கு சமம். ஆகவே தன்னையும் மனிதர்கள் கடவுளை வணங்குவதைப் போலவே வணங்க வேண்டும். அப்படி தனக்கு உரிய மரியாதையைத் தராவிடில் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது. அதனால்தான் அது பூமியில் உள்ள மனிதர்கள் எவருடைய உடலிலாவது புகுந்து கொண்டு அந்த மனிதர் மூலம் அவரை சுற்றி உள்ள மற்றவர்களையும் நிம்மதி இல்லாமல் செய்து விடுகின்றது. அதில் அதற்கு ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. அந்த நிலையை மற்றவர் துன்பத்தில் கொடூர மகிழ்ச்சி அடைபவர் -Sadist - என்று கூறலாம். ஆனால் அதே சமயம் தன்னை வணங்கித் துதிப்போரை அவை அதிகம் வாட்டி வதைப்பது இல்லை. இப்படி செய்வதினால் அவை என்ன லாபத்தை அடைகின்றன? துர்தேவதைகள் தாமாகவே அந்தக் காரியங்களை செய்வது இல்லை துர்தேவதைகளை ஆட்டுவிப்பது அந்தந்த துர் தேவதைகளின் மூல தெய்வங்களே. தாம் மனிதர்களினால் வணங்கப்படாதாதினால் இப்படி செய்தால்தான் பயத்தினால் தம்மை மனிதர்கள் வணங்குவார்கள் என்று அவை நினைக்கின்றன. இதற்கு உதாரணமாக பல கிராம தெய்வங்களின் வரலாற்றையும் படித்துப் பாருங்கள். சில இடங்களில் உள்ள மாரியம்மன் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நான் இப்போது கூறியதின் அர்த்தம் விளங்கும். மக்களை பயமுறுத்தியே தம்மை வணங்க வைப்பதும் ஒரு சில தெய்வங்களின் நியதி. அதையே இந்த துர்தேவதைகளும் பின்பற்றுகின்றன. சரி துர்தேவதைகள் எப்படி ஒருவர் உடலில் புகுந்து கொள்கின்றன. அவை எப்படி தன் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன? அந்த துர்தேவதைகள் மூன்று விதத்தில் மனித ரூபங்களில் வந்து கொண்டு இருக்கும். முதலாவது :- குழந்தைப் பருவம் முதலே அவர்களது உடலுக்குள் புகுந்து கொண்டு விடும். அது அவர்கள் உடலில் புகுந்து கொண்டு உள்ளதை உடனடியாக வெளிக் காட்டாமல் மெல்ல மெல்ல வெளிக்காட்டும். இரண்டாவது:- மரணம் அடையத் தருவாயில் உள்ளவர்கள் இறுதி மூச்சை விட்டதும், அடுத்த கணம் அவர்கள் உடலில் புகுந்து கொண்டு மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுக்கும். இதற்கான இடைவெளி கண் சிமிட்டும் நேரம்தான்.
மூன்றாவது :- சில வீடுகளை- தனிமையில், அமைதியாக உள்ள வீடுகளை சுற்றிக் கொண்டே இருக்கும். அங்குள்ளவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். தருமணம் பார்த்து அங்குள்ளவர்கள் யாரேனும் தனிமையில் இருக்கும்போது அவர்களை பயமுறுத்தும். அவர்கள் பயந்துவிட்டால் அவர்களை அடித்துப் போட்டு விட்டு (அதாவது ஒலி அலை மூலம் அவர்கள் மூளையை ஸ்தம்பிக்க வைத்து விட்டு) அவர்கள் உடலில் புகுந்து கொண்டு விடும். இந்த பிரிவை சேர்ந்த துர்தேவதைகளை மந்திரவாதிகள் ஏவுவார்கள். துர்தேவதைகள் பிடித்துள்ளவர்களை சுற்றி இருப்பவர்கள் உடல் நலமின்றிப் போவதும், மன நலம் இன்றிப் போவதும், பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகுவதும் அந்த துர்தேவதை அவர்களை சூழ்ந்து உள்ளவரை தொடர்ந்து கொண்டு இருக்கும். இப்படியாக செய்து கொண்டே அது அவர்களுடைய மனித சக்திகளை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். அதை முறியடிக்க அதிக சக்தி வாய்ந்த மனிதர்களின் மூலம் பெறப்படும் தாயத்துக்கள், யந்திரங்கள் அல்லது பூஜைகள் மூலம் எந்த நிலையிலாவது அதில் இருந்து சுற்றி உள்ளவர்கள் மீண்டு விட்டாலும், அவர்களுடைய உறிஞ்சப்பட்ட சக்திகளைப் திரும்பப் பெற முடிவது இல்லை. ஆனது ஆனதுதான். அதற்கு மேல் கெடுதல் வராமல் தடுத்துக் கொள்ளும் வழிமுறைகளை தொடர்ந்து கொள்ள வேண்டியதுதான். இன்னுமொரு முக்கியமான விஷயம். ஒருவர் வீட்டிற்குள் எந்த விதத்திலாவது நுழைந்து விடும் துர்தேவதைகள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கெடுதலும் செய்யாது. அங்கும் யாருடைய ஜாதகம் பலவீனமாக உள்ளதோ, யாருடைய கிரஹ நிலைமை சரியாக இல்லையோ, யாருடைய மன நிலை பலவீனமாக உள்ளதோ அவர்களை எளிதில் அழிக்கத் துவங்கும். சற்று வலிமையான ஜாதக பலனைக் கொண்டவர்கள், நல்ல கிரக நிலையைக் கொண்டவர்கள் போன்றவர்களை அதனால் எளிதில் அழிக்க முடியாது என்பதினால் அவ்வப்போது அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கும். தனது எஜமான தேவதைகளை அவர்கள் தன மூலம் ஆராதிக்கும்போது அவர்களை அது தாக்குவது இல்லை. ஆகவே ஒருவரின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்றால் பில்லி-சூனியங்கள் வைத்து மட்டுமே அதை செய்ய முடியும் என்பது அர்த்தம் அல்ல. துர்தேவதைகளை வீடுகளுக்குள் அனுப்பியும் அவர்களது குடும்பத்தை அழிக்க முடியும். பீலி- சூனியம் மூலம் நேரடியாக மட்டுமே ஒருவரைத் தாக்க முடியும். ஆனால் துர்தேவதைகள் மூலம் செய்யப்படும் தீமைகள் இரண்டு வகைப்படும். அவை நேரிடையாகத் தாக்குதல், மற்றும் மறைமுகமாகத் தாக்குதல் என்பவை. துர்தேவதைகளைக் கொண்டு நேரடியாகத் தாக்குவது என்பது தனிப்பட்ட நபர்களை பல்வேறு செயல்கள் மூலம் செயல் இழக்க வைப்பது. சம்மந்தப்பட்ட நபர்களை பல விதங்களிலும் தாக்கி நிர்மூலப்படுத்த முடியும். நேரடியாக இல்லாமல் மறைமுகத் தாக்குதல் என்பது குடும்பத்தின் அமைதியைக் குலைப்பது, ஒற்றுமையைக் குலைப்பது, செல்வத்தை இழக்க வைப்பது, திடீர் திடீர் என வியாதிகளைத் தருவது, குடும்பங்களில் ஆகால மரணங்களை வரவழைத்து அழிப்பது போன்றவை ஆகும். அவைகளும் பில்லி- சூனியத்தின் ஒரு பிரிவே. இவற்றை யாராவது, யாருக்காவது செய்ய நினைக்கும்போது அவற்றை மந்திரவாதிகள் மூலமும், ஏவல்களை ஏவுபவர்கள் மூலமும் செய்வார்கள். ஆனால் நேரடியாக தீய ஆவிகள் நம் வீடுகளில் புகுந்து விடும்போது கடவுளே தக்க சமயத்தில் நம்மைக் காப்பாற்றுவார். இதற்குக் காரணம் பூர்வஜென்ம வினைப் பயனாக நாம் சில கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும்போது அதை தவிர்க்க முடிவது இல்லை. அப்போதுதான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இத்தனை பயங்கரங்களை தடுப்பதற்கு என்ன உபாயம் உள்ளது? அவற்றை தடுக்க முடியுமா என்று பயந்து கொண்டு கேட்பவர்கள் சிறிதும் அஞ்சத் தேவை இல்லை. மந்திரவாதிகள் என்ன முறையைக் கையாண்டாலும் அல்லது தீமை செய்ததாலும் தொல்லையை ஒரு அளவிற்கு மட்டுமே தர இயலும். காரணம் தெய்வ பக்தி உள்ளவர்கள் மனதார தாம் வணங்கும் தெய்வங்களை ஆராதித்து தமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டு பூஜிக்கும் வீடுகளில் (ஏன் ஸ்வாமிக்கு ஒரு பூ வைப்பது, ஸ்வாமிப் படங்களின் முன்னால் விளக்கு ஏற்றுவது, குளித்தப் பின் ஒரு நிமிடம் இறைவன் படத்தின் முன்னால் சென்று அவர்களுடையப் படத்தைப் பார்ப்பது போன்றவைக் கூட ஒருவித பூஜைதான். தினமும் அல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்தாலும் அந்தப் பலன் தொடர்ந்து இருக்கும். அதனால்தான் பண்டிகை நாட்களிலாவது பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்கள்) தீய ஆவிகளினால் லேசில் நுழையவே முடியாது. அதற்க்குக் காரணம் வீடுகளில் செய்யப்படும் பூஜைகளினால் மகிழ்ச்சி அடையும் தூய தேவதைகள் மற்றும் அவற்றின் அவதார தெய்வங்கள் அந்தந்த வீடுகளில் உள்ள வெற்றிடங்களை ( தேவ ஜீவ அணுக்கள் வேறு, ஆவிகளின் ஆத்மாக்கள் வேறு. தேவதைகள் வேறு. அணுக்கள் என்பது தேவதைகளின் படையினர் இது பற்றிய விளக்கத்தை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்) தமது சக்திகளினால் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி? ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களின் குல தெய்வ வழிபாடு அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு அல்லது ஏதாவது மகான்கள் எடுத்துக் கொடுக்கும் பூஜைகள் போன்றவை நிச்சயமாக நடந்து கொண்டு இருக்கும். குறைந்தபட்ஷம் ஒரு விளக்கையாவது சுவாமிகளின் முன்னாள் ஏற்றி வைப்பார்கள். அவற்றினால் மகிழ்ச்சி அடையும் தெய்வங்களின் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள் அந்த வீடுகளின் அகண்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும் அவ்வப்போது, முக்கியமாக அங்குள்ளவர்கள் தெய்வத்தை நினைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கும்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும். இப்படியாக அவரவர் வீடுகளில் அவர்களை அறியாமலேயே தெய்வங்களின் தேவதைகள் அவ்வபோது வந்தும் போய்க் கொண்டும் இருக்கும்போது அந்த அகண்டத்தில் உள்ள தமது படையினரான நல்ல அணுக்களுடன் தமது தொடர்ப்பை உறுதிபடுத்திக் கொண்டே வலிமையாக்கிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த வீடுகளில் ஏதாவது துர்தேவதைகளின் நடமாட்டம் இருந்தால் அவை ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகளைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓடி விடும். ஆகவேதான் சாதாரணமாக தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் வீடுகளுக்குள் துர்தேவதைகள் நுழைய முடியாது. அவ்வப்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள், நம்மை சுற்றி உள்ள வெற்றிடத்தில் சுற்றித் திரியும் போது அங்கு தீய அணுக்கள் எதுவும் பதுங்கி இருந்தால் உடனே அவற்றை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை அங்குள்ள தமது படைவீரர்களின் உதவியோடு விரட்டி அடிக்கும். (அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கும் அந்த செய்கையை நம்மால் உணர முடியாது). அந்த தேவதைகளின் படையினராக வீடுகளுக்குள் சுற்றித் திரியும் நல்ல அணுக்களை மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கும். சாதாரணமாகவே நமது வீடுகளில் திடீரென அசாத்தியமான அமைதி நிலவுவதைக் உணர முடியும். அதுவும் முக்கியமாக ஒரு பூஜை முடிந்ததும் இந்த அமைதியை நிச்சயமாக உணர முடியும். அதற்குக் காரணம் நம் வீடுகளில் புகுந்திருந்த தீய ஆவிகள் அங்குள்ள நல்ல அணுக்கள் மற்றும் தேவதைகளினால் துரத்தி அடிக்கப்பட்டு இருக்கும் என்பதே காரணம். அப்படி என்றால் தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள் வீடுகளில் தீய ஆவிகள் நுழைவதே இல்லை என்பது கிடையாது. ஒவ்வொருவர் வீட்டிலும் பலவிதமான ஆவிகள் அதாவது தீய மற்றும் நல்ல ஆவிகள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கின்றன. அவை நம் கண்களுக்குத் தெரிவது இல்லை. ஏன் என்றால் அவை எப்போதுமே வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பதினால் காற்று சுழலுவது போல சுழன்று கொண்டே இருக்கும். ஆனால் தீய ஆவிகளை நிரந்தரமாக தங்க விடாமல் தடுப்பவை தேவதைகளின் படை வீரர்களாகிய நல்ல அணுக்களே. அதையும் மீறி தீய ஆவிகள் எப்படி நுழைந்து வீட்டை வசப்படுத்திக் கொள்ளும்?. இதுதான் நாம் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்துள்ள பாதுகாப்பு. ஆனால் ஏமார்ந்து இருக்கும்போது ஒரு முறை துர்தேவதை அங்கு நுழைந்து விட்டால் அந்த வீடுகளுக்குள் அது தன்னுடைய பட்டாளத்தையே கொண்டு வந்து வைத்து விடும். அதற்குப் பிறகு எப்போதும்போல அந்த வீடுகளுக்குள் நுழைய வரும் நல்ல தேவதைகளுடன் யுத்தம் செய்து அவற்றை விரட்டத் துவங்கும் . அந்த வீடுகளில் உள்ள நல்ல அணுக்களை (நல்ல தேவதைகளின் படைகளை) விரட்டி அனுப்பிவிட்டு தமது படையினரை வந்து வைத்து விடும். அதனால்தான் சில வீடுகளில் எத்தனை பூஜைகளை செய்தாலும் அவற்றுக்குப் பலன் இல்லாமல் போய் விடும். காரணம் அந்த பூஜைகளின் மந்திரங்களோ இல்லை வேண்டுகோட்களையோ எடுத்துச் செல்ல தூய தேவதைகள் அங்கு இருப்பது இல்லை. அந்த துர்தேவதையின் ஆதிக்கத்தை அங்கு குறைத்தால்தான், அதை வெளியேற்றினால்தான் அங்கு மீண்டும் நல்லவை நடக்கும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் தவறாமல் எந்த முறையிலாவது குலதெய்வ வழிபாட்டுடன் பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, முருகன் வழிபாடு போன்ற ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருந்தாலும், ஸ்வாமிக்கு முன்னால் சிறு விளக்கை தினமும் ஒரு முறையாவது ஏற்றி நமக்கு மன பயத்தை விலக்குமாறும், நம்மை காத்தருளுமாறும் கடவுளை வேண்டிக் கொண்டபடி இருந்தால் அந்த தெய்வங்களின் தேவதைகள் நம் வீடுகளில் சுற்றி அலைந்தபடி இருந்து கொண்டு இருக்கும். அவற்றை செய்தால் தீய ஆவிகளோ, துர்தேவதைகளோ நம் வீட்டில் நுழைவது கடினம்.

''நன்றி:http://santhipriyaspages.blogspot.in ''