கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்றொரு இடத்தில் இருந்தால் அது ஒரு யோகம் என்று சொல்வார்கள்.

உதாரணத்திற்க சந்திரனுக்கு 4ல், 7ல், 10ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும்.

6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு.

கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.

குறிப்பாக கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.

ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா?

எதிர்பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை ராஜ யோகம் என்று சொல்லலாம்.

யோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?

அதாவது நமக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம் என்று சொல்கிறோம். அதாவது அதிர்ஷ்டம்.

யோகம் என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள் பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும்.

யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. ராஜ யோகம் என்று சொல்லும்போது பலர் வணங்கக் கூடிய மாமனிதனாவான் என்று சொல்வார்கள்.

ராஜ யோகம் என்பது எந்த கிரக அமைப்பைப் பொறுத்தது?

எல்லா லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் இன்னன்ன இடத்தில் சேர்ந்திருந்தால் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால் “சந்திரனும் புதனும் சேர்ந்தால் இந்திரனைப் போல வாழ்வான்” என்று சொல்வார்கள்.

துலாம் லக்னத்திற்கும் சந்திரனும், புதனும் சேர்ந்தால் இந்திரன் போல் வாழ்வான் என்று சொல்வார்கள்.

துலாம் லக்னத்திற்கு புதன் பாக்யாதிபதி, சந்திரன் ஜீவனாதிபதி. பாக்யாதிபதியும், ஜீவனாதிபதியும் ஒன்று சேரும்போது இந்திர பாக்கியம் கிட்டும்.

ஒவ்வொரு லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் பாவத்தைத் தரும், இன்னன்ன கிரகங்கள் யோகத்தைத் தரும்.

தரித்திர யோகம் என்பது என்ன?

இடையூறுகளைத் தரக்கூடியதுதான் இந்த தரித்திர யோகம் ஜென்ம குரு என்றால் என்ன?ராசிக்குள்ளேயே குரு வந்து உட்காருவதுதான் ஜென்ம குரு என்பதாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

இந்த ஜென்ம குரு நடக்கும் காலத்தில் புத்தி தடுமாற்றம், பாதை மாறிப் போதல் போன்றவை ஏற்படும்.

மாறுபட்ட சிந்தனை, தீய எண்ணம் ஏற்படும். எனவே ஜென்ம குரு நடக்கும் காலக்கட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராமன் - சீதையும் கூட அந்த நேரத்தில்தான் பிரிந்திருந்தனர். எனவே அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஜென்ம குரு நடக்கும்போது புத்தி வேலை செய்யாது, மெளன விரதம் இருங்கள். உணர்ச்சிகள் வேலை செய்யும். தாழ்வு மனப்பான்மை வரும். பழையவற்றை நினைத்துப் பார்த்து சண்டைப் போடுவார்கள் சூரியனும் சனியும் பகைக் கோள்களாக சொல்லப்படுவது ஏன்?


சூரியப் புத்திரன் சனி. ஆனால் ஜோதிடத்தின்படி சூரியனும், சனியும் பகைக்கோள்கள் என்று ஏன் சொல்லப்படுகிறது?ஜாதகப்படி பார்த்தால் சூரியனும், சனியும் பகைக்கோள்கள்தான். புராணப்படி பார்த்தாலும் அவை பகைக்கோள்கள்தான். சூரிய பகவான் வெண்மை கலந்த செந்நிறமாக இருப்பார். சனி பகவான் கரு நீலம். நிறத்தில் கூட ஒற்றுமை இல்லை. மாறுபட்டுப் பிறந்ததால் பகை உண்டானதாகச் சொல்லப்படுகிறது.

அறிவியில் பூர்வமாகப் பார்க்கும்போது சூரியன் முழுக்க முழுக்க ஹீலியம் வாயு நிறைந்தது. வெப்ப அணுக்கரு உலைகள் கோடிக்கணக்கில் நிறைந்தது. ஆனால் சனியோ கார்பன், கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், ஈத்தேன் கனிமங்கள், வாயுக்களால் நிறைந்தது. சனிக்கும் வெப்பத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. சனி ஒரு பனிக்கோளாகும். குளிர்ச்சியானது.

இதை வைத்து இயல்பாகப் பார்த்தால் சனியும், சூரியனும் வேறுபட்டுத்தான் உள்ளன. அதனால் பகைக் கோள்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு ஜாதகருக்கு சூரியனும், சனியும் ஒரே வீட்டில் அமர்ந்தால் அவருக்கு இதயக் கோளாறு ஏற்படும். ரத்தத்தில் பெரிய பாதிப்பு, நரம்புக் கோளாறு, படபடப்பு ஏற்படுவது, எரிஞ்சு விழுவது போன்றவை ஏற்படும் அடுத்த பிற‌வி என்பதை ஜோதிடம் எ‌வ்வாறு பார்க்கிறது?


ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும்போது முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்பது அனைத்தும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறது என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறியலாம்.

மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து அவரது மறுபிறவிகளை அறியலாம்.

பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்சக் காரகன் கேது. 12ஆம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை.

5ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. 5ஆம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.

அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம்.

இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நிறம் உண்டு. வானவியல் முறையில் பார்க்கும்போது ஒவ்வொரு நிறத்திற்கும் அலை நீளம் என்று சொல்லப்படுகிறது. நிறங்களில் குறைவான அலை நீளம் கொண்ட நிறங்கள், அதிகமாக பிரதிபலிக்கும் என்பது விதி.

சனி கிரகம் நீல நிறம், குறைவான அலை நீளம் கொண்ட நிறம் நீலம். ஆனால் அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடல், வானம் என எங்கும் நீலம்தான் காணப்படுகிறது. சனி ஆளுமை கிரகம். அதிக சக்தி வாய்ந்த ராஜ கிரகம் என்று சொல்லப்படுகிறது. அதன் நிறத்தை நிறைய பேர் பயன்படுத்துவார்கள், இயற்கையின் படைப்புகள் அதிக அளவில் நீல நிறத்தில் இருக்கும்.

கேதுவிற்கு பிரவுன் மற்றும் ஆரஞ்சு என்றும் சொல்லலாம். கிறிஸ்டின் நாட்டில் வாழ்பவர்கள் இந்த நிறங்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கேது கிறிஸ்துவத்திற்கும், ராகு முகமது மதத்திற்கும் ஏற்ற கிரகங்கள் என்று கணித்துள்ளேன்.

ராகுவின் நிறம் நீல நிறம் மற்றும் பச்சை. இந்த நிறங்களைத்தான் இஸ்லாமிய நாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

ராகுவிற்கு நட்பு புதன், கேதுவிற்கு நட்பு செவ்வாய். செவ்வாய் கிரகத்திற்குரிய நிறம் சிவப்பு. கேது ஆதிக்கம் உடையவர்கள் சிவப்பு நிறத்தையும் பயன்படுத்துவார்கள். ராகு ஆதிக்கம் இருந்தால் அவர்கள் நீலம் மற்றும் பச்சை நிறங்களைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்கு எந்த கிரகம் வலிமையாக இருக்கிறது என்றும். அந்த கிரகம் எந்த வீட்டிற்குரியது என்பதையும் பார்த்து அந்த கிரகத்திற்குரிய நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். வலிமையாக இருக்கிறது என்று கெட்ட வீட்டிற்குரிய கிரகத்தின் நிறத்தை தேர்வு செய்து கொடுத்து விடக் கூடாது. அது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா?

அமாவாசையில் பிறந்தால் அவர்கள் திருடனாக இருப்பார்கள் என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அதெல்லாம் உண்மையா?சாதாரணமாக ஆத்மகாரகன் சூரியன், மனோகாரன் சந்திரன் இவ்விரண்டும் சந்திக்கும் நாள் அமாவாசை ஆகும். எனவே அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை ‌தித‌ி‌யிலு‌ம், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.

திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எ‌ந்த ‌தி‌தி செ‌ள‌ம்ய தோஷமும் இருக்காது.

அதாவது துதியை திதியன்று தனுசு, மீனம் வலுவிழக்கும், பிரதமை திதியன்று துலாம், மரகம் வலுவிழக்கும், சதுர்த்தி திதியன்று கும்பம், ரிஷபம் வலுவிழக்கும். ஆனால் பெளர்ணமி, அமாவாசை திதியில் எல்லா கிரகங்களும் வலுவடைவதால் அவர்களுக்கு எந்த செளம்ய தோஷமும் கிடையாது.

அதனால் இவர்களுக்கு மூளை பலம் அ‌திக‌ம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவ‌ர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாம‌ல் செய்வார்கள்.

சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவ‌ர்களது ‌திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனா‌ல் அவர்களை தலைக் கனம் பிடித்தவ‌ர்கள் என்று கூறுவர்.

அவர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே அவ‌ர்களது த‌ந்‌திர‌ம் தெரியும். சில சமயங்களில் அமாவாசை‌யி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் த‌ந்‌திர‌ங்க‌ள் அவ‌ர்களுட‌ன் இரு‌ப்ப‌வ‌ர்களு‌க்கே பு‌ரியாது. 2002ல் பேசியதற்கு 2005ல் தான் மற்றவர்களுக்கு விவரம் பு‌ரியு‌ம்.

அமாவாசையி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் ஏதாவது ஒரு மன வறுத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான். சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.

அமாவாசையில் பிறந்தவர்கள் நிச்சயம் திருடுபவர்கள்தான். ஆனால் பொருட்களை அல்ல, மனதைத் திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அமாவாசையில் பிறந்தவர்கள் அறிவியல் திருடர்கள், அவ‌ர்க‌ள் எடு‌த்த முடிவை மா‌ற்‌றி‌க்கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள், முடிவு எடு‌த்தா‌ல் எடு‌த்ததுதா‌ன்.

நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலு‌ம் இ‌ன்னு‌ம் ந‌ல்லவராக அமை‌ந்‌திரு‌க்கலாமே எ‌ன்று ‌எ‌ண்ணுவ‌ர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை நேசிப்பவர்களாக இருப்பர் களத்ர தோஷம் என்றால் என்ன?
களத்திர தோஷம் என்றால் வாழ்க்கைத் துணை அமைவது தொடர்பான தடையாகும்.

ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகத்தில் 7வது இடம் களத்திர ஸ்தானம். களத்திரர் காரகன் சுக்கிரனாவார். 7வது வீட்டிற்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்றோ, சேர்க்கை ¦ப்றோற 6, 8க்கு உரியவனிடம் சேர்ந்தோ அல்லது 6, 8, 12ல் மறைந்திருந்தாலோ களத்திர தோஷம் உண்டு என்று பொருள் செவ்வாய் (அங்காரக) தோஷம்!இலக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷ ஜாதகமாகக் கொள்ள வேண்டும். இவை மட்டுமின்றி லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷத்தையே ஏற்படுத்தும்.

லக்னம் மேஷ, விருட்சிக, மகரமானால் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, சூரியன் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் தோஷ நிவர்த்தியாகும்.

செவ்வாயுடன் குரு சேர்க்கை யோக பலனைத் தரும் (குரு மங்கள யோகம்). செவ்வாய் தோஷம் என்பது இருக்கக் கூடாத ஒன்றும் அல்ல. அதற்காக பயம் கொள்வது அர்த்தமற்றது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதற்கு பொருத்தமான தோஷமுள்ள ஜாதகத்தை தேடி விவாகம் செய்வது போதுமானது. ஒருவன் பிறந்த போதே விதி நிர்ணயமாகிவிடுவதால் அவனை தோஷங்கள் ஒன்றும் செய்யாது. தோஷம் இல்லாதவர்களுக்கு இளம் வயதில் விவாகம் முடிந்து வாழ்வில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்று சொல்வதும் தவறு. வாழ்க்கையில் செட்டில் ஆன பின் விவாகம் செய்து கொள்பவர்களும் அதிகம் உண்டு. செவ்வாய் தன் உச்ச ஆட்சி வீடுகளில் இருந்தாலும் தோஷமில்லை.

அங்காரக தோஷம்

செவ்வாய் - புதன், சந்திரன் இவர்களின் சேர்க்கை பார்வை பெற்றாலும் தோஷமில்லை. செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் பெரிய தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இந்த ஸ்தானங்களிலிருந்தாலும் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

பரிகாரம்

அங்காரக தோஷமுள்ளவர்கள் தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை 6 கிருத்திகை நட்சத்திர தினங்களில் சென்று வணங்கி வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். சூரியனார் கோயிலுக்கு சென்றாலும் தோஷ நிவர்த்தி பெறலாம் மஞ்சளின் மகத்துவம்!


பொங்கல் பண்டிகையின் அடையாளமான பொங்கல் பொங்கும் பானையைச் சுற்றி மஞ்சள் செடியைக் கட்டியிருப்பார்கள். தமிழரின் வாழ்வுடன் மஞ்சள் அந்த அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளதையே பொங்கல் பானையிலும் அது மாலையாய் சுற்றப்பட்டு பாரம்பரியத்தின பிரதிபலிப்பாக திகழ்கிறது.

மஞ்சள் என்ற ஒரு செடியின் கிழங்கு, நம்முடன் பின்னிப் பிணைந்து காலம் தொட்டு வாழ்ந்து வரும் ஒரு தெய்வீகப் பொருள். உணவு, மருந்து என்று பல கோணங்களில் நமக்கு உதவுகிறது.

நிறங்களில் புனித நிறமான மஞ்சள் நிறம் ஆன்மீகத்தைக் குறிக்கும், காவி பசுமையை குறிக்கும். பச்சை இரு வண்ணத்திலும் மங்களத்தை சேர்க்கும் மகிமை வாய்ந்தது. காவியில் மஞ்சளை நீக்கினால் சிவப்பு, அது வறுமையை காட்டிவிடும். பசுமையில் மஞ்சளை நீக்கினால் நீலம் மட்டும் மிஞ்சும். அது ஆபத்தை காட்டும்.

புனிதம் இல்லாமல் ஆன்மீகமும், செழுமையும் ஒரு காலம் வளராது. பழைய கால முறைப்படி சுண்ணாம்பு நீரில் பழுத்த மஞ்சள் கிழங்கினை ஊற வைத்து உலர்த்தி இடித்து குங்குமம் என்று நெற்றியில் இட்டுக் கொண்டார்கள். இது அதீத மருத்துவ குணம் வாய்ந்தது மட்டுமல்ல, குங்குமம் இட்டுள்ளவர்களை மிகவும் எளிமையாக்கி காட்டும். பார்ப்பவர்களையும் இந்த சிகப்பு வண்ணம் எளிமையாக்கிவிடும். இன்று காலப்போக்கில் வண்ணங்கள் எண்ணங்களுக்கு தகுந்தாற்போல் திரிந்துவிட்டது.

மஞ்சள் நிறத்திற்கு நோய் கிரிமிகளை எதிர்த்து அழிக்கும் தன்மை உண்டு. குணமும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டத. நவீன மருத்துவ வசதி இல்லாத காலங்களில் மஞ்சள் சஞ்சீவினியாகவே மக்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. பிளவை போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பழங்கால மருத்துவர் பெரிதும் மஞ்சள் பெடியையே உபயோகத்து சிகிச்சை செய்துள்ளனர் குணமும் கண்டுள்ளனர். அதன் வாசத்திற்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையுண்டு. பெண்மைக்கு மிகவும் புனிதத்துவத்தை சேர்ப்பது மஞ்சள், சருமத்தையும் மிருதுவாக பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆண் தன்மையை காட்டும் ரோமங்களை நீக்கும் சக்தி கொண்டது. உணவில் கலந்துள்ள விஷத்தினை முறிக்கும், நல்ல மணத்தையும் அளிக்கும். குடற்புண்னை போக்கி துர்நாற்றத்தையும் போக்கும்.

பசுவின் கோமியம் போன்ற கிருமி நாசினி கிடைக்காத இடங்களில் மஞ்சள் நீரையே பயன்படுத்துவர். அதற்கு இணையான தன்மை கொண்டது. சிலர் நெற்றியில் நீரு போல் அணிவர். அது குணத்தை மேம்படுத்தும். பிறரை கவரும் தன்மையை கொடுக்கும். இப்படி பெரிதும் நம்முடன் நலன் கொண்ட மஞ்சள் கலாச்சாரத்தை பெரிதும் பேணி பாதுகாத்து பெருமை கொள்வோம் சகுனம் என்றால் என்ன?


சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?இது பஞ்ச பூதங்களின் அடிப்படையிலான விடயம். 5 அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது என்பது.

"சகுனம் என்பது இயற்கையின் அசைவு அல்லது நல்லதற்கான இசைவு என்பதே!"

நமது நாட்டில் பல்வேறு சகுனங்களைப் பார்க்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. உதாரணத்திற்கு பூனை குறுக்கே வருவது.

பூனை : வலமிருந்து இடம் போனால் நல்லது.
இடமிருந்து வலம் போனால் கெடுதி என்பர்.

"தும்பலில் கிளம்பினாலும் தூரலில் போகாதே!" அது ஒரு கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது.

இந்த திசையில் இடி இடித்தால் கிளம்பக் கூடாது என்பார். ஈசானத்தில் (வட கிழக்கு) இடி இடித்தாலோ அதே போல தென்மேற்கு திசையில் இடி, மின்னல் ஏற்பட்டாலோ கடும் மழைக்கு அறிகுறி மட்டுமின்றி, புறப்பட்டவர் சென்று சேரவேண்டிய இடத்தை சேர முடியாத நிலையோ அல்லது விபத்தோ நேரிடலாம் என்றோ சகுனம் கொள்ளப்படுகிறது.

சகுனம் என்பது இயற்கையின் மொழி ! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவது.

6 அறிவு படைத்த மனிதன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோமே. ஆனால் இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடிகிறதா? அந்த இயற்கை ரகசியங்களை வெளிப்படுத்துவதே சகுனம் பார்ப்பதற்கு அடிப்படையான இந்த நிகழ்வுகள் ஆகும். பூனை, இடி, மழை போன்றவையெல்லாம் அதற்கான காரணிகளே