கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வியாழன், 20 ஜனவரி, 2011

கர்மா என்றால் என்ன? மறுபிறவிக்கும் கர்மாவுக்குமான தொடர்பு என்ன?மனிதனின் தேடல்கள் அறிவியலாய் சில மாறியபின்பும், மிகையான சந்தேகங்கள் தேங்கிநிற்பதை விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.

நமக்கு ஆறு அறிவு உள்ளது மெய்யானால், அதுபற்றி நாம்தான் ஆராய வேண்டும். அறிவியலைப் பொருத்தவரை எல்லாமே ஐந்தறிவுதான்.

பகுத்துப்பார்க்கும் ஆற்றல் அறிவியலுக்குக் கிடையாது. எல்லாமே கணக்குத்தான்.

எந்த மதமும், தத்துவமும் நம்மைமீறிய சக்திகள் உண்டு என்று இதுவரை நிரூபிக்கவில்லை.
எந்த அறிவியலாலும் அவைகள் இல்லை என்று நிரூபிக்க முடியவில்லை.

நமக்குள்ளே சில கருத்துக்கள் தோன்றும்.
எதை நம்புவது என்று சில எண்ணங்கள் தோன்றும்.
நாம் தப்பானவைகளை நம்பினால், செய்திகளில் தோன்றவும் நேரிடலாம்!

ஆவி விசயமும் அப்படித்தான்.
ஆனால் இதன் வரலாறு மிகநீண்டது.
எளிதில் புறக்கணிக்கமுடியாதது.

உலக இலக்கியங்களிலும், வரலாற்றிலும் தழும்பி நிற்பது எண்ணற்ற இவ்விசயங்களே.

மெய்பொருள் காண்பதறிவு என்றபடியால்
வாசகர்களின்மீதே பொறுப்பை ஒப்படைக்கிறோம்!வாழ்வுக்குப் பின்னான ஓர் அமானுஷ்ய உலகோடு தொடர்புடையவர் நீங்கள். ஆவிகள் உலகம் குறித்த பல வகையான ஆராய்ச்சிகளையும் செய்திருக்கிறீர்கள். அந்த அமானுஷ்ய உலகை நோக்கி உங்களது கவனம் திரும்பக் காரணமான நிகழ்வெது?நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் நல்ல சுகவாசி. சிறுவயதில் இருந்தே எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. பொதுவாகவே நான் விரும்பிப் படித்த புத்தகம் எதுவெனக் கேட்டால் அது "அம்புலிமாமா" தான். பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், நீதிக்கதைகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தன. நான் வளர்ந்து வாலிப வயதை எய்திய பிறகும் எனது வாசிப்பு தொடர்ந்தது. பல அறிவார்த்தமான புத்தகங்களை வாசித்த வண்ணம் இருப்பேன். 1973 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பில் எனது தாத்தா மரணம் அடைந்தார். ஐந்து நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வலியில் புரண்டவர் இறந்து போனார். மரணத்தை அவ்வளவு நெருக்கத்தில் நான் அப்போதுதான் சந்தித்தேன். அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் அதே சமயத்தில் என்னுள் பல கேள்விகளையும் எழுப்பியது. அவரது திடீர் மரணத்தில் பாதிப்பு என்னை எப்படியாவது அவரிடம் பேசவேண்டும் என்று தூண்டியவண்ணம் இருந்தது. தாத்தாவின் மரணத்திற்குப் பின் அவருக்கான காரியங்களைச் செய்த போது அங்கு வந்திருந்த ஒருவர் மூலமாக ஆவிகள் பற்றியும் வ்ய்ஜா (ouija) பலகை பற்றியும் கூறினார். உடனே அந்தப் பலகையை உபையோகித்து ஒரு இரவில் ஆவிகளுடன் எனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து பேச முயற்சித்தேன். அந்தப் பலகையும் உயிர் பெற்றது. ஆவிகள் வரத்தொடங்கின. ஆனால் பல வகையான ஆவிகள் அப்போது வந்தன. அதில் ஒன்றுதான் சிவயோகி ஒருவரின் ஆவி. அது புண்ய ஆத்மா. அந்த சிவயோகியே எனக்கு என் தாத்தாவுடன் பேசுவதற்கு உதவினார். அதற்குப்பிறகு ஆத்மாக்கள் உலகம் குறித்த எனது ஆர்வத்தின் காரணமாக அதன் தொடர்பான பல விஷயங்களை அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.ஆவிகள் உலகைப் பற்றிய எண்ணற்ற புத்தகங்களும் திரைப்படங்களும் இதுவரை வெளியாகி உள்ளன. இருந்த போதிலும் ஆவிகள் உலகம் என்பது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தாகவே உள்ளது. இதற்கு முக்கிய தடை எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முக்கியமான தடை எதுவென்றால் அணுகுமுறைதான். அவர்கள் தவறாக இந்த உலகத்தை அணுகுகிறார்கள். அதனை அணுகும் விதமும், அது குறித்து நிலவும் கருத்துகளும் தவறான அளவுகோல்களாக உள்ளன. ஆவியைக் காட்டுங்கள் என்பது தவறு. அதனைக் காட்ட இயலாது. அவற்றை ஆவி என்பதே தவறு. அது ஆத்மா. ஆத்மாவை உணர்ந்தே அறிய இயலும். உதாரணமாக பேய் பிடித்த பெண்ணை ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்றால் அவரால் அந்தப் பெண்ணைப் பீடித்திருப்பது நோயல்ல என்பதை கண்டறிந்து சொல்ல இயலாது. அவர் அதனை மனக்கோளாறு என்பார். நிஜமான மனக்கோளாறு எனில் அது மருத்துவத்தில் குணமாகும். வருடக்கில் அவதியுறும் நோயாளிகள் உள்ளனர். பல சமயங்களில் அது ஆவிகள் சம்பத்தப்பட்டது. மருத்துவர்கள் அது பற்றி அறிவதில்லை. இது வேறோர் உலகம். திட்டவட்டமாக அறிவியல் ஒத்துகொள்ளாத .விஷயமாகவே இன்றுவரை இருந்துவருகிறது. ஆயினும் ஆத்மா குறித்த பலவகையான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. வைத்யநாதன் என்ற ஒருவருக்கு தீராத கடும் தலைவலி வந்தது. பார்க்காத வைத்தியமில்லை. தலைசிறந்த நியூரோ சர்ஜன்கள் எல்லாரும் பார்த்தாகி விட்டது. பலவகையான மருந்துகளை சாப்பிட்டாகிவிட்டது. நோய் குணமாகவில்லை. பிறகு அவர் வேலை நிமித்தமாக ஆப்பிரிக்கா செல்ல வேண்டி வந்தது. அப்போது அங்கே அவர் ஊடூயிஸ்ட் (Voodooist) இடம் சென்றார். ஊடூயிஸ்ட் என்பவர்கள் மந்திரம் தந்திரம் மற்றும் ஆவி உலகம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். அந்த ஊடூயிஸ்டிடம் இவர் தனது தீராத தலைவலி பற்றிக்கூற அவர் சோழி போட்டுப் பார்த்தார். பிறகு வைத்யநாதனின் கரங்களை ஒருவிதமாய் முறுக்கி தலைக்குப் பின்னால் இழுத்து நெட்டி முறித்ததும் தலைவலி ஓடியே போய்விட்டது. ஊடூயிஸ்டுகள் ஆஜானுபாகுவாக இருப்பார்கள். அத்தனை உடல் வலிமையுடன் வைத்யநாதனை வளைத்து நெட்டிமுறிக்க தலைவலி பறந்தது. சிறந்த நியூரோ சர்ஜன்களின் வைத்தியத்தியத்தில் குணமாகாத நோயை ஒர் ஆதிவாசியால் குணப்படுத்த முடிந்தது விந்தை அல்லாமல் வேறென்ன. இதனை அறிவியல் எவ்வாறு ஒப்புக்கொள்ளும்?ஆவிகளுடன் பேச முடியும் என்பது உண்மையா? எனில் எவ்வாறு?ஆம். நிச்சயம் பேச முடியும். ஆத்மா என்பது அபாயகரமான விஷயம் அல்ல. நம்மைப்போன்ற இன்ப துன்ப உணர்வுகள் ஆத்மாக்களுக்கும் உண்டு. ஆத்மாக்கள் எங்கோ தொலைவில் இல்லை. நம்மைச் சுற்றிலும் வேறு பரிமாணத்தில் வாழ்கின்றன. அவற்றை நாம் கண்களால் காணவோ அவர்கள் சொல்வதைக் கேட்கவோ இயலாது. உணர்ந்தே அறிய இயலும். ஆவிகளுடன் பேச சில வழிமுறைகள் உள்ளன. அப்படிப் பேசும் மனிதர்களை மீடியம் என்று அழைக்கிறோம். அவைகளுள் வ்ய்ஜா பலகை முறை (Ouija Board) தானாக எழுதும் முறை (automatic writing method) மயக்க நிலை (trance) போன்றவை சாத்தியமானவை. உண்மையில் ஆத்மாவிடம் பேசுதல் என்பது நமது உடலின் சக்தி, மற்றும் பிரார்த்தனை, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான்.மறுபிறப்பு என்பது உண்டா? உண்டு எனில், அது எதனை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது?மறுபிறப்பு என்பது உண்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இயான் ஸ்டீவன்சன் மறுபிறப்பு குறித்து பல வகையான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதனை நிரூபணம் செய்யவில்லை. இது அனுபவ பூர்வமான விஷயம். பெங்காலில் டாக்டர் பேனர்ஜி இது குறித்து பலவகையான ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இவர் அமெரிக்காவில் ரீஇன்கார்னேஷன் (reincarnation) பற்றி நிரூபித்திருக்கிறார். ஆக மறுபிறப்பு இருக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆண்டவன் எவ்வளவு உண்மையோ அவ்வளவு இது உண்மை.

நெய்வேலியில் ஒரு பையன். அவன் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவன். அவனது தாய் ஒரு டீச்சராக இருந்தார். அவன் அடிக்கடி நான் பொழுது போக்கிற்கு வெள்ளைக்குதிரையில் போவேன். எங்கள் வீட்டில் நீச்சல்குளம் உள்ளது என்றெல்லாம் சொல்வான். அவனைச் சந்தித்த போது இவன் இது போன்ற இன்னும் சில விஷயங்களைச் சொல்லத் தொடங்கினான். ஆனால் அவனது அம்மா அந்தப் பையனை அடித்து நிறுத்திவிட்டார். இதுவும் கூட மறுபிறவியின் நிரூபணம் தான்.

மேலும் ஒருவர் இறந்த உடனேயே மறுபடி பிறப்பதில்லை. நமது இந்த உடலைப் போலவே ஆவி உடலுடன் சில காலம்வரை வேற்றுலகில் வசிப்பார்கள். மறுபிறவி எடுக்கும் போது ஆவி உலகை விட்டு மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள். வரையறையற்ற மறுபிறவிகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனாலும் கர்ம வினைகளுக்கு ஏற்றவிதமாகவே மறுபிறவிகள் அமைகின்றன.ஆவிகளை எப்படி அடையாளம் காண்பது?ஆவிகளுக்கு IQ உண்டு. அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளில் மெட்டீரியலைசேஷன் (materialization) என்ற முறைப்படி ஆவிகளை படம் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் ஆவிகளின் உருவமே தெரியும். ஆனால் ஆவிகளுக்கு உடல் கிடையாது. அதன் உருவத்தை உணர்ந்தறிய மட்டுமே இயலும். இந்த மெட்டீரியலைசேஷன் முறைப்படி மெழுகில் ஆவிகளின் கைகளைப் பதித்து அவற்றின் ரேகைகளைக்கூட பதிவு செய்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தனது உடலின் சக்தியை (energy) உபயோகித்து மீடியம்களால் செய்ய இயலும்.ஆவிகள் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? நிஜமான குரலா?ஆவிகள் பேசுவது குரலால் அல்ல. ஏனெனில் அவர்களுக்கு உடல் கிடையாது. எனவே குரல்வளையும் கிடையாது. அவர்கள் பேசுவது குரலால் அல்ல. அது ஒருவகையான மேனரிசம் (mannerism). ஒரு குழலை நீங்களோ நானோ வாசித்தால் ஒரே மாதிரியான ஒலியே எழும்பும். ஆனால் திறமைமிக்கவன் வாசிக்கையில் வாசிக்கும் விதம் மாறுபடுகையில் வேறுவகையான இசை எழும்பும். அதுபோலத்தான் ஆவிகள் பேசுவதும். மீடியம்கள் அத்தகைய மேனரிசத்தை அறியும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். மீடியம்கள் ட்ரான்ஸ் (trance) முறையில்தான் அதனை எழுதுவார்கள். சிலர் ட்ரான்ஸ் முறையில் எழுதினாலும் விழிப்புணர்வுடனேயே (conscious) எழுதுவார்கள். அதற்கு பிளான்செட் (planchette) எனும் பலகையினை உபயோகிப்பார்கள். கல்யாண முருங்கை மரத்தில் பிளான்செட் பலகை செய்தால் அது நன்றாக வரும். தீய ஆவிகள் உடலில் பீடித்தவர்கள் பல மொழிகளில் பேசுவதுண்டு. ஆங்கிலம் பேசும் மாடு மேய்க்கும் பெண்ணை பார்த்திருக்கிறேன். தீய ஆவிகளுக்கு உடல் தேவைப்படும் போது அவை பீடிக்கின்றன. அப்போது பீடித்த ஆவி தனது மொழியை பீடித்திருப்பவர் மூலமாக பேசுகிறது. அது ஒரு கனவு போன்ற உணர்வு. ரோஸ்மேரி ப்ரவுன் என்பவருக்கு பல புகழ்பெற்ற கம்போசர்களின் ஆவிகள் (பீத்தோவன் உட்பட) சிம்பொனிகளைச் சொல்ல அவர் எழுதியிருக்கிறார். பிறகு அவளிடம் நோனா என்ற ஆவி வந்தது. நோனா ட்ரான்ஸில் பேசியதெனினும் என்ன பேசுகிறது எனத் தெரியவில்லை. ஆனால் நோனாவின் மூலமாக நிஜமாகவே பேசியது யாரெனில் எகிப்து நாட்டின் பாரோ காலத்திய இளவரசன்தான். அவன் இறந்த பிறகும் 2000 வருடமாய் மறுபிறவி அடையாமல் இருப்பவன் என பின்பு ஆராய்ச்சி மூலமாகத் தெரிய வந்தது.


( விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் நூலகத்தின் ஒரு பகுதி )

ஆவிகளின் குரலைக் கேட்க முடியாது என்பது சரி. மீடியம்கள் நல்லவை தீயவை என ஆவிகளை எப்படி வித்தியாசம் காண்கிறார்கள்?ஒவ்வொரு மீடியத்திற்கும் கைடிங் ஸ்பிரிட் (Guiding Spirit) என்று ஒன்று உண்டு. அதனை ஆங்கிலத்தில் சிலர் கார்டியன் ஏஞ்சல் (guardian angel) என்பார்கள். அதுதான் மீடியம்களை வழிநடத்திச் செல்லும். அத்தகைய ஒரு கார்டியன் ஏஞ்சல் இல்லாமல் புண்ணிய ஆவிகளிடம் அணுக இயலாது. அவற்றின் உதவி இல்லாமல் புண்ணிய ஆவிகளிடம் பேசவும் இயலாது. கார்டியன் ஏஞ்சலே எல்லாவிதமான அறிவுரைகளையும் கொடுப்பது மட்டுமின்றி தீய ஆவிகளையும் காட்டிக்கொடுக்கும். ஒரு பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவது போலத்தான் இந்த கைடிங் ஸ்பிரிட்டும். அவை சக்திவாய்ந்தவையாக அமைந்துவிட்டால் மீடியம்களுக்கு மிகவும் நல்லது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்வு சிவயோகியால்தான் நன்கு அமைந்தது. முன்பே சொனதுபோல எனது சிறுவயதில் தாத்தா மரணமே எனக்குத் திருப்பு முனையாய் அமைந்தது. முதலில் சிறுவயது ந்ண்பர்களுக்குள் 13 வயதில் போட்டி நடந்தது. சுடுகாட்டில் ஒரு பொருளை வைத்து வர வேண்டும். இருட்டில் தான் போகவேண்டும். டார்ச் கிடையாது. கையில் எந்த ஆயுதமும் எடுத்துபோகக் கூடாது. அப்போதே நான் பயமின்றி தனியாகப் போனேன். அதற்காக அம்மாவிடம் நன்கு அடி வாங்கினேன். ஆனால் என்னால் தைரியமாய்ப் போக முடிந்தது.

1973ல் இறந்துவிட்ட தாத்தாவுடன் பேசி எண்ணி வ்ய்ஜா பலகையை உபயோகிக்க அப்போது சிவயோகியை வந்தார். பின்பு அவரே எனது கார்டியன் ஏஞ்சலானார். தாமோதரன் என்பது சிவயோகியின் பெயர். அவரும் நானும் இரவு ஆரம்பித்து ஆறுமாதங்களுக்கு காலைவரை பேசுவோம். முதலில் நான் அவர் சொல்வதையெல்லாம் பிளான்சட் போர்டில் பதித்திருக்கும் பேனா மூலம் எழுதுவேன். பிறகு ஒருநாள் பேனாவை எடுத்துவிட்டு எழுதத் தொடங்கியதும் அது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் எனும் முறையில் ஆரம்பித்தது. அப்போது எனது முன்கையை திடீரென கனமாகி யாரோ பற்றி இழுப்பது போன்றும் இருக்கும்.

ஒருமுறை சிவயோகி என்னிடம் நாற்காலி போடச் சொன்னார். முழுமையாய் இருளில் உட்கார்ந்திருந்தோம். பார்வையாளர் இருவர். கால் இருக்கும் இடத்தில் வட்டம் வரைந்தோம். நாற்காலியில் சாக் பவுடர் பரப்பியிருந்தோம். காலடி ஓசை கேட்டோம். திடீரென நாற்காலி இழுபடும் சப்தம். பார்வையாளராய் இருந்த தலைமையாசிரியர் எங்களை இழுத்தபடி ஓடிவிட்டார். நடந்துவந்த உருவம் மிகவும் வெளிச்சமான உருவம். அவரே சிவயோகி. இறைவனைப் போன்ற பிரகாசமும் ஜோதியுமாய் இருந்தார்.

மதுரை ஆதீன குரு ஸ்ரீலஸ்ஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள். அவர் ”இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்” என்ற நூலை எழுதியிருந்தார். அவர் தான் எனக்குத் தந்த முதல் அறிவுரை எல்லாரையும் மதிக்க வேண்டும் என்பதே. நண்பனாய் இருந்தாலும் விரோதியாய் இருந்தாலும் அவனுக்குள்ளிருக்கும் ஆத்மாவை மதிக்கணும் என்பார். அதுபோலத் தான் இறந்த ஆத்மாக்களை மதித்து நடந்தால் அவை நமக்கு வழிகாட்டும்.கர்மா என்றால் என்ன? மறுபிறவிக்கும் கர்மாவுக்குமான தொடர்பு என்ன?கர்மா என்பதுதான் கர்மவினையாகும். முறையாய் அந்த வினைகள் தீரவில்லையெனில் எல்லாவற்றிலும் தடைகள் வரும். ஒருவன் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வாலிபனாகி பின் வயதாகி மரணமடையும் போது நிம்மதியற்ற நிலை வரும். எத்தனைதான் இறைவனை வணங்கினாலும் கர்மாவை எவராலும் மாற்ற இயலாது. அத்தகைய கர்மா அல்லது கர்மவினைகளைத் தீர்க்க ஆவிகள் சற்று குறுக்குவழியில் உதவும். ஆனால் முழுமையாய் அல்ல. அவைசொல்லும் பரிகாரங்களைச் செய்து வந்தால் பத்துவருடக் கஷ்டம் சற்று குறையும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் கடவுளை வேண்டினாலும் அவனது கர்மாவைத் தீர்ப்பதென்பது இயலாத காரியம். எனது கார்டியன் ஏஞ்சலான சிவயோகி சொல்வது என்னவென்றால் வழிப்பிரயாணம் செய்பவன் ஆலமரத்தடியில் தங்கி உண்டு இளைப்பாறிச் செல்வது போன்றதே பக்தி. மீதி இருக்கும் தூரத்தையும் கர்மாவைச் சுமப்பவனே கடக்க வேண்டும். அந்த இளைப்பாறலில் அவனுக்கு சற்று தெம்பும் உரமும் கிடைக்கும் ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும் ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.