கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

சனி, 28 செப்டம்பர், 2013

யார் மந்திரம் செய்யலாம்?மந்திரம் செய்ய தகுதியானஇடம்

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.





யார் மந்திரம் செய்யலாம்?




மந்திரம் செய்பவர் நன்றாக மந்திரங்களை கற்றிருக்க வேண்டும். கற்றுக்கொடுத்த ஆசானிடமிருந்து குரு அபிஷேகம் பெற்றிக்க வேண்டும். குரு அபிஷேகம் பெறாமல் மந்திரங்கள் செய்தால் அது பலிக்காது. மந்திரங்கள் செய்யும்போது மந்திரச் சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும். பூஜை பொருட்களையும் சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மந்திரம் பலிக்காது. சிலவேளை மந்திரக்காரருக்கே ஆபத்து வரும்.


மந்திரம் செய்ய தகுதியான, அமைதியான இடம்


1. ஆற்றங்கரையில் பூஜைப்பொருட்களை வைத்து ஆற்று நீரில் இருந்து மந்திரம் செய்யலாம்
2. அமைதியான இடம் , ஆலயம், அல்லது சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து செய்யலாம். ஆள் நடமாட்டமில்லாத காடுகளிலிருந்தும் செய்யலாம்.


அச்சரங்கள் சில யந்திரங்கள்


மந்திரங்கள் செய்யும்போது செம்புத் தகட்டில் அச்சரம் எழுதி அதில் மந்திர பதித்து செய்து கொள்பவர்களின் பெயர்களையும் அதில் பதித்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.




ஜோசியம் பற்றிய சில தகவல்கள்


பொதுவாக ஜோசியத்தை நம்பாதவர்கள் யாரும் கிடையாது. அனைவருமே ஜோசியத்தை நமபுகிறவர்களும் கிரகத்திற்கு பயப்படுகின்றவர்களுமே இருப்பார்கள். ஜனங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தம்முடைய கிரகநிலை சரியில்லை என்றே கருதுவார்கள். இதன் காரணமாக தன் கஷ்டத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக ஒரு ஜோசியரை நாடி தன்னுடைய கிரக நிலையை அறிந்த அதற்கேற்ற பரிகாரம் செய்வதுண்டு



மந்திரங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள்



1. பணச்செலவு
2. நேர விரயம்
3. ஏமாற்றம்
4. தோல்வி
5. நோய்கள்
6. சமாதனம் சீர்குலைவு
7. பயம்
8. சண்டைகள், வெட்டுப்பழி, குத்துப்பழிகள் ஏற்படுதல்
9. கொலைகள், கொள்ளைகள்
10. மரணம்.




பில்லி சூனியங்களின் வகைகள்

பில்லி சூனியம் என்பது யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு


2. சுடுகாட்டு சாம்பல்



தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும்.


3. முட்டை


ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும்.


4. ஏந்திரம்




செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து ஏந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர்.


5. சுண்ணாம்பு


சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும்.




6. தேசிக்காய்


சில தேசிக்காய்களை (எலுமிச்சைப்பழம்) கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும்.


7. பொம்மை


சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம்.


ஆண்பெண் வசிய விளக்கம்



வசியமாக்க வேண்டிவரின் உடை ஒன்றில் அவருடைய பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து அதை தினமும் விளக்குக்கு அருகில் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பலிக்கும்.


1. தலைமுடி



வசியமாக்க வேண்டியவரின் தலை முடியினைப் பூஜையில் வைத்து துளசிக் செடியின் வேரைப் பிடுங்கி தலைமுடியை அதில் சுருட்டி காலை, மாலை, மந்திர, வசியம் செய்ய வேண்டும். 7 நாட்கள் செய்தால் பலிக்கும்


2. ஐந்து வகை எண்ணெய்



ஐந்து வகையான எண்ணெயை எடுத்து போத்தலில் அல்லது ஒரு குப்பியில் கலந்து அதை வசியமாக்க வேண்டியவர்களின் பெயருக்கு வசிய மந்திரம் செய்ய வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஓர் சுரையில் போட்டு அல்லது இடுப்பில் கட்டி கொள்ள வேண்டும் 21 நாட்களில் பலிக்கும்.


3. ஐந்து வகையான வேர்



ஐந்து வகையான வேர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பல் எடுத்து அதை பூஜை தட்டில் பெண், ஆண் வசிய சக்கரத்தை சாம்பலில் வரைந்து வசியமாக்க வேண்டியவரின் பெயரை அதில் எழுதி, வசிய மந்திர பூஜை செய்து சாம்பலில் சிறியதை சுரையில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அலலது நெற்றியில் பூசிக் கொள்ளலாம். சிறிது சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவியும் விடலாம். 7 நாள் செய்தால் பலிக்கும்.


4. சிறுநீர்


குப்பைமேனி செடியை பிடுங்கி கொண்டு வந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரில் போட்டு மூன்று நாள் சென்ற பின் அதன் வேரை துண்டித்து மந்திரப் பூஜையில் வைத்து உச்சாடனம் செய்து சுரையில் போட்டு, கழுத்தில் கட்டிக் கொண்டால் அல்லது இடுப்பில் கட்டிக் கொண்டால் பலிக்கும்.


5. தலைப்பனை ஓலை


வசியமாகக் வேண்டியவர்களின் வீட்டிலிருந்து 7 உப்புக்கற்களை எடுத்துக் கொண்டு வந்து தலைப்பனை ஓலையில் சக்கரம் வரைந்து அதில் பெயர் எழுதி, மந்திர பூஜையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்து தாலிப்பனை ஓலையை வசியமாக்க வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் புதைக்க வேண்டும். 7 உப்பக்கற்களை வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டு விட வேண்டும். இவ்விதமாக பாவித்தால் பலிக்கும்.


மந்திரம் செய்யும் முறை



மந்திரங்கள் செய்வதற்கு முதலாவது கும்பம் பாவிக்க வேண்டும். ஒரு செம்பு அல்லது குடத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் நீர் நிரப்பி, மா இலைகள் வைத்து, கற்பூரம் கொழுத்தி ஆவிகளின் மந்திரங்களை சொல்லி ஆவிகைள அழைக்க வேண்டும். பிறகு ஒரு தேசிக்காய் எடுத்து அதற்கு உருவம் அமைத்து, பூக்களால் அலங்கரித்து, பூஜைக்கான பொருள்களை வைத்து, மந்திர பூழை செய்ய வேண்டும். இலையில் அரிசி வைத்து அதில் கும்பத்தை வைக்க வேண்டும்.


பூஜை பொருட்கள் இரு வகை


1. பால், பொங்கல், பழவகை, கடலை, அவல், தாம்பூலம் பூக்கள்
2. கோழி, சாராயம், முட்டை, பூக்கள், சுருட்டு, எண்ணெய், கலந்த தீனிவகை