ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீ
ங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.
ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.
கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.
ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி
ஓம் சகல நாயகி போற்றி ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி ஓம் தர்ம பரிபாலதையே போற்றி ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி ஓம் ஹரத்துள்ளாயே போற்றி ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி ஓம் சிங்க முகமுடையவலே போற்றி ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி ஓம் கர்ணகோர ரூபமே போற்றி ஓம் ஞானவழி எழிலே போற்றி ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி ஓம் வானம் பூமி காபாயே போற்றி ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி ஓம் சித்தி வழி சித்தியே போற்றி ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி ஓம் தயை சுவை மோகனமே போற்றி ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி ஓம் பத்ரகாளி வடிவே போற்றி ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி ஓம் சூலினியின் துணையே போற்றி ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி ஓம் மாவீர கோகிலமே போற்றி ஓம் சர்வபாப விநாசனி போற்றி ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி ஓம் உகந்தது தருவாயே போற்றி ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி ஓம் கணித்தது புகுவாயே போற்றி ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி ஓம் ஆபத் சகாயமே போற்றி ஓம் ஆகாய வெளிவழியே போற்றி ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி ஓம் பார்வதி மய சக்தியே போற்றி ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி ஓம் பிரணவரூப ஒலியே போற்றி ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி ஓம் புவன யோக வீரமே போற்றி ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி ஓம் புத பேத நாசினி போற்றி ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி ஓம் வனநேச பாரிதியே போற்றி ஓம் குண ரூப சாரதியே போற்றி ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி ஓம் டமருகம் தரித்தாய் போற்றி ஓம் சூலமும் கொண்டாய் போற்றி ஓம் பக்தரின் பிரியமே போற்றி ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி ஓம் ராஜராஜ தேவியே போற்றி ஓம் கங்காதர காருண்யே போற்றி ஓம் வித்தைக் கதிபதியே போற்றி ஓம் வித்வ மூல சித்தமே போற்றி ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி ஓம் காமதேனு மடியே போற்றி ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி ஓம் மகாபல மாசக்தியே போற்றி ஓம் மகா பைரவி தேவியே போற்றி ஓம் நலம் தரும் நாயகியே போற்றி ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி
ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் தோற்றம்
நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்