கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.


தேற்றாங்கொட்டைகள் தேற்றா என்னும் மரத்தின் கொட்டை, தேற்றாங்கொட்டை எனப்படுகின்றது. இதனைப் பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள். தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப் படும் தேற்றா மரத்தின் விதை. குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி
நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்


இல்லி அல்லது இல்லம் என்று ஒரு மரம் இருப்பதாகத் தெரிகின்றது. இதனை
clearing-nut tree என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. இதனை தேற்றாங்கொட்டைகள் என்றும் கூறுவார்கள் என்னும் குறிப்பு உள்ளது. புறநானூற்றிலே உள்ள குறிப்பும் வலுவூட்டுகின்றது


தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது
தேற்றா மரத்திற்கு இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது


தேத்தாங்கொட்டையைத் தெற்றுக்காய் (strychnos potatorum) எனபர். ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.

தெளிந்த நீர் கொண்ட காய் தேங்காய்.
தெள் < தெள்ளு < தெளி < தெள்ளுக்காய் < தேத்தாங்காய்

பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர். தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.