கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஸ்ரீ தெய்வீக சக்கரங்கள்

ஸ்ரீ சுதர்ஸன சக்கரம்

ஸ்ரீ சுதர்ஸன சக்கரம். பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் முன் அமர்ந்து சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும்.

மஹா விஷ்ணுவின் சக்தி இந்த சுதர்ஸன சக்கரத்தில் உருவேற்றப்பட்டுள்ளதால் இது இருக்கும் இடத்தில் செல்வச் செழிப்பு மேலோங்கும்.


ஸ்ரீ சக்கரம்.

ஜோதிடர்கள், நீதியஸ்தர்கள் ஆகியோருக்கு வாக்கு பலிதமாகும். அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமாத் துறையிலுள்ளோர், வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சக்கரம் பாதுகாப்பையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும். எதிரிகள் தொல்லை, திருமணத் தடை போன்ற சிரமத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.

உத்யோகம் இல்லாதவர்களுக்கும், பதவி உயர்வு வேண்டுவோருக்கும் நல்ல பலன்களைத் தர வல்லது இந்த ஸ்ரீ சக்கரம்.


ஸ்ரீ வாஸ்து சக்கரம்


இந்த சக்கரத்தை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்து தினமும் தூப தீபம் காட்டி வந்தால் மனைக் குற்றம் நீங்கும்.

தெய்வானுகூலம் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். தனம் விருத்தியாகும். சகல ஜனங்களும் வசியமாவர். புதுவீடு மற்றும் கட்டடங்களைக் கட்டுவோர் இந்த சக்கரத்தை வைத்து பூஜை செய்த பின்னர் கட்டடம் கட்டத் தொடங்கினால் எல்லா மனைக் குற்றங்களும் நீங்கும்.


ஸ்ரீ ஸ்வர்ண குபேர தனாஹர்ஷண சக்கரம்

ஈசனும் பகவானும் ஒன்றே பாகவத உபதேசம் இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் என்பது ஒன்றுதான் எனினும் அது ஒலி, ஒளி, வெப்ப உருவிலும், குளிர் உருவிலும் வந்து நமக்குப் பேருதவியாய் உள்ளது. அதுபோலவே பரம்பொருள் சக்தியாய் இருந்து கொண்டு பல உருவில் மனித குலத்தைக் காக்கிறது. உப சாந்தப் பொருளாய் நின்றவையே தெய்வீக சக்கரங்கள் ஆகும். தெய்வீக சக்கர வழிபாட்டினை வேத சாஸ்திரங்கள் ஊக்குவிக்கின்றன.

எந்த ஒரு எஜமானனுக்கும் சேவகன் தேவை. அதுபோலவே அன்னை மஹாலக்ஷ்மியின் செல்வத்தைக் காக்க குபேரன் என்ற யக்ஷன் நியமிக்கப்பட்டுள்ளான். மஹாலக்ஷ்மியின் ஆணைப்படிதான் குபேரன் செல்வத்தைக் கொடுத்து வருகிறான். கொடுப்பவனை மகிழ்வித்தால் தாராளம் மிகும். குபேரனை தனியாக வழிபடாமல், மஹாலக்ஷ்மியையும் உடன் வழிபடுதல் வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு குபேர மந்திரங்களாலும், மஹாலக்ஷ்மியின் அஷ்ட ஸ்வரூபமான ஆத்ய லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, ஸௌபாக்ய லக்ஷ்மி, அம்ருத லக்ஷ்மி, காம லக்ஷ்மி, ஸத்ய லக்ஷ்மி, போக லக்ஷ்மி, சுப யோக லக்ஷ்மி ஆகிய அவதார சக்திகளாலும், பிச்சை அளிக்க ஏதுமின்றி நெல்லிக் கனியை ஈந்த பெண்ணின் வறுமையை போக்குவதற்கு ஆதிசங்கரர் அருளிய இருபத்தோரு ஸ்லோகங்களைக் கொண்ட கனகதாரா ஸ்தோத்திரங்களாலும் உருவேற்றப்பட்டதுதான் ஸ்ரீ ஸ்வர்ண குபேர தனாஹர்ஷண சக்கரம் ஆகும்திருஷ்டி சக்கரம்பஞ்ச பூதங்களை ஆகர்ஷணம் செய்து ஒரு லக்ஷத்து எட்டு மூல மந்திரங்களால் உருவேற்றி அதிதேவதைகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியுடன் கூடிய முப்பத்து முக்கோடி ப்ரதி அதிதேவதைகளையும் வசீகரித்து ஆவாஹனம் செய்து உருவாக்கப்பட்டது தான் கேட்டதைத் தரும் ஸ்ரீ செல்வ விநாயகர் கவசம் என்னும் திருஷ்டி சக்கரம்.

கண் திருஷ்டி, தொழில் சரிவு போன்ற இன்னல்களை இது உடனே முறியடிக்கும். எதிரிகள் உடனே சரணடைவர். இந்த சக்கரம் இருக்கும் இடத்தில் பில்லி, சூன்ய, ஏவல், செய்வினைகள் போன்ற உபாதைகள் உடனே அகலும். குழந்தைகளுக்கு இந்த சக்கரம் மிகுந்த பாதுகாப்பை வழங்கும். அலுவலகம், தொழிற்கூடங்களில் இது ஜன வசீயத்தை உண்டு பண்ணும்.