கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

சனி, 9 நவம்பர், 2013

வசியத்தின் மூல ஆதாரம்

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும்.



போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.


சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது


1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திரச் சித்தர்கள்
17. எந்திரச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்திரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார். பிறகு திபெத்தியர்களின் பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார். இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர். இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால் எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.