கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மாயன் நாகரீகம்மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது[மேற்கோள் தேவை]. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன்.

தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன.

கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம்.

உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.

இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.

தமிழ் திரு ஆலயங்களின் வடிவிலேயே பிரமிடுகள் என்னும் எகிப்திய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பலாம். கோயில் என்பது அரசனின் வீடு என்னும் பொருள் படும். அரசர்கள் இறந்தபின்னும் வாழும் வீடுதான் பிரமிடுகள். மயன்களின் பிரமிடுகளும் இதில் தமிழ் கட்டிட கலை என்கிறார்கள். தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளன.

தமிழ் மண்ணில் இருந்த நாகர்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இவர்கள் அறிவீர் சிறந்தவர்கள். இவர்கள் தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம்.

அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. நாகர் , நகார், நகர் என்கிற வார்த்தைகளில் நான் ஒரு ஒற்றுமையை காண்கிறேன்.

நகார் என்பது மாளிகை கட்ட பயன்படும் ஒரு பொருள். நாகர் என்பவர்கள் தமிழர்கள். நகர் என்பது மாளிகை அமைந்த பகுதி. நகரம் அமைப்பவர்கள் மாயன்கள். ( தலை சுத்துதா ? ). நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்ந்தவர்கள்.

இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.

இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்று நிறைய சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலோன் என்பது கூட சிவலங்கை என்பதின் திரிபோ என்னவோ.

மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறை தமிழர்களின் திருகனித பஞ்சாங்கம் போல் உள்ளதாம். பஞ்சாங்கம் என்பது தமிழ் வார்த்தை போல் தெரிகிறது. பஞ்சம் என்பதை தமிழ் கொண்டு விளங்க வேண்டும் என்றால் - தமிழில் நான்கு தினைகளே ஆரம்பத்தில் இருந்ததாம்.
இந்த நான்கு திணைகளில் பஞ்சம் ( ஐந்தாம் நிலை ) ஏற்பட்டால் அது பாலை ஆகுமாம். அதாவது பஞ்சம் உள்ள பகுதி ஆகுமாம். ஐந்தாம் பகுதி பஞ்ச பகுதி.

நிரம்பவே என் சரக்கும் இருந்தாலும் - மாயன்கள் தமிழர்கள், அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள். ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

மொத்தத்தில் கதை இதுதான் தமிழன் அழிந்து கொண்டே உள்ளான்.

ஆப்பிள் இபோனில் பயன்படுத்தப்படும் குறுக்குவழி ( short cut நு அதானேங்க ? ) யாவும் மாயன் குறி சித்திரங்கள் போல் உள்ளதாம்.
கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் மாயன்கள். அதி-தேய்த்தவன் - அதிதியன் - அதித்ய என்பவை கதிரவனே. திருக்குறள் அதி பகலன் முதற்றே உலகு என்கிறாராம். அகர ( ஆல்பா ) முதல எழுத்து எல்லாம் - எனபது உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கும் பொருத்தும்.

அடுத்த பெரும் வெற்றியாக இவர்கள் வாழ்ந்த நாட்டின் வருங்காலதியவர்கள் வெல்வார்கள். அவர்கள் பிரேசில் நாட்டவர்கள் ஆவார்கள் என்று ஆருடம் உள்ளதாம். பிரேசில் தற்போது பொருளாதார ஆற்றலாக ஆகி வருவது இன்னும் புருவம் உயர்த்துகிறது.

மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது மயான் மக்கள் என்பதை அறிந்து வியப்பும் அடைந்திருக்கிறோம்.
இத்தகைய மயான் மக்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்றால் அதிசயப்பட வேண்டாம். அமெக்காவில் தான் வாழ்ந்தார்கள் முகத்தில் பல வண்ண கோடு போட்டு தலையில் பறவையின் இறகுகளானால் தொப்பி அணிந்து மிருக தோல்களை ஆடையாக அணிந்து அமெக்காவின் பழங்குடி மக்கள் என காட்டப்படுவார்களே செவ்விந்தியர்கள் அவர்கள் தான் மாயர்கள்,

அவர்களின் நாகரீகம் தான் மயான் நாகரீகம் அவர்கள் காலத்தை கி.மு. 2600-ல் தொடங்கியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2600 எல்லாம் இல்லை, மாயர்களின் காலம் அதற்கு முன்பே துவங்குகிறது என்று ஒரு சாரர் கருதுகிறார்க்ள. அப்படி சொல்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாக போப்பல் வூ என்ற மாயர்களின் இதிகாச புத்தகத்தை காட்டுகிறார்கள். எது எப்படியோ மாயர்களின் காலம் என்பது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது பல அரசியல் காரணங்களால் மாயர்கள் வாழ்ந்த அமெரிக்க பகுதி மெக்சிகோ, கௌத மாலா, பெலிஸ், ஹோண்டுராஸ், எல் சார் வாடார், என்று தனிதனியாக பிரிந்து கிடக்கிறது.

விண்வெளியில் பால்வழி என்ற ஒரு பகுதியியை நாம் அறிவோம். இந்த பால்வழி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது ரேடார் கருவிகள் உருவான பிறகு அதாவது 1945-ல் பிறகு தான். ஆனால் மாயர்கள் 5000-வருடத்திற்கு முன்பே பால்வழி மண்டலத்தை நன்கு அறிந்து அதை பற்றிய விவரங்களை குறித்து வைத்து இருக்கிறார்கள்.
மேலும் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரியன் நெபுல்லா என்ற விண்வெளி கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1880-ல் தான் இந்த விண்மீன்கள் தொகுப்பு புகைபடமாக எடுக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் வயதுடைய மாயன் ஒவியங்களிளும் சுவர் சிற்பங்களிளும் இந்த விண்வெளி கூட்டத்தை துல்லியமாக வரைந்து செதுக்கி வைத்துள்ளனர்.

பண்டைய இந்திய வானியல் ஆய்வாளர்களும் இதற்கு பிரஜாபதி என பெயரிட்டு அழைத்துள்ளனர். ஆனால் நவீன விஞ்ஞானம் பல கருவிகளை வைத்து கண்டுபிடித்த ஒரியன் நெபுலாவை மாயர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் கண்டறிந்து உள்ளது விடை கிடைக்காத அதிசயமாக இன்று நிற்கிறது.

மெக்சிகோவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமிடு ஒன்று உள்ளது. அது சீசென் யீட் என்ற நகரில் இன்றும் உள்ளது. இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த பிரமீட்டின் நிழல் இரண்டு சிறகுகள் முளைத்த பாம்புபோல வருடம் தோறும் மார்ச் 21-ம் தேதியும், செப்டம்பர் 23-ம் தேதியும் பூமியின் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை காண உலகெங்கும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் அந்த நகரத்தில் குவிகிறார்கள்.
பிரமீட்டின் நிழல் சிறகு முறைத்த பாம்பாக விழும்படி மாயர்கள் கட்டிடத்தை ஏன் உருவாக்க வேண்டுமென்று கேட்டால் ஆதிகால மாயன் மதத்தின் கடவுளான கேட்ஸல்கோயாட்டல் என்பவரின் உருவம் சிறகு உள்ள பாம்பு வடிவம் தான். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. வேண்டு மென்றால் மாயர்களின் கட்டிட கலையின் திறமையை பாராட்டலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை இதையும் தாண்டிய அதிசயமாகும், அதாவது ஒர வருடத்தில் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்கள் மார்ச் 21-ம் செம்டம்பர் 23-ம் தேதியும் தான் மாயர்கள் காலத்தை அளப்பதில் எத்தனை திறமைசாலிகளாக இருந்தால், இது சாத்தியம்,

சூரியன் இயக்கத்தை மிக நூணுக்கமாக ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே சம நோக்கு நாளையும், நிழல் உருவம் வரும்படியான தோற்றத்தையும் உருவாக்க முடியும். சூரியனுடைய இயக்கத்தை மட்டுமல்ல சந்திரனின் சலனத்தையும் அவர்கள் நன்கு அறிந்து நாட்களை பற்றிய கணிதத்தை ஏற்படுத்தி இன்று நாம் உபயோகப்படுத்துகின்ற நாட்காட்டி போன்ற காலண்டரையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காலண்டரின் பெயர்தான் ஒரியன் காலண்டர்.

ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன் காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான். ஆனால் மாதங்கள் பதினெட்டு, ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும். இந்த காலண்டருக்கு ஹாப் என்று பெயர்.
இந்த மாதத்தின் நாட்களை கூட்டினால் 360 நாட்கள் தான் வரும். மீதமுள்ள ஐந்து நாட்களை அதிஸ்ட்டமில்லாத நாட்கள் என்று மாயர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். மேலும் இந்த ஹாப் காலண்டர் சாதாரணமக்கள் உபயோகபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான்.

தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு, இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம், அதாவது இருநூற்றி அறுபது நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப், இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்,

அந்த இணைப்பு ஏற்படும் வருடத்தல் உலகில் மாபெரு மாற்றங்கள் ஏற்படும் என மாயர்கள் சொல்கிறார்கள் இதுவரை உலகில் ஏற்பட்ட பெரிய யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், மாபெரும் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்துமே இத்தகைய வருட சந்ததியில் தான் நடந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். இந்த இஸல்கின் காலண்டர்தான் 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதியோடு முடிவடைகிறது. அந்த தேதியில் உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கும் என்று மாயன் தீர்க்கதரிசனம் சொல்கிறது.
இந்த மாயன் தீர்க்க தரிசனம் கண்டிப்பாக பலிக்குமா? இதுவரை மாயன் தீர்க்க தரிசனத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எதாவது உண்டா? என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு அடுக்கடுக்கான பதில்களை தீர்க்க தரிசனத்தின் ஆதாரவாளர்கள் தருகிறார்கள். அந்த ஆதாரங்கள் இயேசுநாதர் பிறப்பதற்கு முந்தைய காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரையில் நீளுகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை பார்த்தாலே நெஞ்சை அடைத்து கொண்டுவரும்.

மாயர்களின் அழிவு யாரால் ஏற்படும் அந்த இனம் அழிந்த பிறகு அவர்கள் வாழ்ந்த பகுதியான அமெரிக்கா எப்படி வளரும்? உலகத்தை எப்படி ஆட்டிவிக்கும்? அமெரிக்க, ரஷ்ய பனிப்போர், செங்கிஸ்கான், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின் மா.சே.தூங், மகாத்மா காந்தி போன்றோர்களை பற்றியும் மிக துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.

உலகம் அழிய போகும் காலத்தில் மனிதர்களின் மனோநிலை எப்படி மாறி அமைந்திருக்கும்? இயற்கை சூழல் எப்படி மாறும்? அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை எவ்வாறு சுருக்கும். என்ற விவரங்கள் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் ஒரளவு நடந்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ஒரியன் தீர்க்கதரிசனம் நடந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால் இந்த தீர்க்க தரிசனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது.
அது என்ன சிக்கல் என்று சிறிது நேரம் கழித்து பார்ப்போம். அதற்கு முன்பாக தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லப்படுபவைகள் என்ன? அது மனிதர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பதை பார்ப்போம். தீர்க்க தரிசனம் என்ற வார்த்தைக்கு நேரிடையான தமிழ் பொருள் உறுதியான பார்வை என்பதாகும் இந்த சக்தி கடந்த காலம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்ந்தவர்களுக்கே ஏற்படும் என்று யோக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

யோக சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் எழுதிய பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல் எந்தயோகி தனது மனதை நினைத்த மாத்திரத்தில் புறப்பொருளிலிருந்து விடுவித்து கொள்கிறானோ அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் பார்க்கும் தகுதி பெற்றிருக்கிறானோ அவனே முக்காலத்தையும் உணர முடியும் என்று கூறி அதற்கான மனபயிற்சியும் உடல் பயிற்சியையும் விரிவாக கூறி செல்கிறது..

புகழ் பெற்றிருந்த மாயன் நாகரீகம் கிறிஸ்த்துவ மத வெறியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சில எச்சசொச்சங்கள் தான் மீதம் கிடைக்கிறது. ஆதிகால ஐரோப்பாவிலும், அரேபியாவிலும் ஒரு மூடதனம் மிக கொடுரமாக ஆட்சி செய்து வந்தது. அதாவது பைபிளில் சொல்லப்படாத கருத்துக்களோ அல்லது கூர்-ஆனில் இல்லாத கருத்துக்களோ எந்த தனிமனிதனோ அல்லது புத்தகமோ அல்லது நிறுவனமோ சொன்னால் அதை சாத்தானின் வேலை என்று கருதி முற்றிலும் அழித்துவிடுவார்கள்.
அவர்களால் அழிக்கப்பட்ட அறிவு கருவூலங்கள் ஏராளம். இதனால் உலகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளும் என்று அடித்து சொல்லலாம். கி.பி. 1517-ம் ஆண்டு நாடு பிடிக்கும் ஆசையில் மாயர்கள் மீது போர் தொடுத்த ஸ்பெயின் நாட்டு கிறிஸ்த்துவர்கள் 90% மாயன் மக்களையும், 95% மாயன் கலாச்சார அறிவியல் சின்னங்களையும் பல அரிய நூல்களையும் அழித்தே விட்டார்கள் அப்படி அழிக்கப்பட்ட பல பொருட்களின் ஒரியன் காலெண்டன் சில பகுதிகளும் அடங்கியிருக்கலாம். மாயன் நாட்காட்டியில் பல பகுதிகள் இன்று கிடைப்பதில்லை என்றும் தற்போது கிடைத்திருப்பது முழுமையானதாக இருக்க வாய்ப்பில்லை