கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வெள்ளி, 27 மே, 2011

பறக்கும் தட்டுக்களின் இரகசிய

மாற்றுக் கிரகங்களில் புவியில் வாழ்வதைப் போல பண்ணப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற சந்தேகம் மனிதனை தொடர்ந்து வாட்டி வருகிறது. இந்தவகையில் வேறு கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுக்கள் வருவதாக பேசப்பட்டு வருவதும், இது குறித்த தகவல்கள் வெளிவருவதும் வழமையாக இருந்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை இன்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப்பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதாகும். இதில் சுவை தரும் விடயம் என்னவென்றால் கடந்த 1997 ல் பிரிட்டன் கொன்ஸ்ச வேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் காவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான தோற்றம் ஒன்றும் அவதானிக்கப்பட்டதாகும் என்றும் இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது. இந்த பறக்கும்தட்டு மூக்கோண வடிவம் கொண்டதாக இருந்தது, சகல திசைகளிலும் ஒளிர்வுகளை வீசியபடி நின்றது, இதன் முன்புறத்திலும் ஒளிவெள்ளம் பெருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பறக்கும் தட்டு' எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள், வானத்தில் தென்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


இதை அடிப்படையாகக்கொண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் கலையரசி என்று திரைப்படம் வந்தது.


இந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் மெர்சிசைட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக பலர் கூறினர்.

அன்று இரவு 10.30 மணி முதல் 11 மணிவரை இவற்றை பார்த்ததாக கூறினர். 4 தட்டுகள் காணப்பட்டதாகவும், அவை தகதகவென ஜொலித்தபடி, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற தீப்பந்து போன்று தோற்றம் அளித்ததாகவும் அவர்கள் கூறினர்.

விமானங்கள் வேகமாக கடந்து செல்லும்போது மட்டும், அத்தட்டுகளின் வெளிச்சம் சற்று மங்கி விட்டதாக அவர்கள் கூறினர். இரவு 11 மணிக்கு பிறகு, அத்தட்டுகள் மேகக்கூட்டத்துக்குள் புகுந்து மறைந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்