கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

சனி, 20 ஜூலை, 2013

வேத சார்புடைய நூல்கள், வேத சார்பற்ற நூல்கள்

கி.பி. 413-ஆம் ஆண்டில் முக்கியமான பௌத்த ஆகமங்கள் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. அங்குள்ள புத்த மடாலயங் களில் இன்றளவும் அவை பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தீர்க்க ஆகமம் மத்தயம ஆகமம் ஈக்கோட்டர ஆகமம் சம்யுக்த ஆகமம் யோக நூல்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வேத சார்புடைய நூல்கள். வேத சார்பற்ற நூல்கள். வேதசார்புடைய யோக நூல் கள் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவை வேதங்களின் அடிப்படையில் உருவானவை அல்ல. சில வேத சார்புடைய யோக நூல்களில், வேதங்கள் கூறும் கருத்துகளுக்கு எதிரான சில கருத்து கள்கூட உள்ளன. நாம் தந்திர யோக நூல்கள் எனக் கருதும் பல நூல்களும் வேத சார்பற்றவையாகவே உள்ளன. இவை வேதங்களை உன்னதமானவை என்று கருதுவதில்லை ஆதி காலத்தில் தந்திர யோக சூத்திரங் கள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. ஒரு குருவிடமிருந்து அவரது சீடர்களுக்கு வாய் வழியாகவே அவை கற்பிக்கப்பட் டன. மிகவும் பிற்பட்ட காலத்திலேயே இவை தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் எழுதி வைக்கப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பல அரிய தந்திர யோக ரகசியங்கள் அழிந்தும் போயின. தந்திர யோக நூல்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வேத சார்புடைய நூல்கள். வேத சார்பற்ற நூல்கள். வேதசார்புடைய தந்திர யோக நூல்கள் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவை வேதங் களின் அடிப்படையில் உருவானவை அல்ல. சில வேத சார்புடைய தந்திர யோக நூல்களில், வேதங்கள் கூறும் கருத்துகளுக்கு எதிரான சில கருத்து கள்கூட உள்ளன. இன்று நாம் தந்திர யோக நூல்கள் எனக் கருதும் பல நூல்களும் வேத சார்பற்றவையாகவே உள்ளன. இவை வேதங்களை உன்னதமானவை என்று கருதுவதில்லை! தந்திர யோக நூல்கள் 1. ஆகமங்கள். 2. நிகமங்கள். இவற்றுள் மிக முக்கியமானவை ஆகமங்களே. எனவே அவை குறித்து சற்றே விரிவாகக் காணலாம். ஆகமங்கள் ஆகமங்கள் வேதங்களை ஏற்றுக் கொண்டாலும் அவை வேதங்களிலிருந்து உருவானவை அல்ல. இவை வேதங்களுக்கு முற்பட்டவை என்ற கருத்தும் உள்ளது. பல உபநிடதங்களுக்கு இந்த ஆகமங்களே மூலமாக உள்ளன. ஆகமங்கள் அனைத்துமே அடிப்படையில் நான்கு விதமான செய்திகளையே பேசுகின்றன. 1. ஞானம். 2. யோகம். 3. சடங்குகள், கர்மங்கள். 4. தர்மவிதிகள், ஒழுக்க விதிகள். இவற்றுள் ஞானம், யோகம் ஆகிய இரண்டிற்கு மட்டுமே நமது சித்தர்கள் முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இவை தவிர, தந்திரம், மந்திரம், யந்திரம் ஆகியவையும் ஆகமங்களில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நான்கு வகையான ஆகமங்கள் மதத்தின் அடிப்படையில் ஆகமங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. வைணவ ஆகமங்கள். 2. சைவ ஆகமங்கள். 3. சாக்த ஆகமங்கள். 4. பௌத்த ஆகமங்கள். வைணவ ஆகமங்கள் மகாவிஷ்ணுவை முதன்மைக் கடவுளாக வணங்குபவர்கள் வைணவர்கள். அவர்களுக்கான ஆகமங்களே வைணவ ஆகமங்கள். வடநாட்டில் வைணவ மும், தென்னாட்டில் சைவ மும் செழித்து வளர்ந்தன என்பது வரலாறு கூறும் உண்மை. இன்றளவும் வைணவம் வடநாட்டில் தான் அதிகமாகப் பின்பற்றப் படுகிறது. மகாவிஷ்ணுவால் முனிவர்களுக்கும் ரிஷி களுக்கும் நேரடியாகக் கற்பிக்கப்பட்டவையே வைண ஆகமங்கள் என்பது வைணவர்களின் நம்பிக்கை. தற்போது மொத்தமாக 215 வைணவ ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் ஈஸ்வர ஆகமம், பவிஷ்கர ஆகமம், பரம ஆகமம், பிர்கத் பிரம்மா, ஞானாமிர்த சாரம் போன்றவை மிக முக்கியமான ஆகமங்களாகக் கருதப் படுகின்றன. வைணவ ஆகமங்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட் டுள்ளன. 1. வைகானசம். 2. பாஞ்சராத்ரம்.. 3. பிரதிஷ்டசாரம். 4. விஞ்ஞான லலிதா. இவற்றுள் வைகானசம் என்பது வைகானச முனிவரால் அவரது சீடர்களான மரீசி, பிருகு போன்ற முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் தொகுக்கப்பட்டவை என்ற கருத்து உள்ளது. வைணவ ஆகமங்களில் மிக முக்கியமானது பாஞ்சராத்ரமே என்றும் பாஞ்சராத்ரத்திலும் ஏழுவகை உண்டு. 1. பிரம்ம பாஞ்சராத்ரம். 2. சைவ பாஞ்சராத்ரம். 3. கௌமார பாஞ்சராத்ரம்.. 4. வசிஷ்ட பாஞ்சராத்ரம். 5. கபில பாஞ்சராத்ரம். 6. கௌதமிய பாஞ்சராத்ரம். 7. நாரத பாஞ்சராத்ரம். சைவ ஆகமங்கள் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்ட மதம்- சைவமதம். வட நாட்டில் வைணவமும் தென்னாட்டில் சைவமும் பிறந்து வளர்ந்தன. தென்னாடு முழுவதும் சைவம் தழைத் திருக்கிறது. வடநாட்டிலும் காஷ்மீர் பகுதியில் சைவ மதம் தொன்றுதொட்டே வழக்கில் உள்ளது. இதை காஷ்மீரத்து சைவ நெறி (அத்வைதம்) என்பார்கள். தென்னாட்டு சைவ நெறிக்கு "சைவ சித்தாந்தம்' என்றும் பெயருண்டு. இந்த இரு பெரும் பிரிவுகளைத் தவிர, வேறு சில சிறுசிறு சைவ நெறிக் குழுக்களும் இந்தியாவில் உள்ளன. காபாலிகர்கள் காளாமுகர்கள் பாசுபதையர்கள் கணபதியேயர்கள் ஆகிய நான்கு வகை கூட்டத்தினர் இவர் களில் முக்கியமானவர்கள். இவர்கள் பெரும் பாலும் வடநாட்டிலேயே காணப்படுகிறனர் இவர்களது வழிபாட்டு முறைகளும், தந்திர யோக முறைகளும் சைவ சித்தாந்த முறைகளிலிருந்தும், காஷ்மீரத்து சைவ நெறியிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவை. பெரும்பாலும் இவர்கள் வாம சார முறைகளையே பின்பற்றுகின்றனர். சைவ ஆகமங்கள் நான்கு பெரும் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. காபாலா ஆகமங்கள். 2. காளாமுக ஆகமங்கள். 3. பாசுபதா ஆகமங்கள். 4. சைவ ஆகமங்கள். இவற்றுள் கடைசி பிரிவான சைவ ஆகமங்களே பெரும்பாலும் "சைவ ஆகமங்கள்' என ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரத்து சைவம், தென்னாட்டு சைவ சித்தாந்தம் ஆகிய இரண்டிற்குமே இவை பொதுவான ஆகமங்களாகும். சைவ ஆகமங்கள் ஆண்- பெண் இருவருக்கும் பொதுவானவை. அனைத்து சாதியினருக்கும் உரியவை. (வைணவ ஆகமங்கள் உயர் சாதி வைணவர்களுக்கு மட்டுமே உரியவை. சூத்திரர்கள் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியாது.) சைவ ஆகமங்கள் அனைத்துமே கலியுகத்திற்கானவை என்ற குறிப்பும் இந்த ஆகமங்களில் காணப்படுகின்றன. தென்னாட்டு சைவ சித்தாந்தம் கூறும் தந்திர யோகமே நமது சித்தர்களின் வாழ்க்கை நெறியாக இருந்தது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். சைவ ஆகமங்களின் இரு பிரிவுகள் சைவ ஆகமங்கள் மொத்தம் 28 உள்ளன. இவற்றுள் முதல் பத்து ஆகமங்களை சிவபேத ஆகமங்கள் என்றும்; மீதமுள்ள 18 ஆகமங்களை ருத்ரபேத ஆகமங்கள் என்றும் அழைக் கிறார்கள். சிவபேத ஆகமங்கள் 1. காமிகா ஆகமம். 2. யோகஜா ஆகமம். 3. சிந்தியா ஆகமம். 4. காரணா ஆகமம். 5. அஜிதா ஆகமம். 6. தீப்தா ஆகமம். 7. சூட்சும ஆகமம். 8. சகஸ்ரக ஆகமம். 9. அம்ஷீமத் ஆகமம். 10. சுப்ர பேத ஆகமம். ருத்ர பேத ஆகமங்கள் 1. விஜய ஆகமம். 2. நிஷ்வாச ஆகமம். 3. சுயம்புவ ஆகமம். 4. அனல ஆகமம். 5. வீர(பத்ர) ஆகமம். 6. ரௌரவ ஆகமம். 7. மகுட ஆகமம். 8. விமல ஆகமம். 9. சந்திரஞான (சந்திரஹாச) ஆகமம். 10. முகபிம்ப ஆகமம். 11. புரோகித (உட்கிட) ஆகமம். 12. லலித ஆகமம். 13. சித்த ஆகமம். 14. சந்தான ஆகமம். 15. சர்வோட்க (நரசிம்ம) ஆகமம். 16. பரமேஷ்வர ஆகமம். 17. கிரண ஆகமம். 18. வதுல (பரகித) ஆகமம். மேற்சொன்ன 28-ம் சைவ ஆகமங்களாகும். சைவ ஆகமங்களுக்கு பல உப ஆகமங்களும் உள்ளன. சாக்த ஆகமங்கள் தற்போது வழக்கில் இருக்கும் தந்திர யோக நூல்களில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சாக்த ஆகமங்களே! தந்திர ஆகமங்கள் என்றால் அது சாக்த ஆகமங்களையே குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது. இறைவனை சக்தி
வடிவமாக ஆராதனை செய்பவர்கள் சாக்தர்கள். சக்தியே அகிலத்தின் ஈஸ்வரி என்பது சாக்த மதத்தின் அடிப்படைக் கொள்கை. சாக்த மகத்தினர் இறைவியை பல உருவங்களில்- பெயர்களில் வழிபடுகின்றனர். சக்தி, காளி, தாரா, தேவி, பைரவி, திரிபுரசுந்தரி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, அம்பிகை, குப்ஜிக மாதா என பல பெயர்கள்- பல உருவங்கள். இந்த ஒவ்வொரு உருவமும் பெயரும் பிரபஞ்ச சக்தியின் வெவ்வேறு கூறுகளின் உருவகங்களே! சாக்த மத ஆகமங்கள் பெரும்பாலும் சிவன்- பார்வதி உரையாடல்கள் சிவன் குரு- பார்வதி சிஷ்யை அல்லது பார்வதி- சிவன் உரையாடல்கள் பார்வதி குருவாகவும், சிவன் பாடம் கேட்கும் சிஷ்யனாகவும் நடையிலேயே அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் புராணங்களை ஒத்த செய்யுள் நடையிலேயே உள்ளன. சாக்த ஆக மங்கள் வைணவ ஆகமங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. ஆனால் சைவ ஆகமங்களுக்கு நெருக்கமானவை. சாக்த ஆகமங்களில் காணப் படும் பல கருத்துகள் சைவ ஆகமங்களிலிருந்து பெறப்பட்டவை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சாக்த ஆகமங்கள் மொத்தமாக 77 உள்ளன. இவற்றுள் முக்கியமானவை என கீழ்கண்டவற் றைக் குறிப்பிடலாம். மகா நிர்வாண தந்திரம். பிரம்மி தந்திரம். குலர்ணவ தந்திரம். குலசாரம். பிரபஞ்சசாரம். தந்திரசாரம். தோடாலா தந்திரம். குப்ஜிக தந்திரம். நில ஆகமம். காயத்ரி தந்திரம். யோகினி தந்திரம். மகா மாயா தந்திரம். தேவிபாத தந்திரம். ருத்ர யாமளை. பிரம்ம யாமளை விஷ்ணு யாமளை. இவற்றுள் கடைசி மூன்றும் யாமளைகள் என்று பெயர் கொண்டிருந்தாலும், சாக்த மதத்தினர் அவற்றையும் ஆகமங்கள் என்றே வகைப்படுத்தியுள்ளனர்