கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

புதன், 29 ஜூன், 2011

மரணம் வரும் நிலை...?









பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த விஷயங்களும், நம் கையில் இல்லை. எல்லாம் மாயை என்கிறார்களே , அதைப் போல - காலம் நம்மை வைத்து ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என்பதே உண்மை. மனித முயற்சிகள் இருப்பதற்கும், அவன் தலை விதி ஒத்துழைக்க வேண்டும். என்கிறார்கள். உங்கள் வாழ்வில் நடைபெறும் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் , உங்கள் செயல் வினைகளே - பின்னிருக்கும். நல்ல படியாக யோசித்து நடந்து இருந்தால் , எத்தனையோ இழப்புகளை நீங்கள் சரி செய்து இருக்கக் கூடும்.

நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது - ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு ஆரம்பியுங்கள். நாம் தான் அந்த பரிகாரம் செய்து விட்டோமே, இறைவனை வழிபடுகிறோமே இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனடி பலனை எதிர் பார்க்காதீர்கள். முறையான இறை வழிபாடு என்பது , ஒரு மரத்தை நட்டி - அதற்க்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வருவதற்கு ஒப்பானது. அதி விரைவில் , உங்களுக்கு அதற்குரிய பலன்கள் கிடைக்கும். ஒரு சந்ததிக்கே அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

ஆண்டவன் அருளால் , எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. வாழ்க்கை முழுவதும் வேதனைப் பட்டு இருக்க வேண்டிய சில சம்பவங்களில் மயிரிழையில் தப்பித்து , ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்க்கு பின்னணியில் இருந்தது வெகு நிச்சயமாக அந்த ஆண்டவன் அனுக்கிரகம் தான். அந்த சக்தியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை , முழு மனதுடன் கூடிய வழிபாடு, சரணாகதி.

அதனால் , கொஞ்சம் கூட நம்பிக்கையை தளர விடாது , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். நிச்சயம் கருணைமழை பொழியும்.

மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்க்குகிறது என்பதை - அகத்திய மாமுனிவரின் - நயனவிதி கூற்றின்படி , மரணத்தை நெருங்கியவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் :

"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"




நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன்.


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"


உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.


"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது - ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் )

"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"


பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்