கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 24 நவம்பர், 2013

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் உன் தகுதியை நீயே உரக்கச் சொல்



எப்படி? வாய்ப்புகள் தாமே வராது. நாம்தான் உருவாக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடவே முடியாது. வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள். நாமும் சாதனையாளர்களாக முயற்சி செய்வோம்.

நீ முடியாது என்று சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டு தான் இருக்கிறான். எவன் தலையிலும் எழுதப்படவில்லை, ‘இவன் தான் சாதிக்கப் பிறந்தவன்’ என்று. நீ சாகப் பிறந்தவன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன். “நமக்கு பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது” என்பதை உணர்ந்து கொண்டால் நம் மனம் ராக்கெட் போல் மேலே சென்று கொண்டே இருக்கும்.

Always do not wait for your second opportunities, because it may be hardened than the First One (Dr. APJ Abdul Kalam). “எப்போதும் இரண்டாம் வாய்ப்புக்காக காத்திருக்காமல் முதல் வாய்ப்பிலே செயலினை முடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இரண்டாம் வாய்ப்பு முதல் வாய்ப்பை விடவும் கடினமாக இருக்கக்கூடும்” என்று சொல்லி இருக்கிறார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.

சாதனை கனவுகள் ஒரே நாளில் நிகழ்வதல்ல. ஒரு நாளில் நிச்சயம் முடியும். நீந்துங்கள் அல்லது மூழ்குங்கள், கரையிலே நிற்பது எதற்கும் உதவாது.

So many people can be responsible for your success. But only you are responsible for your failure. சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுசுறுப்புடனும் உத்வேகத்துடனும் வைத்திருக்கின்றன. எனவே பிரச்சனையை எதிர்கொண்டால் தான் வாழ்க்கை வசப்படும். நம்மிடம் உள்ள ஆற்றல் தனித்திறமை, உழைப்பு, இவை வெளிப்பட்டால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நின்று ஜெயிக்க முடியும்.

பலம் + பலகீனம் = மனிதன். நம்மிடம் உள்ள பலகீனங்களை அறிந்து அவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். பணக்காரனுடன் உறவாடினால் பணக்காரன் ஆக மாட்டாய். ஆனால் அறிஞருடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.

“தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்” (டார்வின்). எனவே நம் தகுதியை உயர்த்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே” (ஜூலியஸ் சீசர்). நன்னூலிலும், ‘உன் பெருமையை நான்கு இடங்களில் கூறால் அது தற்பெருமை ஆகாது’ என்று சொல்லப்பட்டுள்ளது.

அலுவலகம் என்பது பணம் கொடுக்கும் கேந்திரமாக இல்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் தங்கத்தட்டில் வைத்து உன் முன் நீட்டப்படாது. அதற்காக போராட வேண்டும். வாழும் ஒவ்வொரு வினாடியும் வாழக் கற்றுக்கொள்வோம். ஏனெனில் வாழ்க்கை ஒரு பொக்கிஷம். நீ பலமுள்ளவனாக விரும்பினால் உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்.

“படிக்கும் பழக்கம் முழுமையான மனிதனை உருவாக்கும்” (கார்லைஸ்). படிப்பதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம். எந்த பணியில் இருந்தாலும் பேச்சுத்திறன் அவசியம். சொல்லின் வல்லவரானால் நம்மைப் பற்றிய நல்ல மதிப்பீடுகளை உருவாக்கிவிடலாம். பிறரை பாராட்ட வேண்டும் என்று உள் மனம் நினைத்தாலும் தயக்கம் நம்மைத் தடுத்துவிடும். பிறர் சிறப்பினையும் உதவியினையும் பாராட்டுங்கள். அதுவும் உடனடியாக பாராட்டுங்கள். பாராட்டப்படுவீர்கள்.

வெற்றியின் விலாசம் விசாலம் – விடாமுயற்சி. கனவுகளும், கற்பனைகளும் வெற்றிக்கு முதல்படி. பொறுமை அறிவின் அணிகலன். “பொழுதை பொன்னாக்கு” என்பது கரிச்சான் குஞ்சுவின் புகழ்பெற்ற வாக்கியம். நேரத்தைத் திட்டமிட்டு பயனுள்ளதாக கழிப்போம். நாளைய தினத்தை இன்றே படைத்திடுவீர்.

கூப்பிடும் தூரத்தில் தான் குவிந்து கிடக்கிறது வாய்ப்பு. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறப்போடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்வோம் சாதிப்போம்

வரலாற்றில் இடம் பிடிப்போம்

புதன், 20 நவம்பர், 2013

சாபத்தை மூலிகைகள் எப்படி நீக்கும்


அந்த கால முனிவர்களில் பலர் சாபம் கொடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் படைபலம் மிகுந்த அரசர்களே முனிவர்களின் சாபத்திற்கு அஞ்சி நடுங்கி இருக்கிறார்கள்
சாபம் என்பது என்ன? அதற்கு ஏன் அவ்வளவு தூரம் பயப்பட வேண்டும்? என்று நமக்கு தோன்றும்
இந்த கேள்வியை பெரியவர்களிடம் கேட்டால் நல்லவர்களை பக்திமான்களை தவத்தில் உயர்ந்தவர்களை கோபம் அடையும் படி செய்தால் அவர்கள் கோபம் கொண்டு சொல்லுகின்ற வார்த்தைகள் அப்படியே பலித்து விடும் அது தான் சாபம் என்று விளக்கம் தருகிறார்கள்
இந்த விளக்கம் சரியானது போல் தோன்றினாலும் முழுமையானதாக ஏற்று கொள்ள முடியவில்லை
அதற்கு காரணம் பக்திமான்களும் தவ சிரேஷ்டர்களும் மனதை அடக்கியவர்கள் மனம் அடங்கினால் காம குரோத எண்ணங்கள் தானாக அடங்கி விடும்
நிலமை அப்படி இருக்க இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அவர்களை எப்படி ஆன்மிகத்தில் உயர்ந்தவர்களாக கருத இயலும்?
அதனால் பெரியவர்கள் சொல்லும் விளக்கப்படி கோபம் கொள்ள செய்தால் சாபம் கிடைக்கும் என்பது தவறான கருத்தாகும்
உண்மையில் சாபம் என்பதற்கும் கோபம் என்பதற்கும் தொடர்பே இல்லை
நாம் சாதரணமாக பேசுகின்ற போது நமது வார்த்தைகள் தொண்டையில் இருந்து வெளிப்படுவது போல் தோன்றினாலும் அது முற்றிலுமாக அங்கே இருந்து வருவது இல்லை
அடிவயிறு மார்பு மற்றும் தொண்டையில் இருந்து கிளம்புகின்ற உத்வேகம் தான் வார்த்தைகளாக வெளிவருகிறது ஒரு வார்த்தை எதிலிருந்து கிளம்புகிறதோ அதை பொருத்து அந்த வார்த்தைக்கு வலிமை வந்தமைகிறது
உதாரணமாக அன்றாட நடப்புகளை பேசுகின்ற போது நமது மனம் நாலாவிதமான சிந்தனைகளுக்கு ஆட்பட்டு கிடக்கிறது அதனால் வாய் ஒன்றை பேசினாலும் மனது மற்றொன்றில் இருக்கிறது இந்த பேச்சில் ஆழமிருக்காது அவ்வளவாக அர்த்தமும் இருக்காது இதனால் எந்த பயனும் இருக்காது
நாம் ஆசை வசப்படும் போது எதையாவது ஒன்றை எதிர்பார்த்து பேசும்போது அந்த வார்த்தைகள் மார்பிலிருந்து கிளம்புகிறது
இதில் தடுமாற்றம் இருந்தாலும் குறிக்கோளை அடைகின்ற உறுதி இருக்கும் இத்தகைய உறுதி மிக்க வார்த்தைகள் எப்போதெல்லாம் நம்மிடமிருந்து புறப்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் எதிர் நோக்கும் காரியங்கள் ஓரளவு வெற்றியாகவே முடியும்
ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒரு சமயத்தில் தான் அடிவயிற்றில் இருந்து அதாவது நாபியில் இருந்து வார்த்தைகள் புறப்படுகின்றன
அதிகமான சந்தோசமோ சோகமோ அல்லது இவைகளை போன்ற உணர்ச்சி பொங்கும் சூழலில் தான் இங்கே இருந்து சொற்கள் பிறக்கின்றன
அப்படி பிறக்கின்ற சொற்கள் மந்திரமாகவே ஆகி விடுகிறது அந்த சொல் எதை நோக்கி பிரயோகம் செய்யப்படுகிறதோ அங்கே அது நிச்சயமாக பலித்து விடுகிறது அல்லது செயலாக நடந்து விடுகிறது
இப்படி நாபிலிருந்து புறப்படுகின்ற வார்த்தை தான் அமங்கலமாக இருந்தால் சாபம் என்றோ மங்களமாக இருந்தால் வரம் என்றோ அழைக்கப்படுகிறது
எனவே முனிவரின் வார்த்தைகள் சாபமாக வரமாக இருப்பதற்கு இது தான் மூலக்காரணமாக இருக்கிறது
இப்படி நாபியிலிருந்து சாதாரண மனிதர்களுக்கு அடிக்கடி சொற்கள் பிறக்காது முறைப்படி மூச்சி பயிற்சி செய்தவர்களுக்கே இது அவ்வபோது சாத்தியமாகும்
அதனால் தான் எதிரியின் ஆயுதபடைக்கே அஞ்சாத அரசர்கள் முனிவர்களின் சாபங்களுக்கு பயந்தனர் முனிவர்களும் அர்த்தம் இல்லாமல் சுயநலத்திற்காக யாரை வேண்டுமானாலும் சபிப்பது இல்லை
இது முனிவர்கள் மகான்கள் சம்பந்தப் பட்ட விஷயம் நாம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சாபங்களை பற்றி சற்று சிந்திப்போம்
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் யாருமே சந்தோசமாக வாழ்ந்தது இல்லை
அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் வயதுக்கு வரும்வரை சாதரணமாக தான் இருப்பார்கள் அதன் பிறகு மனநிலை பாதிப்படைந்தவர் போல் சில காலம் இருப்பார்கள்
சிலர் தற்கொலை செய்து கொள்வார்கள் திருமணம் முடித்து கொடுத்தால் கூட கணவனோடு வாழ மாட்டார்கள் அல்லது அமங்கலியாகி விடுவார்கள்
கணவனோடு நல்லவிதமாக வாழ்ந்தால் குழந்தை இருக்காது இப்படி எதாவது ஒரு குறை அந்த குடும்ப பெண்களுக்கு தொடர்ச்சியாக இருந்து வந்தது
இதற்கு காரணம் என்ன என்று பெரியவர்களை கேட்டால் அந்த குடும்பத்தை ஒரு பெண் சாபம் வாட்டிவதைப்பதாக சொல்கிறார்கள்
அவர்களின் முன்னோரில் ஒருவர் காட்டு வழியாக வந்த ஒரு பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்டு அவளை கொன்று கருவேல முள்ளிற்குள் வைத்து கதற கதற எரித்து விட்டாறாம்
திருமண வயதுடைய பெண்ணை கொலை செய்ததினால் அந்த பெண்ணின் பாவமும் சாபமும் இன்றும் தொடர்கிறது என்கிறார்கள்
இப்படி எத்தனையோ குடும்பங்களை நாம் காண முடிகிறது நல்ல வசதியோடு வாழ்வார்கள் அரண்மனை வாசிகளை போல அதிகாரம் செலுத்துவார்கள் ஆனால் ஐம்பது வயதை தொடுவதற்குள் எதோ ஒரு விதத்தில் மரணம் அடைந்து விடுவார்கள் இது தொடர்ச்சியாகவும் சில குடும்பங்களில் நடந்தும் வருகிறது
இன்னும் சில குடும்பத்திலோ விசித்திரமான பல சம்பவங்கள் காரண காரியம் இல்லாமலே நடை பெரும் இவைகளை எல்லாம் சாபங்களால் வந்த வினை என்றும் சொல்கிறார்கள்
முனிவர்கள் சாபம் கொடுக்கலாம் அதை போலவே சாதாரண மனிதர்களும் சாபம் கொடுக்க முடியுமா?
முனிவர்களை போலவே சாதாரண மனிதர்களும் நாபியிலிருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தினால் தானே அது சாபமாகும்?
வெந்ததை தின்று வேளை வந்தால் சாகும் சாதாரண மனிதனுக்கு கூட நாபியிலிருந்து வார்த்தைகள் வருமா? என்று சிலர் நினைக்க கூடும்
நமது இந்து மத ஞானிகள் யோக பயிற்சி செய்து பெறுகின்ற சித்துக்களை உண்மையான பக்தியின் மூலமும் பெறலாம் என்கிறார்கள்
அதாவது யோகாப்பியாசம் என்பது வெற்றி அடையும் போது மனதை குவிய செய்து விடுகிறது அதன் மூலம் சித்துக்கள் வந்தமைகிறது அதே போலவே உணர்வுகள் மிக கூர்மையாகி குவியும் போது மனதும் ஒரு நிலைப்பட்டு விடுகிறது
அதாவது பக்தி காதலாகி கசிந்துருகி கண்ணில் நீர் மல்க நிற்கும் போது மனம் குவிந்து சித்துக்கள் கைவந்து விடுகிறது
இதே போல தான் ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப் படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான்
அந்த நேரம் அவன் மனது கடந்த காலம் எதிர்காலம் ஆகிய இருகாலங்களையும் மறந்து நிகழ்காலத்திலேயே நிலைத்து விடுகிறது
சுற்று புற சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அதர்மத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒரு நிலைப் பட்டுவிடுகிறது அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது எதிரியை மட்டும் அல்ல எதிரின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்த்தை சத்திமிகுந்த சாபமாகி விடுகிறது
இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளை சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது
பாட்டன் முப்பாட்டன் செய்த பாவத்திற்கு ஒன்றுமே அறியாத வாரிசுகள் கஷ்டங்களை அனுபவிக்கலாமா? இது சாத்தியாமா? அவர்கள் பெற்ற சாபம் நம்மை எப்படி தொடரும்? என்று சிலர் கேட்கலாம்
முன்னோர்களால் பெற்ற சாபம் ஒரு தனிமனிதனை வாட்டுகிறது என்றால் அவனவன் ஜாதகப் படிதான் நல்லது கெட்டது நடக்கிறது என்று சொல்வது எப்படி பொருந்தும் என்றும் சிலர் கேட்கலாம்
எனது பாட்டனார் ஒரு சாபத்தை பெற்றார் என்றால் அதன் தாக்கம் அவர் மனதிலும் ஆத்மாவிலும் பரிபூரணமாக ஆக்ரமித்து இருக்கும் அது மரபு தொடர் வழியாக என் தகப்பனாருக்கும் எனக்கும் என்மகனுக்கும் கூட சொந்தமாக வந்தமையும்
இந்த வேளையில் என் ஜாதகமோ என் மகனின் ஜாதகமோ வலுவாக இருந்தால் தாக்கம் குறைவாக இருக்கும் வலுவற்று இருந்தால் அதன் தாக்குதல் அதிகப்படியாகவே இருக்கும்
இன்னொரு விஷயம் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது பூர்வகர்மா அவனது முன்னோர்களின் கர்மா என்பதை பொறுத்தே அமைகிறது
அவனது நிகழ்கால சொந்த கர்மா நல்ல முறையில் அமைந்தால் கஷ்டங்களில் இருந்து சுலபமாக விடுபட வழிவந்தமயும் அல்லது அத்தகைய பூர்வ கர்மாவின் தாக்குதலை கிரகங்கள் இறக்கம் இல்லாமல் தருவதை குறைத்து கொள்ளவும் வழி கிடைக்கும்
பொதுவாக நமது சித்தர்கள் இத்தகைய சாபங்க்களில் இருந்து விடுப்பட பல தான தர்மங்களையும் பூஜா விதிகளையும் சொல்லியிருந்தாலும் சில ரகசிய வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள்
உதாரணமாக மூன்று தலை முறைக்கு முன்னால் இருந்து தாக்குகின்ற சாபத்தை நீக்க குருவரிகற்றாளை,வனபிரம்மி,முப்பிரண்டை,வெண்ணாவல் ஆகிய மூலிகைகளை மந்திர வழியில் பயன் படுத்தும் விதத்தை புலிப்பாணி சித்தர்,கோரக்கர் போன்ற மகா சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்
இதன் வழியில் செய்தால் நிச்சயம் ஓரளவாது சாபக் கொடுமையிலிருந்து குடும்பங்கள் மீண்டு வரலாம்
இந்த மூலிகைகளை சிலருக்கு முறைப்படி செய்து கொடுத்திருக்கிறேன் அவர்கள் அதை பயன்படுத்தி மிக நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து விடுப்பட்டு இருக்கிறார்கள்
சாபத்தை மூலிகைகள் எப்படி நீக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு வருவது இயற்கை
சாபம் என்பது வலுவான எண்ணங்களின் கூட்டு வடிவமாகும் இது பிரபஞ்ச ஆகர்சன சக்தி மூலம்தான் குறிப்பிட்ட மனிதனை வந்தடைகிறது
அப்படி வருகின்ற எண்ண அலைகளை வலுவோடு தாக்காமலும் மாற்று வழியில் அனுப்பி வைக்கவும் மூலிகையில் உள்ள சில அபூர்வ சக்திகள் துணை செய்கின்றன
அந்த சக்திகளே சாபத்திலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது

ஐந்து வித வசியம்

மந்திரம், மாயவித்தை, வசியம்
இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில் இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல. ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்றதான தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று
வசியம்
வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.
1. ராஜவசியம்
தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.
2. லோக வசியம்
இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.
3. சர்வ வசியம்
இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.
4. மிருக வசியம்
இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.
5. ஆண் பெண் வசியம்
இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது
1. சாதாரண தரம் 2. உயர்தரம்
சாதாரண தரம்
இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.
உயர்தரம்
இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி  ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.
அசுத்த ஆவிகள்
வசியம் செய்யப்படுகையில் அசுத்த  ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.
ஏவல் பில்லி சூனியம்
ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.
தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் – முனி, காளி,
செத்த ஆவிகளை ஏவி விடுதல் –
மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்
நாய் – கடிக்கும்படி
மாடு – முட்டும்படி
பாம்பு – கொத்தும்படி
மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?
1. பணவிரயம்
2. ஏமாற்றம்
3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு

சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.



இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில் இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல. ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்றதான தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று

கலைகளும் தமிழ் விளக்கம்




1. அக்கர இலக்கணம் எழுத்திலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்) எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. சோதிடம் கணியக் கலை
9. தரும சாஸ்திரம் அறத்து பால்
10. யோகம் ஓகக் கலை
11. மந்திரம் மந்திரக் கலை
12. சகுனம் நிமித்தக் கலை
13. சிற்பம் கம்மியக் கலை
14. வைத்தியம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உருப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிது மொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு

23. வீணை யாழ் இயல்
24. வேனு குழலிசை
25. மிருதங்கம் மத்தள நூல்
26. தாளம் தாள இயல்
27. அகத்திர பரீட்சை வில்லாற்றல்
28. கனக பரீட்சை பொன் நோட்டம்
29. இரத பரீட்சை தேர் பயிற்சி
30. கஜ பரீட்சை யானையேற்றம்
31. அசுவ பரீட்சை குதிரையேற்றம்
32. இரத்தின பரீட்சை மணி நோட்டம்
33. பூ பரீட்சை மண்ணியல்
34. சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகர்ஷணம் கவிர்ச்சியல்
37. உச்சாடணம் ஓட்டுகை
38. வித்து வேஷணம் நட்பு பிரிக்கை
39. மதன சாஸ்திரம் மயக்குக் கலை
40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி
44. பைபீல வாதம் பிறவுயிர் மொழி
45. தாது வாதம் நாடிப் பயிற்சி
46. கெளுத்துக வாதம் மகிழுறுத்தம்
47. காருடம் கலுழம்
48. நட்டம் இழப்பறிகை
49. முட்டி மறைத்ததையறிதல்
50. ஆகாய பிரவேசம் வான்புகுதல்
51. ஆகாய கமனம் வான் செல்கை
52. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல்
53. அதிரிச்யம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் மாயம்
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு
57. ஜல ஸ்தம்பம் நீர்க் கட்டு
58. வாயு ஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் விந்துக் கட்டு
62. கன்ன ஸ்தம்பம் புதையற் கட்டு
63. கட்க ஸ்தம்பம் வாட் கட்டு
64. அவத்தை பிரயோகம் சூனியம்




வேறொரு பட்டியல்


1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);

3. நடம் (நிருத்தம்);

4. ஓவியம்;

5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;

6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;

7. பூவமளியமைக்கை;

8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;

9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;

10. படுக்கையமைக்கை;

11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);

12. நீர்வாரி யடிக்கை;

13. உள்வரி (வேடங்கொள்கை);

14. மாலைதொடுக்கை;

15. மாலை முதலியன் அணிகை;

16. ஆடையணிகளாற் சுவடிக்கை;

17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;

18. விரை கூட்டுகை;

19. அணிகலன் புனைகை;

20. மாயச்செய்கை (இந்திரசாலம்);

21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);

22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);

23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);

24. தையல்வேலை;

25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;

26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);

27. விடுகதை (பிரேளிகை);

28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;

29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;

30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;

31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;

32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);

33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;

34. கதிரில் நூல் சுற்றுகை;

35. மரவேலை;

36. மனைநூல் (வாஸ்து வித்தை);

37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);

38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);

39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;

40. தோட்டவேலை;

41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;

42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;

43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;

44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);

45. மருமமொழி (ரகசிய பாஷை);

46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);

47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;

48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;

49. பொறியமைக்கை;

50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);

51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);

52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;

53. வனப்பு (காவியம்) இயற்றுகை;

54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);

55. யாப்பறிவு;

56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);

57. மாயக்கலை (சாலவித்தை);

58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);

59. சூதாட்டம்;

60. சொக்கட்டான்;

61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;

62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;

63. படக்கலப் பயிற்சி;

64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).





'அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது

முதற்பட்டி ஆரிய நூன்மரபை முற்றுந் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்குஞ் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.
இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வேறுபட்டும் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது

திங்கள், 11 நவம்பர், 2013

சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் சாமுத்ரிகா லட்சணங்கள்



இது பண்டை காலந்தொட்டு இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறையாகும். இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் அதிகமாக காணலாம். எல்லாப் பெண்களுக்கும் இவ் லட்சணங்கள் எல்லாம் அமைவதில்லை. அப்படி அமைந்துவிட்டால் இறைவிக்கு நிகரான வாழ்கை அமையும். பொதுவாக பெண் பார்க்கச் செல்லும் பெரியோர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்ப்பத்திலும், இளையோர் அழகை பார்ப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.

சைவ சமயத்தவர்களினால் வணங்கப்பெறும் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியதாக அமைக்கப்பெறுகின்றது. அதனால் போலும் மாகாலட்சுமி மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறா என சில பெண்களை பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். பெண்களின் எவ் உறுப்பு எப்படி அமைந்தால் நன்மை பயற்கும் என்பதனை கீழே விளக்கப்பெற்றுள்ளன


பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்:



இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உருண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மையாக இருந்தால் எப்படி தட்டையாக இருந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம் நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.

காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடித்து உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது நல்லது.

இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.

கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும் அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும் இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது விரல் கட்டைவிரலை விட நீளமாக இருந்தால் கண்வனை மதிக்கமாட்டாள் என்றும் தன் மனம் போன போக்கில் நடந்து கொள்வாள் என்றும் கூறப்படுகின்றது.

பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதை அனுபவ ரீதியாகவும் பார் த்துள்ளோம்.

கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லியிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இரு ந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

கண் புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல்லது என்று சொல்கிறது.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.

கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்களிடம் கலை உணர்வு இருக்கும்.

மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக

தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.

ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்தி சாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப் பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.குடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள்தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மா திரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

கண்களை எடுத்துக் கொண்டால் உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல…

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாத வர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக் கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பை விட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இரு ப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்கவேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

முன் பற்கள் இரண்டிற்கும் இடையே இடைவெளி உள்ள பற்களைக் கொண்டவர்கள் காம உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.

அடுத்ததாக முடியை எடுத்துக் கொண்டால் கோரமுடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப் படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலைமுடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. சித்தர்கள் எப்போதும் சங்கேத பாஷையில் பேசக்கூடியவர்கள். எனவே சேலை கட்டிய என்பது சேலையைக் குறிப்பது அல்ல. சேலை என்பது மீனைக் குறிக்கும் சொல். மீனைப் போன்ற கண்கள் கொண்ட பெண்களை (அதாவது பரந்து விரிந்த) நம்பினால் என்பதுதான் அந்த பாடலின் பொருள்.

மேலும் உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாமா?

ஒருவரது ஜாதகத்தை அது அவருடையதுதானா என்பதை தோற்றத்தை வைத்துப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

ஆண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந் தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித் திரம்.

2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.

4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் – அழகான, சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந் து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.

7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷ்டமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாக வோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கறுப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கறுத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்க ளை உடையவர்கள் கல்வி மான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதி கம் வரும். வரி சை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..

11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல்செவி உள்ளே மடங் கியிருப்பின் கபடதாரி.

12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம் புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலி ருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும்போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்பஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சம மான உயர த்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.

15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

16. வயிறு – பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.

18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப் பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.





மச்ச ஜாதகம் பெண்களுக்கு

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும்
உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம்
மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால்
அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை
பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக
இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க
பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_
சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும்
அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்

தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில்
சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.
இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம்
குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள்.
நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும்.
சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும்.
சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு
தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக
மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக
இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும்.
வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும்.
கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.
வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள்.
அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி

சனி, 9 நவம்பர், 2013

வசியத்தின் மூல ஆதாரம்

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும்.



போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.


சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது


1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திரச் சித்தர்கள்
17. எந்திரச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்திரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார். பிறகு திபெத்தியர்களின் பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார். இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர். இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால் எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஸ்ரீ தெய்வீக சக்கரங்கள்





ஸ்ரீ சுதர்ஸன சக்கரம்

ஸ்ரீ சுதர்ஸன சக்கரம். பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் முன் அமர்ந்து சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும்.

மஹா விஷ்ணுவின் சக்தி இந்த சுதர்ஸன சக்கரத்தில் உருவேற்றப்பட்டுள்ளதால் இது இருக்கும் இடத்தில் செல்வச் செழிப்பு மேலோங்கும்.


ஸ்ரீ சக்கரம்.

ஜோதிடர்கள், நீதியஸ்தர்கள் ஆகியோருக்கு வாக்கு பலிதமாகும். அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமாத் துறையிலுள்ளோர், வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சக்கரம் பாதுகாப்பையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும். எதிரிகள் தொல்லை, திருமணத் தடை போன்ற சிரமத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.

உத்யோகம் இல்லாதவர்களுக்கும், பதவி உயர்வு வேண்டுவோருக்கும் நல்ல பலன்களைத் தர வல்லது இந்த ஸ்ரீ சக்கரம்.


ஸ்ரீ வாஸ்து சக்கரம்


இந்த சக்கரத்தை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்து தினமும் தூப தீபம் காட்டி வந்தால் மனைக் குற்றம் நீங்கும்.

தெய்வானுகூலம் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். தனம் விருத்தியாகும். சகல ஜனங்களும் வசியமாவர். புதுவீடு மற்றும் கட்டடங்களைக் கட்டுவோர் இந்த சக்கரத்தை வைத்து பூஜை செய்த பின்னர் கட்டடம் கட்டத் தொடங்கினால் எல்லா மனைக் குற்றங்களும் நீங்கும்.


ஸ்ரீ ஸ்வர்ண குபேர தனாஹர்ஷண சக்கரம்

ஈசனும் பகவானும் ஒன்றே பாகவத உபதேசம் இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் என்பது ஒன்றுதான் எனினும் அது ஒலி, ஒளி, வெப்ப உருவிலும், குளிர் உருவிலும் வந்து நமக்குப் பேருதவியாய் உள்ளது. அதுபோலவே பரம்பொருள் சக்தியாய் இருந்து கொண்டு பல உருவில் மனித குலத்தைக் காக்கிறது. உப சாந்தப் பொருளாய் நின்றவையே தெய்வீக சக்கரங்கள் ஆகும். தெய்வீக சக்கர வழிபாட்டினை வேத சாஸ்திரங்கள் ஊக்குவிக்கின்றன.

எந்த ஒரு எஜமானனுக்கும் சேவகன் தேவை. அதுபோலவே அன்னை மஹாலக்ஷ்மியின் செல்வத்தைக் காக்க குபேரன் என்ற யக்ஷன் நியமிக்கப்பட்டுள்ளான். மஹாலக்ஷ்மியின் ஆணைப்படிதான் குபேரன் செல்வத்தைக் கொடுத்து வருகிறான். கொடுப்பவனை மகிழ்வித்தால் தாராளம் மிகும். குபேரனை தனியாக வழிபடாமல், மஹாலக்ஷ்மியையும் உடன் வழிபடுதல் வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு குபேர மந்திரங்களாலும், மஹாலக்ஷ்மியின் அஷ்ட ஸ்வரூபமான ஆத்ய லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, ஸௌபாக்ய லக்ஷ்மி, அம்ருத லக்ஷ்மி, காம லக்ஷ்மி, ஸத்ய லக்ஷ்மி, போக லக்ஷ்மி, சுப யோக லக்ஷ்மி ஆகிய அவதார சக்திகளாலும், பிச்சை அளிக்க ஏதுமின்றி நெல்லிக் கனியை ஈந்த பெண்ணின் வறுமையை போக்குவதற்கு ஆதிசங்கரர் அருளிய இருபத்தோரு ஸ்லோகங்களைக் கொண்ட கனகதாரா ஸ்தோத்திரங்களாலும் உருவேற்றப்பட்டதுதான் ஸ்ரீ ஸ்வர்ண குபேர தனாஹர்ஷண சக்கரம் ஆகும்



திருஷ்டி சக்கரம்



பஞ்ச பூதங்களை ஆகர்ஷணம் செய்து ஒரு லக்ஷத்து எட்டு மூல மந்திரங்களால் உருவேற்றி அதிதேவதைகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியுடன் கூடிய முப்பத்து முக்கோடி ப்ரதி அதிதேவதைகளையும் வசீகரித்து ஆவாஹனம் செய்து உருவாக்கப்பட்டது தான் கேட்டதைத் தரும் ஸ்ரீ செல்வ விநாயகர் கவசம் என்னும் திருஷ்டி சக்கரம்.

கண் திருஷ்டி, தொழில் சரிவு போன்ற இன்னல்களை இது உடனே முறியடிக்கும். எதிரிகள் உடனே சரணடைவர். இந்த சக்கரம் இருக்கும் இடத்தில் பில்லி, சூன்ய, ஏவல், செய்வினைகள் போன்ற உபாதைகள் உடனே அகலும். குழந்தைகளுக்கு இந்த சக்கரம் மிகுந்த பாதுகாப்பை வழங்கும். அலுவலகம், தொழிற்கூடங்களில் இது ஜன வசீயத்தை உண்டு பண்ணும்.

சனி, 28 செப்டம்பர், 2013

யார் மந்திரம் செய்யலாம்?மந்திரம் செய்ய தகுதியானஇடம்

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.





யார் மந்திரம் செய்யலாம்?




மந்திரம் செய்பவர் நன்றாக மந்திரங்களை கற்றிருக்க வேண்டும். கற்றுக்கொடுத்த ஆசானிடமிருந்து குரு அபிஷேகம் பெற்றிக்க வேண்டும். குரு அபிஷேகம் பெறாமல் மந்திரங்கள் செய்தால் அது பலிக்காது. மந்திரங்கள் செய்யும்போது மந்திரச் சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும். பூஜை பொருட்களையும் சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மந்திரம் பலிக்காது. சிலவேளை மந்திரக்காரருக்கே ஆபத்து வரும்.


மந்திரம் செய்ய தகுதியான, அமைதியான இடம்


1. ஆற்றங்கரையில் பூஜைப்பொருட்களை வைத்து ஆற்று நீரில் இருந்து மந்திரம் செய்யலாம்
2. அமைதியான இடம் , ஆலயம், அல்லது சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து செய்யலாம். ஆள் நடமாட்டமில்லாத காடுகளிலிருந்தும் செய்யலாம்.


அச்சரங்கள் சில யந்திரங்கள்


மந்திரங்கள் செய்யும்போது செம்புத் தகட்டில் அச்சரம் எழுதி அதில் மந்திர பதித்து செய்து கொள்பவர்களின் பெயர்களையும் அதில் பதித்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.




ஜோசியம் பற்றிய சில தகவல்கள்


பொதுவாக ஜோசியத்தை நம்பாதவர்கள் யாரும் கிடையாது. அனைவருமே ஜோசியத்தை நமபுகிறவர்களும் கிரகத்திற்கு பயப்படுகின்றவர்களுமே இருப்பார்கள். ஜனங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தம்முடைய கிரகநிலை சரியில்லை என்றே கருதுவார்கள். இதன் காரணமாக தன் கஷ்டத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக ஒரு ஜோசியரை நாடி தன்னுடைய கிரக நிலையை அறிந்த அதற்கேற்ற பரிகாரம் செய்வதுண்டு



மந்திரங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள்



1. பணச்செலவு
2. நேர விரயம்
3. ஏமாற்றம்
4. தோல்வி
5. நோய்கள்
6. சமாதனம் சீர்குலைவு
7. பயம்
8. சண்டைகள், வெட்டுப்பழி, குத்துப்பழிகள் ஏற்படுதல்
9. கொலைகள், கொள்ளைகள்
10. மரணம்.




பில்லி சூனியங்களின் வகைகள்

பில்லி சூனியம் என்பது யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு


2. சுடுகாட்டு சாம்பல்



தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும்.


3. முட்டை


ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும்.


4. ஏந்திரம்




செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து ஏந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர்.


5. சுண்ணாம்பு


சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும்.




6. தேசிக்காய்


சில தேசிக்காய்களை (எலுமிச்சைப்பழம்) கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும்.


7. பொம்மை


சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம்.


ஆண்பெண் வசிய விளக்கம்



வசியமாக்க வேண்டிவரின் உடை ஒன்றில் அவருடைய பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து அதை தினமும் விளக்குக்கு அருகில் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பலிக்கும்.


1. தலைமுடி



வசியமாக்க வேண்டியவரின் தலை முடியினைப் பூஜையில் வைத்து துளசிக் செடியின் வேரைப் பிடுங்கி தலைமுடியை அதில் சுருட்டி காலை, மாலை, மந்திர, வசியம் செய்ய வேண்டும். 7 நாட்கள் செய்தால் பலிக்கும்


2. ஐந்து வகை எண்ணெய்



ஐந்து வகையான எண்ணெயை எடுத்து போத்தலில் அல்லது ஒரு குப்பியில் கலந்து அதை வசியமாக்க வேண்டியவர்களின் பெயருக்கு வசிய மந்திரம் செய்ய வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஓர் சுரையில் போட்டு அல்லது இடுப்பில் கட்டி கொள்ள வேண்டும் 21 நாட்களில் பலிக்கும்.


3. ஐந்து வகையான வேர்



ஐந்து வகையான வேர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பல் எடுத்து அதை பூஜை தட்டில் பெண், ஆண் வசிய சக்கரத்தை சாம்பலில் வரைந்து வசியமாக்க வேண்டியவரின் பெயரை அதில் எழுதி, வசிய மந்திர பூஜை செய்து சாம்பலில் சிறியதை சுரையில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அலலது நெற்றியில் பூசிக் கொள்ளலாம். சிறிது சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவியும் விடலாம். 7 நாள் செய்தால் பலிக்கும்.


4. சிறுநீர்


குப்பைமேனி செடியை பிடுங்கி கொண்டு வந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரில் போட்டு மூன்று நாள் சென்ற பின் அதன் வேரை துண்டித்து மந்திரப் பூஜையில் வைத்து உச்சாடனம் செய்து சுரையில் போட்டு, கழுத்தில் கட்டிக் கொண்டால் அல்லது இடுப்பில் கட்டிக் கொண்டால் பலிக்கும்.


5. தலைப்பனை ஓலை


வசியமாகக் வேண்டியவர்களின் வீட்டிலிருந்து 7 உப்புக்கற்களை எடுத்துக் கொண்டு வந்து தலைப்பனை ஓலையில் சக்கரம் வரைந்து அதில் பெயர் எழுதி, மந்திர பூஜையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்து தாலிப்பனை ஓலையை வசியமாக்க வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் புதைக்க வேண்டும். 7 உப்பக்கற்களை வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டு விட வேண்டும். இவ்விதமாக பாவித்தால் பலிக்கும்.


மந்திரம் செய்யும் முறை



மந்திரங்கள் செய்வதற்கு முதலாவது கும்பம் பாவிக்க வேண்டும். ஒரு செம்பு அல்லது குடத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் நீர் நிரப்பி, மா இலைகள் வைத்து, கற்பூரம் கொழுத்தி ஆவிகளின் மந்திரங்களை சொல்லி ஆவிகைள அழைக்க வேண்டும். பிறகு ஒரு தேசிக்காய் எடுத்து அதற்கு உருவம் அமைத்து, பூக்களால் அலங்கரித்து, பூஜைக்கான பொருள்களை வைத்து, மந்திர பூழை செய்ய வேண்டும். இலையில் அரிசி வைத்து அதில் கும்பத்தை வைக்க வேண்டும்.


பூஜை பொருட்கள் இரு வகை


1. பால், பொங்கல், பழவகை, கடலை, அவல், தாம்பூலம் பூக்கள்
2. கோழி, சாராயம், முட்டை, பூக்கள், சுருட்டு, எண்ணெய், கலந்த தீனிவகை



வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.


தேற்றாங்கொட்டைகள் தேற்றா என்னும் மரத்தின் கொட்டை, தேற்றாங்கொட்டை எனப்படுகின்றது. இதனைப் பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள். தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப் படும் தேற்றா மரத்தின் விதை. குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி
நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்


இல்லி அல்லது இல்லம் என்று ஒரு மரம் இருப்பதாகத் தெரிகின்றது. இதனை
clearing-nut tree என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. இதனை தேற்றாங்கொட்டைகள் என்றும் கூறுவார்கள் என்னும் குறிப்பு உள்ளது. புறநானூற்றிலே உள்ள குறிப்பும் வலுவூட்டுகின்றது


தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது
தேற்றா மரத்திற்கு இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது


தேத்தாங்கொட்டையைத் தெற்றுக்காய் (strychnos potatorum) எனபர். ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.

தெளிந்த நீர் கொண்ட காய் தேங்காய்.
தெள் < தெள்ளு < தெளி < தெள்ளுக்காய் < தேத்தாங்காய்

பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர். தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.





வியாழன், 26 செப்டம்பர், 2013

ஜோதிட நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம்

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்






ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் மூல மந்திரம்


ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்


தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீ
ங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்

பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.

கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.


ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி



ஓம் சகல நாயகி போற்றி ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி ஓம் தர்ம பரிபாலதையே போற்றி ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி ஓம் ஹரத்துள்ளாயே போற்றி ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி ஓம் சிங்க முகமுடையவலே போற்றி ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி ஓம் கர்ணகோர ரூபமே போற்றி ஓம் ஞானவழி எழிலே போற்றி ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி ஓம் வானம் பூமி காபாயே போற்றி ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி ஓம் சித்தி வழி சித்தியே போற்றி ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி ஓம் தயை சுவை மோகனமே போற்றி ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி ஓம் பத்ரகாளி வடிவே போற்றி ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி ஓம் சூலினியின் துணையே போற்றி ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி ஓம் மாவீர கோகிலமே போற்றி ஓம் சர்வபாப விநாசனி போற்றி ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி ஓம் உகந்தது தருவாயே போற்றி ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி ஓம் கணித்தது புகுவாயே போற்றி ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி ஓம் ஆபத் சகாயமே போற்றி ஓம் ஆகாய வெளிவழியே போற்றி ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி ஓம் பார்வதி மய சக்தியே போற்றி ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி ஓம் பிரணவரூப ஒலியே போற்றி ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி ஓம் புவன யோக வீரமே போற்றி ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி ஓம் புத பேத நாசினி போற்றி ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி ஓம் வனநேச பாரிதியே போற்றி ஓம் குண ரூப சாரதியே போற்றி ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி ஓம் டமருகம் தரித்தாய் போற்றி ஓம் சூலமும் கொண்டாய் போற்றி ஓம் பக்தரின் பிரியமே போற்றி ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி ஓம் ராஜராஜ தேவியே போற்றி ஓம் கங்காதர காருண்யே போற்றி ஓம் வித்தைக் கதிபதியே போற்றி ஓம் வித்வ மூல சித்தமே போற்றி ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி ஓம் காமதேனு மடியே போற்றி ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி ஓம் மகாபல மாசக்தியே போற்றி ஓம் மகா பைரவி தேவியே போற்றி ஓம் நலம் தரும் நாயகியே போற்றி ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி



ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் தோற்றம்

நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.

பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.

பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்


செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்




வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு
பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.


வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்


வராஹம் என்றால் என்ன? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.



சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி



இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது




வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.




இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.



ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள்.



வராஹி காயத்திரி


ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய
தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்


மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்


ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!





தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


வராஹி மூல மந்திரம்
1)
ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2)
ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

3)
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:



4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.


மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்



ஸ்ரீ வாராஹி மாலை


1. வசீகரணம் (தியானம்)


இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.


2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)


தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.


3. பகை தடுப்பு (பிரதாபம்)


மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி


வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்


பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.






4. மயக்கு (தண்டினி தியானம்)








படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.






5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)






நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்


கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


6. உச்சாடணம் (ரோகஹரம்)


வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.


7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)


நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.


8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)


வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


9. பகை முடிப்பு (வித்வேஷணம்)


வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.


10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)


பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.


11. தேவி வருகை (பூதபந்தனம்)


எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.


12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)


சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே


13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)


நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.


14. மந்திரபூஜை (முனிமாரணம்)


மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.


15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)


ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே


16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)


தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!


17. வாழ்த்துதல் (உலக மாரணம்)


வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)


வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.


19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)


பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.


20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)


தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.


21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)


ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும் கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே. 22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்) தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப் பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே 23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்) ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே. 24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்) உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே. 25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்) தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு) அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே. 26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்) அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே. 27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்) சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே. 28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்) பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து) இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே. 29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்) தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே. 30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்) நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே. 31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்) வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே. 32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்) சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
வாராஹி ஸ்ரீ சக்கரத்தில் நாலு வித படைகளுக்கும் சேனாதிபதி ஆவாள். இவள் தீமை செய்பவரை கண்டித்து அடக்குவதால் தண்டினி என்று பெயர்

வாராஹி ஸ்ரீ சக்கரத்தில் நாலு வித படைகளுக்கும் சேனாதிபதி ஆவாள். இவள் தீமை செய்பவரை கண்டித்து அடக்குவதால் தண்டினி என்று பெயர்


இவளுடைய சக்ரத்திற்கு கிரி சக்கரம் என்று பெயர். கிரி – கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுடைய சக்கரம்.



இவளது பன்னிரண்டு நாமங்கள்:


பஞ்சமீ
தண்டநாதா
ஸங்கேதா
ஸமயேஸ்வரீ
ஸமயஸங்கேதா
வாராஹி
போத்ரிணீ
சிவா
வார்த்தாளி
மகாசேனா
ஆஞ்ஜா சக்ரேஸ்வரி
அரிக்னி