கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இறப்பின்பின் நடப்பது என்ன?






ஆர்தரின் பூவுலக வாழ்க்கையின் கடைசிச் சில மாதங்களின் போது அவர் மறுபடியும் புத்தகம் ஒன்று எழுதத்தலைப்பட்டிருந்தார் என்பதை நான் அறிவேன். ஆனால் அது எதைப்பற்றியென்று எனக்குத் தெரியாது. அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களிருக்கையில் அவருக்கும் எனக்கும் தெரிந்த ஒரு நண்பர் வில்லியம். வி. ராஸ்சர் அடிகளார் (Reverend William v. Rauscher) மூலமாக ஆர்தர் தனது புத்தகத்தின் தலைப்பைத் தெரிவு செய்து விட்டார் என அறிந்து கொண்டேன். அந்தத் தலைப்பு என்னவென்றால் 'இறப்பின் பின் நடப்பது என்ன' என்பதாகும். அவரின் ஈமச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே (காலை வேளைகளில்) என்னுடைய தட்டச்சு இயந்திரத்தைப் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் ஆட்கொள்கையில் இறப்பு என்கிற வாயிலின் மறுபக்க வாழ்வு எப்படியிருக்குமென்று விபரித்து நானும் அவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதப்படவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது ஆர்தர் போர்ட் எனும் ஆத்மா ஒரு தீர்மானம் எடுத்தால் அதை நிறைவேற்றியே தீருமென்று காட்டிவிட்டார்.
புத்தகம் எழுதத்தொடங்கியதுமே அவர் பலவிதமான ஆத்மாக்களின் குணநலன்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். பெப்பிரவரி பதினான்காம் திகதியன்று அவர் பின்வருமாறு எழுதினார். "இன்று ஒருவர் உயிருடனிருக்கையில் இறப்பின் பின் என்ன நடக்குமென்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவரும் ஆனால் அதில் நம்பிக்கையோ, நம்பிக்கயின்மையோ கொள்ளாத ஒரு பக்கமும் சாராத, உலகவாழ்க்கையின் இயந்திரத்தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இதைப்பற்றி எண்ணுவதற்குக்கூட நேரமில்லாத ஒருவர் இங்கே வரும்போது எப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பார்ப்பார் என்பதைப் பார்ப்போம். அவர் விட்டுவிட்டு வந்த இடத்தைப் போலவே சிறிது வித்தியாசமான ஒரு இடத்தில் தானிருப்பதாகக் காணுவார். ஒன்றும் பெரிய வித்தியாசமிருக்காது. எல்லாம் தெளிவாகக் கூடுதல் பிரகாசமாக இருக்கும். அத்துடன் ஆகாயமானது மேகங்களில்லாமல் இருக்கும். மறுபடி ஒன்றும் மாற்றமில்லாததால் அவர் அதேயிடத்தில் தான் இன்னும் உயிருடனிருப்பதாகத் தான் எண்ணுவார். எனவே அவர் தனது அன்றாட அலுவல்களைப் பார்க்க நினைத்துத் தனது முதலாவது அப்போயின்மென்ட்டுக்குப் போவார். அங்கே சனக்கூட்டமாகவிருந்தாலும் ஏன் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையென்று யோசிப்பார். தான் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்திருப்பேனோவென மூளையைக் குடைந்து பார்ப்பார். அப்படியொன்றும் தோன்றாமல் விழிப்பார். ஒரு சிலர் இவரின் நண்பர்களாகவே இருப்பார்கள். அவர்களுடன் ஒரு மனஸ்தாபமும் இவருக்கிருந்திருக்காது.
"அவர் பெரிய குழப்பத்துக்காளாவார். பின் இங்கேயிருக்கும் அவரைப் பூவுலகில் நன்கு தெரிந்த ஒருவர் அவருக்கு விடயத்தை விளக்கி ஆறுதலளிக்க வருவார். ஆனால் அவரோ இதென்ன இறந்தவரின் ஆவி தன்முன்னே திடீரென்று தோன்றுகிறது என எண்ணி அஞ்சுவார். வந்தவர், தானும் அவரும் இருவருமே இப்போ ஆவியுலகிலிருப்பதாக விளங்கப்படுத்த அவரோ தான் ஒரு கூடாத கனவு காண்பதாக எண்ணுவார். அவர் தனது வீட்டுக்குத் தனது மனைவியைக் காணச்செல்வார். ஆனால் மனைவியோ சர்ச்சில் கறுப்பு உடை உடுத்திக்கொண்டு உட்காந்திருப்பதைக் காண்பார். அவர் தனது நண்பர்களில் யாரோ இறந்து விட்டார்கள் அது யாராக இருக்கும் (அது தானாக இருக்கக்கூடுமென சற்றும் சந்தேகப்படாமல்) வியப்பார். பின் அவர் முன்னே சென்று யாரென்று அறிவதற்குப் பிரேதப்பெட்டிக்குள் குனிந்து பார்ப்பார். அப்போது தான் முதல் தடவையாகத் தனது உடல் அங்கேயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவார். இப்படியிருக்காது, இப்படியிருக்காது எனத்தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், அவருடன் கூட வேலை செய்பவர்கள் அனைவரும் அவரது மரணத்தைப்பற்றித் (தான் அவர்களுக்கு அருகே நின்று தொண்டைத்தண்ணீர் வற்றக் கத்திக் கொண்டிருக்கும் போது) கவலைப்பட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போ அவரது நிலை உனக்கு விளங்குமென நினைக்கிறேன். சிறிது சிறிதாக அவருக்குத் தான் தான் சிக்கலில் மாட்டி விட்டது புரியத்தொடங்கும். தான் கதைப்பதை அவர்களுக்கு விளங்கப்பண்ணாவிட்டால் தன்னை உயிருடன் புதைத்து விடுவார்களென்று அஞ்சுவார். தான் கதைப்பது அவருக்குத் (தனக்குத்) தெளிவாகக் கேட்கும். ஆவியுலகிலிருக்கும் அவரது உறவினர் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள இயலாமல் தான் உயிருடன் புதைக்கப்படப்போகிறேனோ என வருந்துவார்.
"இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட ஒரு காட்சி. இதைப்போல சிலர் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றிச் சற்றும் சிந்திக்காமல் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இந்த நிலையில் தான் வருவார்கள். மூக்கைப்பிடித்தால் வாயைத் திறக்கத் திரியாதவர்கள் போல்தான் இவரின் நிலை. அவருக்கு உண்மையை விளங்கப்படுத்த நீ...................ண்ட நாட்கள் எடுக்கும். (அதாவது அவர் நிரந்தரமானவர்; ஆத்மா வடிவில் உயிர் வாழ்வார்; பூதவுடல் மட்டும் தான் அழிந்தது என்பதை விளக்குவதற்கு). அவரது விதவை மனைவியின் துயரத்திலும் பார்க்க அவரின் துயரம் மிகக்கூடுதலாக இருக்கும். அவரது மனைவி அவரை ஒரு நாள் சந்திப்போமென ஆறுதல்படுவாள். ஆனால் அவரோ நடந்தது நிஜமல்ல என நினைப்பார்.
மறுநாள் போர்ட் பின்வரும் விதமாகத் தொடங்கினார், "இப்போ வேறொரு விதமான மனிதரைப் பார்ப்போம். அவர் சொர்க்கபுரியில் நம்பிக்கை வைத்தவர். தேவகுமாரர்களும் தேவதைகளும் யாழ்வாசித்துக் கொண்டிருக்கும் பளிங்காலான மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் கூடிய சொர்க்கபுரியில் ஒரு உயரமான சிம்மாசனத்தில் ஆண்டவன் அமர்ந்து இரவுபகலாக மகிழ்ச்சியான ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பவை போன்ற கற்பனையிலுள்ளவர். இப்படியான மனநிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த சர்ச்சை அண்டிவாழும் குறுகிய மனப்பான்மை கொண்ட பலர் உள்ளனர். ஆனால் உண்மை அப்படியல்ல. இங்கே வரும் ஆத்மாக்கள் பளிங்காலான மாடமாளிகைகளை விரும்பின் அவர் அப்படிப்பட்ட இடத்திலிருப்பார். ஏனெனில் அப்படிப்பட்ட கட்டடங்கள் பூவுலகில் இருக்கின்றன. அத்துடன் ஆத்மாக்களுக்குத் தாங்கள் நினைக்கும் இடத்தில் நிற்கக்கூடிய சக்தி வந்துவிடும். ஆனால் தேவதைகளையும் தேவகுமாரர்களையும் சிறகுகளுடன் தோற்றுவிப்பது கஷ்டம். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நான் இப்போ இருக்கும் இடத்தில் காணவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் இங்கே பல ஆத்மாக்கள் ஒளி வடிவங்களாக உள்ளன. நல்ல ஆத்மாக்கள் ஒளி ரூபமாக இருக்கின்றன. ஆனால் நாம் சிறகுகளுடன் இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை. நாம் எங்கேயாவது போக நினைத்தால் அந்த நினைப்புத்தான் எம்மை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்க்கும். சிறகுகளல்ல. அத்துடன் பூவுலகிலிருக்கும் எல்லாச்சடப்பொருட்களும் எண்ண வடிவங்கள் என்பதால், நாம் அவற்றினூடே செல்லமுடிகிறது.
மற்றொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார், "நான் இன்று உனக்கு இங்கேயிருக்கும் இன்னொரு இடத்தைப்பற்றிச் சொல்லப்போகிறேன். இதை ஒரு தங்குமடமென்று சொல்லலாம். சிலர் இங்கே மிக நீண்ட காலங்கள் தங்கியிருப்பார்கள். ஆத்மீக உலகில் அவர்களின் வளர்ச்சிக்குரிய விழிப்புணர்ச்சியை எதுவாகிலும் உணர்த்தும் வரை. கத்தோலிக்கர்கள் இதனைப் 'பேர்கேட்டறி' (Purgatory) என அழைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. எல்லோரும் அங்கே சில காலம் தங்கியிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. இந்த இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஆத்மாக்களுக்காகக் கத்தோலிக்கர்கள் ஆண்டவனைப் பிரார்த்திப்பார்கள். உண்மையில் அங்கே பிரார்த்திப்பது இங்கே எமக்கு நன்மையைச் செய்கிறது. அந்தப் பிரார்த்தனைகளால் உருவாக்கப்படும் அன்பு உணர்வலைகளை எங்களால் நிச்சயமாக உணரமுடிகிறது. இறப்பின்பின் வரும் இந்த உடனடி நிலையானது ஆத்மா இரு உலகங்களுக்கிடையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். கிட்டத்தட்டத் திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலையென்று சொல்லலாம். இது கெட்ட ஆத்மாக்களுக்கு மட்டுமுரிய நிலையல்ல. கூடுதலாக உலகமாயையில் முழுவதும் ஆழ்ந்து எந்த ஒரு ஆயத்தமும் (ஆத்மீகமாக) இல்லாத ஆத்மாக்களுக்கும், தங்களது மேலுலக வாழ்வைத் தொடர விருப்பமில்லாதவர்களுக்குமான நிலையாகும். அவர்கள் ஒன்றில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்கள் அல்லது ஒருவிதமான இயக்கமுமில்லாமல் திரிவார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு ஒருவிதமான முயற்சியுமெடுக்க மாட்டார்கள். ஒன்றையும் அறிவதற்கு முயலமாட்டார்கள். அவர்கள் தங்களது உடலை நிரந்தரமானது, அழிவில்லாதது என எண்ணியிருந்ததால், அந்த உடலை விட்டுப் பிரிந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முயலாமலிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி ஆர்தர் விபரிக்கையில், 'அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இடைப்பட்ட நிலையில் நீண்டநெடு நாட்கள் மகிழ்ச்சியின்றி, மனஉளைச்சலுடன்' திரிந்து கொண்டிருப்பார்கள் எனவும், தங்களது ஆத்மஈடேற்றத்துக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக உணரும் வரை அப்படியே இருப்பார்களெனவும் சொன்னார். தாமாக ஏதாவது முயற்சி எடுக்கும் வரை எவரும் எதுவும் செய்யஇயலாது என அப்போது உணருவார்கள். அப்போது தான் உண்மையில் விழிப்புற்றவராவர். அவர்கள் அதை உணர்ந்தவுடன் அவர்களுக்கு உதவுவதற்கு அநேக சந்தோஷமான ஆத்மாக்கள் தயாராக இருக்கும். அவை அவரைத் தடைகளைக் கடக்க உதவி வழிநடத்தும். ஆர்தர் மேலும் தொடர்கையில், "சாதாரணமாக ஆத்மா உலகிற்குப் புதிதாக வரும் ஆத்மாக்களை முதலில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கூடப்படித்தவர்கள் போன்றோர் வரவேற்பார்கள். இதனால், அந்த நேரத்தில் தங்களது நைந்துபோன உடல் நழுவிப்போக மீண்டும் யௌவனப்பருவமடைவதனால் உண்டாகும் மனஅழுத்தத்தை ஒருதரத்திலேயே உணரக்கூடியதாக உள்ளது. நாம் எந்தவயதில் இறப்பைத் தழுவியிருப்பினும் இங்கே நாம் இளமையாகவே இருப்போம். குழந்தைகளும் கூடப் பொறுப்பான வழிநடத்தலின் காரணமாகக் கூடிய விரைவில் வளர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனென்றால் ஆத்மாக்கள் எல்லாமே படைப்பின் ஆதியிலே தோன்றியவையே. எனவே இங்கே வயதான ஆசிரியர்களோ, கெடுபிடியான பெற்றோர்களோ இருந்து மற்றைய ஆத்மாக்கைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். இங்கே நீ நம்புகிறாயோ இல்லையோ ஒரு சந்தோஷமான, வரவேற்கத்தக்க சூழ்நிலையே நிலவுகிறது.
"ஆரம்பமுகமன்கள் நிறைவு பெற்றதும் ஆத்மாக்களுக்கு இங்கே எப்படிப் பிரயாணம் செய்வது, எப்படி ஒருவர் மற்றையவருடன் கதைப்பது (தொடர்பு கொள்வது) அது சம்பந்தமான வழிமுறைகள் என்பன விளங்கப்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மனத்தால் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பார்கள் ஆதலால், பெரிய விளக்கங்கள் தேவையில்லை. பூவுலகில் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையானதோ அதை விடவும் இங்கே இம்முறைகள் இயற்கையானது. பூவுலகவாசிகளுக்குச் சுவாசிக்கச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அதேபோலத்தான் இங்கேயுள்ளவர்களுக்கு (ஒருவர் மற்றையவருடன் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்வதும், நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருப்போமென்பதும்).
ஆத்மாக்கள் தமது நிலையை உணர்ந்து, சந்தேகங்களைக் கேட்க வெளிக்கிடுகையில் தனது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களும் (முக்கியமாகக் கடைசியாக முடிந்த பிறவியின் ஞாபகங்கள்) வரத்தொடங்கும். தான் இப்போ முடித்து வந்த பிறவியில் நிறைவேற்ற என எடுத்துக் கொண்டவற்றில் ஏன் சிலவற்றைச் சரிவர முடிக்க முடியாமற் போனோமென வியப்பார். எந்தெந்த இடத்திற் பிழைகள் விட்டோமென எண்ணிப்பார்ப்பார். பிறவியெடுக்கும் போது என்னென்ன நிறைவேற்ற வேண்டுமென்று பிறவி எடுத்தோமோ அது தனது ஆழ்மனதுக்குத் தெரிந்தேயிருக்க ஏன் தனது வெளிமனதுக்கு மட்டும் மறந்து போனது என வியப்பார்.
"இப்போ தெருவில் காரடிபட்டு இறந்த ஒரு குழந்தையின் ஆத்மாவைப் பற்றிப் பார்ப்போம். அந்தக் குழந்தை இந்தப் பிறவியில் ஒரு பாவமும் அறியாதது. எனவே ஏன் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு அப்படி நடந்ததென்று ஒருவருக்கும் விளங்காது. ஆனால் கொஞ்சம் பொறு! அந்தக் குழந்தையின் ஆத்மாவும், அதன் பெற்றோரினதோ அல்லது தாத்தா, பாட்டியினதோ ஆத்மாக்களைப்போல ஒரே வயதுடையதாக இருக்கும். அதுவும் தனது முன்னைய பிறவிகளில் செய்த தவறுகளால் ஆத்மாவைக் களங்கப்படுத்தியிருக்கும். அந்தக் கடனை அது அடைக்க வேண்டாமா? தற்செயலான நடவடிக்கையென்பது ஒன்றுமில்லை. ஏனென்றால் இங்கே போடப்படும் திட்டமானது என்றும் எல்லாவற்றையுமே சரியாக நடைபெறச் செய்யும். ஆனால் படுபயங்கரமான கெட்டதன்மையானது கெட்டமனிதனின் மனதில் வெகு சீக்கிரமாக வளர்ந்து, சில விடயங்களை அங்கே நிறைவேற்ற என்று, ஆரம்பத்திலே இங்கிருந்து போடப்பட்ட திட்டத்தை மீறச்செய்கிறது. ஹிட்லரின் விடயத்தைப் பார்த்தோமென்றால் பிறக்கும் போது தான் ஒரு ஓவியனாய்த் தனது ஆத்மாவின் கலையார்வத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திட்டமிட்டுப் பிறந்தாலும் ஜெர்மன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதும், காலகாலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மாவின் மனதிலே சேமிக்கப்பட்டிருந்த கெட்டதன்மைகள் அனைத்தும் விஸ்வரூபமெடுத்து அவனை ஒரு அரக்கனாக மாற்றி விட்டது."
வேறொரு முறை ஆர்தர், இறப்பின் பின் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டவர்கள், தாங்கள் தங்களது பூதவுடலை நீத்து ஆத்மா உலகுக்குப் பயணமாவதை முழு உணர்வோடு செய்பவர்களுக்கு என்ன நடக்குமென்பதைப் பற்றி விளக்கினார். அவர்கள் தங்கள் பூதவுடலை விட்டு விட்டதையும் தங்களது உறவினர்கள் தங்களைப் பார்க்க இயலாதென்பதையும் உணர்ந்து கொள்வார்கள். தங்களது மரணச்சடங்குகளைப் பார்க்கப் போவார்கள் (இறுதியாகத் தங்களது உடலுக்கு வணக்கம் செய்ய). அதன்பின்னர் உறவினர்களால் தீவிரமாகத் தேடப்படாவிட்டால், பாசவலைகளால் பின்னியிழுக்கப்படாமல் சுதந்திரமாகத் தங்களது மேலுலகப் பணிகளைச் செய்யமுனைவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இங்கே உண்மையாக முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் தங்களை எண்ணங்களாலும் கருத்துகளாலும் உடுத்திக்கொள்வார்கள். முன்னேற்றப்பாதையில் போவதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் நிச்சயமாக முன்னேற்றப்பாதையில் சென்று இறைவனுடன் இரண்டறக்கலப்பார்கள். தொடக்கத்தில் அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள். அங்கே ஆசிரியர்கள் சில சமயங்களில் ஆத்மாக்களின் காலடியிலும், சில சமயங்களில் அவர்களுக்கு மேலே மிதந்தும் பாடங்களை நடத்துவார்கள். ஆனால் அவர்களும் பூவுலகில் ஆத்மாக்களுக்கறிந்த சடப்பொருட்கள் போலவே உண்மையான ரூபத்துடன் இருப்பார்கள்.
"அந்த ஆசிரியர்கள் அடிப்படையறிவுகளையும், கீழைத்தேயநாடுகளின் தத்துவங்களையும், மற்றும் புதிய சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் பற்றி விளங்கப்படுத்துவார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்தபின் அவர்கள் சிறப்புக்கல்வி (யேசுபிரான் பூவுலகில் பிறக்கும் போது அறிந்திருந்த மாதிரியான) கற்பிக்கப்படுவார்கள். அவர்கள் இறைவன் சந்நிதானத்தில் உழைக்கமட்டும் செய்யவில்லை பேரானந்தத்தையடையும் பாதையில் ஸ்திரமாகக்கால்களைப் பதித்துச் செல்வார்கள். அவர்கள் உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களென அறியப்படுவார்கள். அவர்கள் இவ்வுலகில் கண்விழிக்கையில் தங்களது கடந்து போன பிறவிகளின் தன்மைகளையும் இனி எடுக்கப்போகும் பிறவிகளின் தன்மைகளையும் முழுவதுமாக உணர்ந்தேயிருப்பார்கள். இவர்கள் கூர்மையான நினைவுத்திறனுள்ளவர்கள். அவர்கள் பிறவிகளின் இடையே இங்கே அறியப்படுகின்ற ஆத்மீக அறிவுகளைப் பூவுலக வாழ்க்கையின் போது பறிகொடுக்காமல் காப்பாற்றுவார்கள். உதாரணத்துக்கு நாம் இங்கே முன்னேறுவதற்குரிய சிறந்த வழியானது அன்பு செலுத்துவதாகும் என்று அறிவோம். வேறொரு ஆத்மாவுக்குத் தீங்கு நினைத்தால் அந்த நினைப்பே இங்கு எமது முன்னேற்றத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். அந்த நினைப்பே (அந்த நினைப்பால் எழுந்த கறையைப் போக்குவதற்குச்) சில சமயம் எமக்குப் பல பிறவிகளெடுக்க வழிகோலும். தீயனவற்றை உரைக்காதே. தீயனவற்றை நினைக்காதே. நாம் உண்டாக்குவதைத் தவிர வேறு பாவங்களில்லை. ஏனென்றால் இங்கே சாத்தான் இருப்பதற்கான ஒரு அடையாளமும் இல்லை. எமது எண்ணங்களாலும் நடவடிக்கைகளாலும் நாம் தான் சாத்தானை உருவாக்குகிறோம்.
நான் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார். "மனிதகுலத்தால் ஆரம்பத்திலேயே அறியப்பட்டதும், ஆனால் உலகாதய ஆசாபாசங்களால் மறக்கடிக்கப்பட்டதுமான காலகாலமாக இருந்து கொண்டிருக்கும் ஞானமானது எமக்கு இங்கே கற்பிக்கப்படும். நாம் ஆசாபாசங்கள், வெறுப்புகள், காமம் போன்றவற்றை விலத்துவதன் மூலம் பௌதீகவுலகின் தங்குதடைகளை உயிரோடிருக்கையிலேயே வெற்றிகொள்ளலாம் என்பதை நாம் அறிவோம். உலகாதய மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றிகொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடியற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இந்தப் பூவுலக வாழ்வென்பதைப் புரிந்துகொண்டால் இந்த ஆசாபாசங்களை வெற்றி கொள்வது இலகுவாகும். அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவனைத் தன்னைப் படைத்தவனையே மறக்கடிக்கச் செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில சமயம் பரப்புபவர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். சைத்தான் என்பது நாம் நினைப்பது போல இல்லை. மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேர்க்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீய்மைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால், ஒவ்வொரு சமுதாயமும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன்மூலம் உருவான அந்தத் தீயசக்தியே நாம் சைத்தானென நினைப்பதாகும். எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செயல்களாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ, அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கைகளாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்திவாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். அது ஒரு ஆளல்ல. ஆரம்பத்தில் ஒரு சொல்லிருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது. அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டைசச்சரவுகளிலீடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைத்தார்கள். சைத்தானைக் கடவுள் படைக்கவில்லை. மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் கீழ்த்தரமான குணங்களினால் உண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும், செயல்களினாலும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களேயாகும் என்பதனை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு கெட்ட சிந்தனையும், செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும், செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறுத்துக்கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமென்றால் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிரம்பியிருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிரம்பியிருக்கும்."
விலங்குகளுக்கும்கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதனை விளக்கப்போதுமானது. இந்த உண்மையைச் சரிவர விளங்கிக்கொள்வோமெனில் ஏன் வீணான விஷயமென்று ஒன்றுமில்லையெனப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்துகொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூண்டுப்புழு வண்ணாத்துப்பூச்சியாய் மாறி அதனது ஆத்மா வேறொரு வடிவமெடுத்தவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்கு மாறும். ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையாலடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது.காரிலடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப்போலவே அழிவில்லாததாகையால் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும். இது ஒரு மாறாத நியதியாகும். நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம்.
மேலும் வளரும்.................




ஆர்தர் போர்டின் உடலம் தீமூட்டப்பட்டது. அவரது கடைசி ஆசையாக அவரது சாம்பல் மியாமிக்கருகே அத்திலாந்திக் சமுத்திரத்தில் தூவப்பட்டது. ஒரு மாதம் முடிவடைவதற்குள் அவர் தன்னுடைய தொடரும் வாழ்க்கையின் இன்னொரு புதிய வடிவத்தைப் பற்றிப் பின்வருமாறு விளக்கத்தொடங்கினார்: "எனது பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடி, ப்ளட்சருடனும் பல நாட்கள் உரையாடி மகிழ்ந்ததன் பின் நானறிய வேண்டிய முக்கியமான ஒரு விடயத்தைத் தேடத்தொடங்கினேன். அது தான் ஞானாலயமென்பது. போன பிறவிகளினிடையில் அறிந்ததும், எனக்குக் கலைவந்தபோது உணர்ந்ததும் கொஞ்சம் நினைவிலுள்ளது."
"நான் அதிக நேரம் தேடவேண்டிய தேவையிருக்கவில்லை. ஒருவரிடமிருந்தும் வழியறியவேண்டிய தேவையில்லாமல் நானங்கு நின்றேன். எனது நினைவிலிருந்ததைப் போலவே அது ஒரு மலைச்சரிவுக்கப்பால் மறைவாயிருந்த குன்றிலிருந்து வரும் அருவிக்கருகிலிருந்தது. அது நவீனமாக இல்லை, ஆனால் அந்த இடத்திற்கு மிகவும் பொருந்தியிருந்தது. அது வாழ்க்கையெனும் நீரோடையின் ஒரு பகுதி போன்றிருந்தது. ஆசிரியர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். அதனுடைய அதிசயங்களையும், நினைவுகளின் அழகுகளையும் நான் மறக்கவில்லை என்பதையறிந்து மகிழ்ச்சியுற்றார்கள். வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நான் எனக்குரிய இடத்தில் இருந்தவுடன் அவர்களில் வயது முதிர்ந்தவர் என்னைப்பார்த்து, 'ஆர்தர் நீர் ரொம்ப நேரம் விலகியிருக்கவில்லை' என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பூவுலக வாழ்க்கையை வாழ்ந்தது எனக்கு நீண்ட பயணமாகவிருந்தது. ஆனால் இங்கே அது கண்மூடிமுழிப்பதற்குள் நடந்தது போலுள்ளது. முக்கால்வாசி நூற்றாண்டுகளுக்கு முன் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்தோம். காலம் மாறாமல் அப்படியே நின்றது போலிருந்தது."
"தியானத்தைப் பற்றிய உரையாடலுடன் ஆசிரியரானவர் பாடத்தை ஆரம்பித்தார். தியானமானது பூவுலகிலும், இங்கேயும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எனக்கு நினைவுபடுத்தினார். தியானம் என்பது கடவுளின் இருதயத்துடன் எம்மைத் தொடர்புபடுத்தும் இனிமையான பாதையாகும். அதனால் தான் பௌதீக உலகிலிருக்கும் போதே தியானம் செய்வது மிக, மிக முக்கியமானதாகும். ஏனென்றால் பௌதீக உலகிலறிவது இங்கிருக்கும் சாராம்சத்தைத்தான். தியானம் செய்துகொண்டிருந்தால் ஒரு தொடர்ச்சியிருக்கும். பிறந்த குழந்தையே அங்கு தொடர்ந்து தியானம் செய்து படைத்தவனுடனான ஒருமையை உணர்ந்து கொண்டிருக்கும்."
"ரூத், உண்மையாகக் காலைவேளைகளில் உன்னுடன் நான் நடத்தும் இந்த உரையாடலுக்கு என்னுடைய இந்த ஞானாலயத்திலிருக்கும் பழைய ஆத்மாக்கள் ஒரு கணமேனும் தாமதிக்காமல் அனுமதி தந்துவிட்டனர். அவர்களும் என்னைப்போலவே இந்தச் செய்தி பரப்பப்படவேண்டும் அதனால் எல்லோரும் பயன்பெறவேண்டும் என்று ஆர்வத்தோடு உள்ளார்கள். இந்தப் புத்தக வேலை முடியும்வரை என்னை இந்தக் காலைவேளைகளிலான உரையாடலை நிகழ்த்தச் சொன்னார்கள். இது தற்காலிகமான வேலை நேரம் தான். இந்த வேலை முடிந்ததும் வேறு வேலைகளுக்குப் போய்விடுவேன். அதாவது இங்கு வரும் ஒரே மாதிரியான மனநிலைமையைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு குருவாக நான் வருவதற்கேற்ற வகையில் என்னைத் தயார் செய்வதற்கேற்ற விதமான வேலைகளைச் செய்வேன். நான் 'அங்கு' இருக்கையில் தர்மஸ்தாபனத்திற்கு உண்மையாக இருந்தமைக்கும், மற்றும் தினமும் தவறாமல் தியானம் செய்தமைக்கும், அத்துடன் எனது பேருரைகள் கலந்துரையாடல்கள் மூலமாகத் தியானத்தின் முக்கியத்துவத்தை உலகமெல்லாம் பரப்பியமைக்குமான பரிசளிப்புத்தான் இந்தப் பதவியுயர்வு. இல்லையென்றால் நான் மீண்டும் கீழ்மட்டத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இங்கு நேரத்தை அறியும் வழிமுறைகளில்லாததால் எவ்வளவு காலம் பிடிக்குமென்று யாரால் சொல்லமுடியும்?
"இந்த ஞானாலயத்தைப் பற்றி உனக்கு மேலும் சொல்லவிரும்புகிறேன். காலகாலமாக இந்த ஞானாலயமானது இப்படியே இருந்து வருகிறது. பழங்காலக் கிரேக்க ராஜ்யமான ஏதென்சு நகரத்திலும், அதேபோலத் தேப்ஸ் என்ற பழங்கால ராஜ்யத்திலும் கிட்டத்தட்ட இதேபோன்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இங்கேயிருக்கும் புனிதமான எண்ணவடிவிலான ஞானாலயத்தைப் போலவே பூவுலகில் உருவாக்கவேண்டுமென்று சில பழைய ஆத்மாக்கள் ஞானாலயத்தைப் பற்றிய போதிய அளவு ஞாபகத்தினைக் கொண்டு பூவுலகில் பிறந்து உருவாக்கப் பட்டதே அவைகளாகும். இங்கு வழங்கப்படும் அறிவுரைகள் மனத்தாலேயே வழங்கப்படும். ஆனால் தெய்வீகமானது இங்கு வழங்கப்படும் கல்வியின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஊடுருவியிருப்பதனால், ஒவ்வொரு நாளும் ஒருவரது வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றிய மிகவும் இனிமையான சமயச் சொற்பொழிவு போலிருக்கும். எங்களைக் கடவுளின் மகிமைகளாலும், அண்டசராசரங்களின் வியப்புகளாலும் நிறைப்பதால் எமக்கேற்படும் ஆத்மஎழுச்சியானது சொல்லிலடங்காது.
"மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த ஒரு மலைச்சரிவைக் கற்பனை பண்ணிக்கொள். மரங்களின் இலைகளினிடையே சூரியக்கதிர்கள் புகுந்து வந்து விழ மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அழகான சித்திரவேலைப்பாடாய்த் தெரியும் அந்த வனத்திலுள்ள சிறிய ஒரு வெளியில்தான் எமது ஞானலயமுள்ளது. ஒதுக்குப்புறமாக, அமைதியாகக் கடவுளின் போர்வைகளான வெயிலாலும், நிழல்களாலும் சூழப்பட்டுள்ளது. நாங்கள் எங்களின் தூய எண்ணங்களின் ஊடாக எமது கல்வியைத் தொடங்கும் போது பறவைகளின் இன்னிசை நிற்பாட்டப்பட்டிருக்கும், ஆனால் தியானம் செய்கையில் அவைகள் சொர்க்கலோக கீதங்களைத் தங்களது கூக்குரல்களால் எழுப்பும். அது இந்த அகிலமெல்லாம் நிலவும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சூழ்ந்து நிற்பதைப் போன்றிருக்கும். ரூத், அந்த ஒலி ஒரு உணர்ச்சியைத் தூண்டும் ஒலி. அது எனது ஆத்மாவின் அடி ஆழத்தில் ரீங்கரிக்கிறது. அதனுடன் அது ஒவ்வொரு உயிரினத்துடனும் என்னை இணைப்பதைப் போன்றிருக்கிறது. இந்த அதிசயங்களை எல்லாம் விளங்க வைப்பது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவ்வுலகிலிருக்கையிலேயே தெரிந்தவைக்கும் இவைக்கும் பெரிதாக வித்தியாசமில்லை. இங்கிருக்கும் ஒளியானது தூய்மையானதுடன் தொடர்ச்சியானதும் கூட, ஏனென்றால் இந்த ஒளியானது சூரியனிலிருந்து வருவதல்ல. மலைகளெல்லாம் தாங்களாகவே ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரங்களும் இச்சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டன போலும். அவை தங்கள் பாஷையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப்போலுள்ளன. ஊர்வனவற்றின் மற்றும் பறப்பனவற்றின் பாடல்கள் இனிமையானவை. அத்துடன் இந்த அகிலத்தின் வேகத்தினால் உருவாகும் அதிர்வலைகளானது ஒன்றோடொன்று மிகவும் பின்னிப்பிணைந்திருப்பதால் பூவுலகிலிருக்கும் ஒருவருக்கு இவையெல்லாம் விளங்காது.
ஞானாலயத்தின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்போம். இங்கே ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கேற்றபடி தங்களுக்குப் பொருத்தமான நிலையில் ஆத்மீக முன்னேற்றமடைந்தவர்களுடன் கூட்டுச்சேர்வார்கள். அங்கே பூவுலகில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் ஒன்றுகூடி ஓரிருமணத்தியாலங்கள் கடவுளின் புகழைப்பாடிப் பின் பணத்தட்டை அனுப்புவதைப்போல அல்ல இங்கே. இங்கே அங்கு நடைபெறுவதுபோல தனிய ஒரேயொரு பூசையல்ல. இங்கே ஞானக்கோப்பையிலிருந்து ஒவ்வொருவரும் தனது தேவைகட்கேற்ப எடுத்துக் கொள்வார்கள். ஞானக்கோப்பையைத் திருப்பி நிரப்பவேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அந்தந்த நேரங்களில் ஆத்மாக்களின் தாகங்களுக்கேற்ப ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும். நாங்கள் எங்களது ஆத்மீகத் தேவைகளைச் சரியாகக் கண்டுகொண்டோமென்றால் ஞானக்கோப்பையிலிருந்து ஞானத்தை விரைவாக அருந்தலாம். சிறிது சிறிதாக எமது ஆத்மீகத் தகைமைகளுக்கேற்ப நாம் எமது முன்னேற்றத்தைத் திட்டமிட நாம் இந்த ஞானப்பங்களிப்பில் பங்கெடுத்து அதனாலேயே எமது ஆத்மாவைச் சுத்திகரிப்போம். ஏனென்றால் எம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தப் பேரலையாக இறைவன் இந்த ஞானாலயத்துக்கு வெகு அருகிலிருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் லிலி என்ற ஆத்மா என் மூலமாக எழுதுகையில் நடந்தது போலவே 'ஆர்தரும்' என் மூலமாக எழுதுவதை என்னால் பல நாட்களின் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக மீளப் பார்க்கும்வரை நினைவுக்குக் கொண்டுவர இயலாதிருந்தது. ஆனால் ஆர்தரின் நினைவுச்சக்தி கூர்மையாய் இருந்தது. மறுநாட்காலை அவர் பின்வருமாறு தொடங்கினார். "ரூத் நான் நேற்று உனக்குச் சொன்ன ஞானாலயமானது எல்லோராலும் வரமுடியாதது. பூவுலகிலிருக்கையில் ஆத்மீக முன்னேற்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றுத், தியானமிருந்து, உலகை இயக்கும் மஹாசக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டும் தான். இங்கு வரக்கூடிய தகைமையைப் பெற்ற நாமெல்லோரும் உண்மையிலேயே பாக்கியசாலிகள் ஏனென்றால் உலகப்பந்தங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் இங்கே வெகுவிரைவாக முன்னேற முடியும். இதனை வாசிப்பவர்கள் இதனது முக்கியத்துவத்தை உணர்வார்களென நான் நினைக்கிறேன். பூவுலகில் ஆத்மீக முன்னேற்றமடைந்தவர்கள் இங்கே விரைவில் முன்னேறலாம். மிகச்சில பிறவிகளே போதும்.
பூவுலகில் இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதன்மூலம் ஆத்மா நிரந்தரமானது அதற்கு அழிவில்லை என்பதை நிரூபிப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகளைத் தமக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் சிலர் நம்பாமல் பகிடி பண்ணிச் சிரித்தார்கள். நாம் அதனையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். எமது நம்பிக்கைக்கு உண்மையாயிருந்தோம். இப்படி நம்பாமல் இருக்கும் நிலையும் எமது மிகநீண்ட முன்னேற்றப் பாதையில் ஒரு படியே என்பதை நாம் அறிவோம். அப்படிப் பகிடி பண்ணுபவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். ஏனென்றால் ஆத்மா நிரந்தரமானதும், என்றும் இருந்துகொண்டேயிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்குத் தங்கள் மனதை விரியவிடாமல் வைத்திருக்கிறார்கள்."
ஒருநாட்காலை சரியான தடிமன், தொண்டை நோ இருந்ததால் நான் வழக்கமான நேரத்துக்கு டைப்ரைட்டருக்கு முன்னால் போய் உட்காரவில்லை. இரு மணித்தியாலங்களின் பின்தான் ஓரளவு உடல்நிலை சரியாகப் போய் உட்கார்ந்தேன். வழக்கமாக 'லிலி' தான் டைப்ரைட்டரில் உரையாடலைத் தொடங்குபவர். அன்று ஆர்தர் தான் தொடங்கினார். "ரூத், நான் ஆர்ட். மற்றையவர்கள் போய்விட்டார்கள். ஆனால் உனக்கு உடல்நிலை சரியில்லாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு உன்னால் வரமுடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் அங்கிருக்கையில் அப்படி நடந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் முக்கியமான விடயங்களை மறந்துவிடுவேன். லிலி இங்கே நீண்ட காலமிருப்பதால் உடலின் தன்மைகளை மறந்துவிட்டார். ஆனால் நான் நீ ரெடியாகும் வரை காத்திருந்தேன்.
"இன்று நானுனக்கு இவ்வளவு காலமும் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப்போகிறேன். இங்குள்ளவர்கள் ஒருவரையொருவர் பற்பல பிறவிகளில் சந்தித்திருப்பார்கள். உலகின் உயிரினங்களின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் சிலர் ஒன்றாயிருந்திருப்பார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் பூவுலகிலோ அல்லது மேலுலகிலோ எந்த இருவரின் பாதைகளும் நிச்சயம் சந்தித்திருக்கும். அதன் காரணமாக எந்த ஒருவரும் மற்றையவருக்குப் புதியவரல்ல. நாமெல்லோரும் ஒருவரின் பகுதியே மற்றையவரென்பதையும் நாமெல்லோரும் கடவுளின் ஒரு பகுதியே என்பதையும் இதனால் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். எல்லா ஆத்மாக்களும் கடவுளின் உருவாக்கங்களே. அதேபோலவே மரங்களும், பூக்களும், அருவிகளுமாகும். ஆனால் அவர் எம்முள் தனது ஆத்மாவை சுவாசித்ததால், அவர் தனது வடிவில் எம்மையுருவாக்கியதால் நாம் சிந்திக்ககூடிய வல்லமையையும், அதனால் சரி, பிழையையறியக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளோம்.
"சரி, பிழை என்பது வெவ்வேறு இன மக்களுக்கு வெவ்வேறு விதமாக வேறுபடும். ஆனால் இன்னொரு உயிரை வருத்துவதென்பது தன்னையும் கடவுளையும் வருத்துவதற்குச் சமமாகுமென்பது வெளிப்படை. அது பிரதான குற்றமாகும். மற்றையவர்களுக்கு உதவினோமென்றால், அது பிழையான வழிகளில் என்றாலும் நாம் பொதுவான இலட்சியமான கடவுளுக்கு உதவுவது என்ற வழியை நோக்கிப் போகிறோம். அந்தப் பிழையான வழிகள் சில சமயங்களில் சட்டத்துக்கு முரண்படலாம். உதாரணமாக அமெரிக்காவில் சில சமயம் நாம் சட்டத்தை மீறிச்செயற்பட்டாலும் கடவுளின் வழிகளுக்கு அது எதிராக இருக்கவேண்டிய அவசியமில்லை. சட்டங்களெல்லாம் பொதுவாகப் பெரிய அளவிலான மக்கள் தொகை ஒன்றாக நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டவையே. அடிப்படை பாவமானது இன்னொருவரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ வேண்டுமென்றே வருத்துவதாகும். நல்லதோ, கேட்டதோ எமது எண்ணங்களெல்லாம் செயல்களே. மற்றையவருக்கெதிராக எதுவென்றாலும் நினைத்தோமெனில் அது அவர்களின் தட்டிலிருந்து உணவையெடுத்து உண்பதைப்போல் பாவமானதே.
மறுநாட்காலை லிலியின் அறிமுகத்துடன் ஆர்தர் தொடர்ந்தார். "ஹாய் ரூத், நீ சுகமானதையிட்டு மகிழ்ச்சி. இன்றைய பேச்சுக்கு வருவோம். நான் மறு உலகைப்பற்றி நிரம்பவே வாசித்தறிந்திருந்ததாலும் எனக்குக் கலைவந்த நேரங்களில் மறு உலக அனுபவங்கள் இடையிடையில் வந்ததாலும் முன்பே சொல்லியதுபோல் நான் இங்கு வரும்போது இங்கு எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியுமென்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கும் இங்கே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. உதாரணமாக நாம் முயற்சி எடுத்தால் தான் எவரது அறிவுரையையும் கேட்க முடியும். நாம் எண்ணுவதன் மூலமே எந்த இடத்துக்கும் போய் எவரையும் பார்க்க முடியுமென்பது உண்மைதான். ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன:
ஒருவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால் நீங்கள் அவரை அணுகவோ அவரது நடவடிக்கைகளைப் பார்க்கவோ முடியாது. அது இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். நான் ப்ளச்சருடன் பல மணி நேரங்களுக்கு உரையாட விரும்பலாம். ஆனால் நான் பூவுலகிலிருந்தபோது அவர் என்மூலமாக நடத்திக்கொண்டிருந்த விஷயத்தை விடவும் அவருக்கு வேறும் பல விஷயங்களுள்ளன. எனவே எனது விருப்பங்களை அவரில் திணிக்க இயலாது. அவரும் ஒன்றில் தத்துவ விஷயங்களைப் பற்றி என்னுடன் சம்பாஷிக்க விரும்ப வேண்டும் அல்லது எனக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட விரும்பவேண்டும். உண்மையில் இங்கும் பார்ப்பதற்கு இடங்களிருக்கின்றன.
"நான் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது சொல்லவிரும்பினால், சில நேரத்தில் அவர் அந்த நேரத்தில் அகப்படாமல் போகலாம். இங்கே எந்த நேரத்திலும் பலப்பல வகையான ப்ராஜக்ட் என்று சொல்லப்படுகின்ற திட்டமுறைச் செயற்பாடுகள் நடக்கின்றன. இன்னொரு ஆத்மா எம்மைச் சந்திக்க விரும்பின் நாமும் சில வேளைகளில் அவருக்கு உதவமுடியாமற் போகலாம். நான் சொல்வது உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இதனால் எங்களது தனிமை பாதுகாக்கப் படுகிறது. அங்கேயும் கூட நீங்கள் ஒருவருடன் கதைக்க விரும்பாவிடின் தொலைபேசியைத் தவிர்ப்பதைப் போன்றதே இதுவும்."
"சிலர் இங்கு புதிதாக வரும் ஆத்மாக்களுக்குக் கற்றுத்தருகிறார்கள். சிலர் பூவுலகிலிருக்கும்போது நன்றாகக் கற்று உணராமல் விட்ட தத்துவவியல், முன்னேற்றவியல் போன்ற பாடங்களை நன்றாகப் படிக்கப் போகிறார்கள். சிலர் மும்முரமாக எண்ணக்கருக்களை ஆராய்வதில் ஈடுபடுகிறார்கள் அல்லது முற்பிறவிகளில் நிறைவேற்ற முடியாமல் போனவைகளைச் சரிசெய்யும்முகமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கபுரிக்கு உங்களைப் போலவே நாமும் தூரத்திலேயே உள்ளோம். நாம் தூல சரீரத்தை விடுத்து சூக்கும சரீரத்தை எடுத்துள்ளதால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டோமென நினைப்பது மடத்தனமாகும். இறைவனுடன் இரண்டறக் கலப்பதானது, பல காலத்திற்குக் கடவுளின் வழிமுறைகளுக்கேற்ப நடப்பதற்கான முயற்சிகளுடன் ஏனையவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதினாலும் அடையப்படும். ஏனையோருக்கு நன்றியை எதிர்பார்க்காமல் செய்யும் நல்லகாரியங்களால் கடவுளையடையும் பாதையானது இலகுவாகவும் எளிதாகவும் ஆக்கப்படும்.
எந்தவிதமான நன்றிக்கடனையோ வெகுமதியையோ எதிர்பார்க்காமல் செய்யப்படும் எந்தவொரு விஷயமும் ஆத்மீக முன்னேற்றத்தின் ஏணிப்படிகளே. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதிருப்பது நன்றென்பது நினவிலுள்ளதா? எனவே உலகாதய வெகுமதிகளையோ, நன்றிக்கடன்களையோ எதிர்பார்க்காமல், கொடுப்பனவற்றைப் பிறர் அறியாமற் கொடு. கொடுப்பதிலேயே மகிழ்ச்சியுள்ளது, அதை மற்றையவர்களுக்குச் சொல்வதிலேயல்ல. மனிதர்களிடமிருந்து வெகுமதி கிடைத்தபின் எப்படி நீ கடவுளிடமிருந்து வெகுமதி எதிர்பார்க்கலாம். பூவுலகில் ஏனையோருக்கு உதவுவதால் கிடைக்கும் புகழ்ச்சியும், பெருமையும் வெகுமதிகளே. எங்களுக்கு நாங்கள் உதவுவதற்கு நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோமா? இல்லையே. அப்படியாயின் ஏன் எம்மிலும், கடவுளிலும் ஒரு பகுதியாயிருக்கும் மற்றையோருக்கு உதவும்போது மட்டும் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்?
"ஞானாலயமென்பது ஒரு இடமென்பதல்ல. அது ஒரு மனநிலையே. நிறைவான, இனிமையான எண்ணங்களினாலும் உள்ளுணர்வுகளிலாலுமான ஒரு அறிவறிந்த நிலையே. ஒவ்வொருவரும் அதனை எங்களது கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். எனக்கு அது அழகுகளினாலும், சத்தியங்களினாலும் உருவான ஒரு வடிவமே. எம் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை உணரும் தன்மை உள்ளது. ஞானாலயமானது அந்தப் பேருண்மையின் ஒரு உயர்ந்த வடிவமே. ஆத்மாவை விளங்கிக்கொள்வதற்கும், ஆத்மீக முன்னேற்றத்துக்கும் ஆசைப்படுபவர்கள் இங்கு படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாடுவார்கள். உள்ளூர நாம் முயலாவிடின் நாம் நிரந்தரமான எதையும் சாதிக்க முடியாது.
நாம் சிறந்த மனிதகுலமாகப், பண்பட்ட மனிதராக வரவேண்டுமெனின் இந்த வளர்ச்சிக்கான முயற்சியென்பது தொடரப்படவேண்டும். பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம், மிகச்சக்தி வாய்ந்த இனமாக மனிதஇனம் வருவதற்கான சக்தியும், வலுவும் எமக்கு உள்ளது. அதற்கு என்ன செய்யவேண்டுமென்றால்: ஒரு தனிமனிதனோ, அன்றி ஒரு குறிப்பிட்ட இனமோ சக்திவாய்ந்ததாக வரஇயலாது. முழு மனித இனத்தின் முயற்சியாலேயே இது முடியும். அதனாற்தான் ரூத், ஏனையோர் கஷ்டப்படும் போது உதவிக்கரங்களை நீட்டுவது அவசியமாகிறது. இது ஒரு அதீதமான கற்பனையாளனின் கற்பனையிலெழுந்த (எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற) கனவுலகமல்ல. ஆனால் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியாகும். முன்னொரு காலத்தில் நாம் உயர்ந்த இனத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். நான் இப்போ உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறியும் தருவாயிலிருந்தோம். அந்த அறிவை வைத்து என்ன செய்வதென்றும் அறிந்திருந்தோம். ஆனால் பேராசை, அவா, வெறுப்பு இவைபோன்ற வேறும் பல கீழான உணர்ச்சிகள் மனித குலத்தைப் பௌதீக உலகில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன"
மறுநாட்காலை சற்றுப் பிந்தி எழுந்தேன். அவசர அவசரமாக டைப்ரைட்டருக்குச் செல்ல ஆர்தர் "ரூத், இது ஆட்ர், மற்றவர்கள் போய்விட்டனர். ஆனால் நீ எப்படியும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்." என்றார். பின்னர் சில பகிடிக்கதைகள் விட்டபின் பின்வருமாறு எழுதினார். "ஞானாலயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கே நாம் தத்துவக்களத்தில் உயர்வான மனங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இப்போ இங்கே இருப்பவர்கள், மற்றும் மீண்டும் உலகில் பிறக்கப் போய்விட்டவர்களின் உயர்மனங்கள் - அவர்கள் போய்விட்டாலும் அவர்களின் பதிவுகள் இங்கேயே இருக்கும் (உனது முன்னைய பிறவிகளின் பதிவுகளிருப்பதைப் போல). அண்ட சராசரங்களின் இரகசியங்களிலிருந்து எமக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற நாம் ஞானாலயத்துக்குச் செல்வோம். எப்படிச் சரியான வழிகளில் எண்ணங்களை எண்ணுவது எனவும் எப்படித் தியானம் செய்வது எனவும் படிப்போம். எமது நினைக்கும் கருவியானது எமது ஆத்மாவின் ஒரு பகுதியாகும். அதனால் தான் பூவுலகில் அதனை ஆழ்மனம் என அழைக்கிறார்கள். அது எம்முடன் எப்போதும் இருக்கும். ஆனால் வெளிமனம் எமது பௌதீக உடம்பினால் மட்டும் தான் இயக்கப் படுகிறது.
"உலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து நாம் கிரகிக்கும் எல்லா விடயங்களையும் எமது ஆழ்மனம் பதிந்து வைத்திருக்கும். எமது ஆழ்மனத்தை ஒரு மிகப்பெரிய, படிமங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அலுமாரிக்கு (கபிநெற்) ஒப்பிடலாம். எமக்குத் தெரிந்த எல்லா கபிநெற்றுகளிலும் பார்க்க மிகப்பெரியது இந்தக் கபிநெற். ஆனால் நாம் பௌதீக உடலுடனிருக்கும் போது சாதாரண வழிகளில் எமது ஆழ்மனத்தின் சக்தியை உணருவது கஷ்டம். ஏனென்றால் எமது ஆழ்மனத்திலிருக்கும் அப்படியான அறிவுகள் நினைத்தவுடன் வெளியே கொணரமுடியாத அளவு பெரிய விஷங்கள். கனவுகளின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் அந்த அறிவுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறோம். அதனுடன் ஹிப்னாட்டைஸ் எனப்படும் ஆழ்மன அகழ்வின் போதும் அந்த விடயங்கள் சிலவற்றை மேற்கொணரப் பார்க்கலாம். எந்த வழிகளிலும் எல்லா விடயங்களையும் மேலே கொணர முடியாது. ஆனால் இங்கே ஞானாலயத்தில் எல்லாவற்றையும் அறிய இயலுமாக உள்ளது. அத்துடன் ஆத்மாவின் சில சிறப்பு அம்சங்களை விருத்தி செய்து கொள்வோமாயின் எம் கடந்த பிறப்பு, அதற்கு முந்திய பிறப்புகளை மட்டுமல்ல இந்த உலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாம் எடுத்திருக்கும் ஒவ்வொரு பிறப்புகளையும் நினைவுபடுத்த இயலுமாக இருக்கும்.
"இங்கே ஞானாலயத்தில் சோக்கிரட்டீஸ் இருந்திருக்கிறார். 'கான்ட்' இருந்திருக்கிறார். 'ஜங்' இருந்திருக்கிறார். மேலும் பூவுலகத்தில் மதிப்பளிக்கும் பலர் இங்கே இருந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் வெவ்வேறு தரங்களில் மரியாதைக்குரியவர்களாய் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில உயர்வான உள்ளங்கள் பூவுலகிலிருக்கும் போது கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் எளிமையான நம்பிக்கைகளிலிருந்து வளர்ச்சியடைந்து மிகப்பெரிய அறிஞர்களாக, குருவாக மாறி இங்கே ஞானாலயத்திற்குச் சேவை செய்கிறார்கள். பலருக்கு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் பிறப்பின் அர்த்தத்தைப் பூர்த்தி செய்துவிட்டார்களென்பது மட்டுமல்ல இங்கே மேலுலகத்தில் அவர்களின் பங்களிப்பு தாராளமாக உள்ளதால் அவர்களின் பிறப்பின் அர்த்தம் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் இங்கே சுதந்திரமாக, முன்னேற்றத்தின் பலவிதமான கட்டங்களினூடாக மிக உயர்வான நிலைகள் வரையிலும் பிரயாணம் செய்யலாம். இருந்தும் அவர்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக இருப்பதால், எமது இங்கேயுள்ள 'நாள்' என்று சொல்லப்படுபவதில் சில பகுதியை இங்கே ஞானாலயத்தில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவார்கள்.
"இங்கு வந்ததன் பிற்பாடு பல ஆத்மாக்கள் கற்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஞானாலயத்தில் படிப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் போகவேண்டும். ஏனென்றால் ஞானாயத்தின் கல்வியை அவர்கள் விளங்கிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம். ஞானாலத்தின் கல்வியானது ஆத்மீகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தவர்களுக்குத்தான் விளங்கும். முன்னைய பிறவிகளில் ஆத்மீக முன்னேற்றம் அடையாதவர்களுக்கு இக்கல்வியை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே பல முன்னேற்றத்துக்குரிய பாடசாலைகள் உள்ளன. அவர்கள் அங்கு தத்துவவியலின் அடிப்படை உண்மைகளைமட்டுமல்ல எமது இருக்கையின் நிமித்தங்களையும் அறியமுடியும். நாம் கடவுளின் உருவத்தை மட்டுமல்ல அவரின் தன்மைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே எமது பயணத்தை முடித்துக் கொண்டு கடவுளை அடைவதற்கு நாம் அண்டசராசரங்களின் தத்துவத்தையும் அதன் நியதிகளையும் உணர்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் நாம் கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்திலிருந்து வேறுபட்டு உணரமாட்டோம்.
"கீழ்மட்டப்பாடசாலைகளில் காலத்தை எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது எனக்கற்போம். நாமே காலமாக மாறுவோம். எனவே எமது விஷயத்தைப் பொறுத்தவரையிலாவது எந்த ஒரு விஷயமும் எமது ஒத்துழைப்பில்லாமல் நடைபெறாது. எனவே முயற்சி எடுக்காமல் சோம்பேறிகளாக இருந்தால் நாம் காலம் ஸ்தம்பித்து நிற்பவர்களாக இருந்துவிடுவோம். ஆனால் நாம் முன்னேறி வளர்ச்சியடைய ஆவலுள்ளவர்களாக இருந்தால், எங்களுக்குள் உள்ள காலமானது மாறாத வேகமொன்றில் நாம் அறியவேண்டிய பாடம் முடிந்து அடுத்தது தொடங்கு மட்டும் முன்னேறும். நேரமானது வேறுபடும் தன்மையுடையது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் எந்த இரு ஆத்மாவும் ஒருபோதும் ஒரே விதமான ஆத்மீக முன்னேற்ற நிலைமையில் இருக்காது. அறிவறிந்த பழம்பெரும் ஆத்மாக்கள் எங்களின் அறிவுச்சாரங்களைத் திறந்து எம்மைப் புதிய பாதைகளின் மூலம் செல்லவைப்பதன் மூலம் எமக்குள் இருக்கும் காலத்தை முன்னேபோக வைக்க உதவுகிறார்கள். இந்த மேலுலகமானது வளர்வதற்கும் முன்னேறுவதற்குமான சந்தர்ப்பங்களைக் கொண்ட ஆவலைத் தூண்டக்கூடிய உலகமாகும். கடவுளின் அருளால் பல தளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அறிவுநிறைந்த ஞானாசிரியர்கள் எங்களின் நன்மைகருதி நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எமக்கு உதவுவதற்காக வருகைதரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை சில ஆத்மாக்கள் அநியாயமாக வீணடிப்பது அறியாமையாகும்.
இந்த அகிலத்துடன் ஒன்றிய நிலையிலிருந்து நாம் வேறுபட்டு நிற்பதை நாம் இறப்பு எனும் திரையினூடாக மறு உலகில் அடியெடுத்து வைக்கும் போது நாம் அனைவரும் உடனடியாக உணரச்செய்வோம் என்பதை போர்ட் வலியுறுத்தினார். "முதலில் அதனை உணர்பவர்கள் கூடுதலாக ஒன்றியிருப்பவர்கள். ஏனெனில் அவர்கள் கூடுதலாக ஒன்றியிருப்பதால் சற்றே விலகியிருந்தாலும் வெளிப்படையாகத் தெரியும். இங்கிருக்கையில் சற்றே ஒன்றிய நிலையிலிருந்து கூடுதலாக விலகியிருப்பவர்களுக்குத் தாம் விலகியிருப்பது தெரிவதற்குக் கொஞ்சம் கூடுதலான நேரம் எடுக்கும். ஆனால் கூடிய கெதியில் அதனை உணர்வார்கள். அதன் பின் அவர்கள் தங்களது ஒன்று பட்ட தன்மையைக் கூட்டிக் கொள்வார்கள். இந்த ஆத்மாக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டபின், தங்களை வழிநடத்த ஒரு குருவைத் தேடுவார்கள். தேடுதல் தொடங்கிய அந்தக் கணத்திலேயே குருவானவர் தோன்றுவதற்கு ஆயத்தமாவார். குருவானவர் அழைப்புக்காகவே பார்த்துக்கொண்டிருந்தவர். அபிலாஷையானது எண்ணத்தின் பிதாவாதலினால், எண்ணம் உருவெடுத்த உடனேயே குருவானவர் தோற்றமாவார்.
"மாஸ்டர் அதாவது குருவானவர் தோன்றியபின் ஆர்வமுள்ள மாணவனை இதேபோலவே ஒரே மனநிலையிலிருக்கும் ஏனையவர்கள் ஒன்று கூடியிருக்கும் அறிவகத்துக்கு அழைத்துச் செல்வார். அவர்கள் ஒரு சத்சங்கமாகவே ஒன்றுகூடியிருப்பார்கள். இங்கேயும் சில பின்னடைவுகள் இருந்தாலும் இங்கேயுள்ள சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டலோ அன்றி ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான சில பயிற்சிகளை தொடரா விட்டாலோ, அவர்கள் கொஞ்சம் கஷ்டமான பாதையால்தான் பயணத்தைத் தொடரவேண்டியிருக்கும். இறைவனின் மாபெரும் திட்டத்தின் அடிப்படை உண்மைகள் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. அதாவது, தெய்வீகத்தில் மாறாத நம்பிக்கை கொள்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகளும், இறைவன் வகுத்த நியதிகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்னேற்றமடைந்துள்ள ஆத்மாக்கள் ஒன்றைப்பற்றியும் கேள்வி கேட்கமாட்டார்கள் ஏனென்றால் இயற்கையின் நியதிகளை மீறுவதனால் நாம் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்வோம் என்பது தெரிந்ததே.
இயற்கையின் நியதிகள் எங்களின் நன்மைக்கே உள்ளன. பூவுலகில் தங்களின் விருப்பப்படியே எதையும் நடத்தியவர்கள் இங்கே வருகை தந்த புதிதில் இங்குள்ள நியதிகளை மீறத்தலைப்படுவார்கள். ஆனால் அது அவர்களின் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். அவர்கள் பூவுலகிலிருக்கும் போதே சில ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனரெனின் அவர்கள் கடவுளின் வழிகளையறிய முடிவதனால் இங்கு வந்ததன்மேல் அவர்களின் முன்னேற்றம் சீராக இருக்கும். ஆன்மீகப்பயிற்சிகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பது ஆத்மீகமுன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவும். கடவுளின் விருப்பத்தின் படி நடப்பது, மற்றும் உலக நியதிகளுக்கிணங்க நடப்பது. உலக நியதிகள் எல்லோரும் நிம்மதியாக, சந்தோஷமாக உயிர் வாழ்வதற்கே உண்டாக்கப் பட்டிருக்கின்றன. ஆன்மீக ஒழுக்கமானது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பிறக்கும்போதே புகுத்தப்பட்டுத் தொடர்ந்து அதனது வாழ்நாள் பூராவும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்மீக ஒழுக்கமானது மேலுலகில் மிகமிக முக்கியமான ஒன்று. பூவுலகிலும் பார்க்க இங்கே அதற்கு பெரிய முக்கியத்துவம் உள்ளது.

வியாழன், 31 மார்ச், 2011

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு






எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.

சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி சந்திரன் கபால பைரவர் இந்திராணிசெவ்வாய் சண்ட பைரவர் கௌமாரிபுதன் உன்மத்த பைரவர் வராகிகுரு அசிதாங்க பைரவர் பிராமகி சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரிசனி க்ரோதனபைரவர் வைஷ்ணவிராகு சம்கார பைரவர் சண்டிகைகேது பீஷ்ண பைரவர் சாமுண்டி



நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்



நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி





பைரவர் வழிபாடு கைமேல் பலன்
ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:


தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்




ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .



பைரவ காயத்ரி:



ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!






பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் :


ஞாயிற்றுகிழமை
தள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.




ஸ்ரீ கால பைரவர்
காசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்

முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன
சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.





பைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன் இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.



ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்


தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)


வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)


முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)


நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே
வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)


பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)


பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)


சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)


ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)



பைரவ அஷ்டகம் : -

த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம ராகப்ரபம் சுபம்.

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :


எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது


ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================

கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி

பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி







ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.

ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத் தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.



விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.

அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.

ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.





ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று.

பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.

கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டார்.




இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.

அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.


அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.

“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.

பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.

சிவக் கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.

கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.

“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”

இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயி லின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானி டம் சென்றார்.

நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானி டம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ள தால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார். சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.

“லோக நாயகா! விடையேறும் பெரு மானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”

சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார்.


தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!

அருகே அடியார்க்கு அடியானாய் நின்று கொண்டிருந்த அன்புத் தொண்டன் சுந்தரரைத் திருநோக்கம் செய்தார்.

“சுந்தரா! அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!” என்று திருவாய் மலர்ந்தார் விரிசடைப் பெருமான்!




ஐயனின் ஆணையைச் சிரமேற் கொண்ட ஆலாலசுந்தரர் நொடிப் பொழுதில் நஞ்சினைக் கொண்டு வந்தார். அவ்விஷத்தைத் திருக் கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினர்.

விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கி யவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலத் தையே அழித்து விடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப் பித்தனர்.

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.

எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.

“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித் தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி, தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.

மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.

எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார். விஷத்தைக் கொண்டு வந்த சுந்தரர் ஆலால சுந்தரர் என்னும் நாமத்தையும் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.

இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.

பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!

இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!




நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.

இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.

எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.





பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.

1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.

சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.

கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.






கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.

பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.

இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.

இத்தகைய மகிமை மிக்க பிரதோஷ விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து, சர்வேச்வரனுடைய அருளைப் பெற்று, சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி



செவ்வாய், 29 மார்ச், 2011

இந்தப் பூமியின் வயது,எண்ணற்ற பிறப்பு இறப்புக்களைக் கொண்டிருக்கிறது



அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர். அவர்கள் பலவிதமாகப் பகுத்த விவரங்கள், ஆங்கிலக் கல்வி முறையாலும், திராவிடவாதிகள் பிரசாரத்தினாலும் நாளடைவில் மறைந்து போனது. மறக்கடிக்கப்பட்டும் விட்டது.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை. ஆனால் என்றைக்குத் தமது பூர்வீக படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும் ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம் முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு.

இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது. அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், நம்முடைய பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும்.

முதலில் ராமன் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்பதை எடுத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான வருடங்கள் அளவில் சதுர் மஹா யுகம் என்ற பகுப்பு வழங்கி வருகிறது. இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.
இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.








இந்த சுழற்சிக்காகும் காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்: -

12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.

அதாவது


1 வருடம் = 12 மாதம்


43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் )


71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்

இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். )


ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே


1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் .


14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்

இதையே இப்படியும் சொல்லலாம் :-
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்


1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்


4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது.
அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்


ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள்

= 8,64,00,00,000 வருடங்கள்


இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.
அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள்.

அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.

இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 -ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.

இந்தக் கணக்கெல்லாம், யாரோ ஆரியன் கொடுத்தார்கள் என்று திராவிடவாதிகள் சொல்லலாம். முன்பு பார்த்தோமே, கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது என்றும், அதைத் தன் கொம்பினால், வராஹமானது வெளியே கொண்டு வந்தது என்றும் பரிபாடல் செய்யுள்கள் சொல்கின்றன. (பரிபாடல் - 2 & 4 )



ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அன்று முதல் இந்தக் கட்டுரை எழுதும் இந்நாள் வரையில், 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவதுதான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு.

சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த விவரங்களைத் தருவார்கள். உதாரணமாக, கலி யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்டால், நவகிரகங்களும் மேஷ ராசியில் பூஜ்யம் பாகையில் ஒன்றாகக் கூடினால் அன்று கலி யுகம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு.
இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம்.
கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்)
கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்)

இந்த காலக் கணக்கின் அடிப்படையில், ராமன் த்ரேதா யுகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று இன்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் ராமன் வாழ்ந்தான் என்பது கட்டுக் கதை என்றும் முடிவு கட்டுகின்றனர்.

பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சக் கணக்கு, சூரியனும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களும் அவ்வப்பொழுது ஒவ்வொருவிதமான சேர்க்கையில் வருவதன் அடிப்படையில் எழுந்தது. கலி யுகம் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சேர்க்கை இருக்கும் என்று பார்த்தோம், அது போல ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கும் போதும், நம் கலக்சீக்கு அப்பால் உள்ள மண்டலத்தின் அடிப்படையிலும் சேர்க்கை நடப்பதைக் கொண்டு சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, கிருத யுகம் ஆரம்பிக்கும் போது, இந்தச் சேர்க்கை மேஷ ராசியில் நடப்பதில்லை. கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்துக்கு நேராக அமைகிறது. யுகம் என்று, பொது வார்த்தையாகச் சொல்வதனால், குழப்பம் வந்து விட்டது எனலாம்.

எனவே யுகம் என்றால் என்ன என்று பார்ப்போம். 'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள். யோகா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சொல்லும் யுக்மா என்பதிலிருந்துதான் வந்தது. யோகாசனம் செய்யும் போது, உடலும், உள்ளமும் ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டும். அதனால்தான் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து யோகாசனம் வேறுபடுகிறது. இப்படி உடல், உள்ளச் சேர்க்கை இருப்பதால் அது யோகா என்றாயிற்று.

இப்படிச் சேர்வதைப் பலவிதமாகக் காணலாம். வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள்.
இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர்.


இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. இதைப் பஞ்ச வருஷாத்மிக யுகம் என்றனர். இந்தக் கால அடிப்படையில்தான் வேத யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்தனர். இந்த அடிப்படைக் கால அளவீட்டினை படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் கொண்டு போய, நாம் மேலே பார்த்தோமே அப்படிப் பிரபஞ்ச அளவிலான யுகங்கள், காலம் என்று பகுத்தனர்.

அப்படி ஐந்து வருடங்கள் கொண்ட யுகங்கள் 12 - ஐக் கொண்டது வியாழன் அல்லது ப்ரஹச்பதி என்று சொல்லப்படும் குருவின் காலச் சுற்று.
அதன் மொத்த அளவு 5 X 12 = 60 வருடங்கள்.
பிரபவ, விபவ என்று ஆரம்பிக்கும் வருடங்களின் பெயர்கள் இருக்கின்றனவே, அவை குருவின் அறுபது வருட காலத்திற்குத்தான் முதலில் இருந்தது.
ஆனால் அது பிரபவ என்னும் பெயரில் ஆரம்பிக்கவில்லை.
'விஜய' என்னும் வருடத்தின் பெயரில் ஆரம்பித்தது.
இதைப் பற்றிய விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம். இங்கு நமக்குத் தேவையான விவரங்களை மட்டும் பார்ப்போம்.

மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு.


குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஆரியத் தனம் எதுவும் கிடையாது. என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியாமல், என்றென்றும், பாரதம் முழுவதும், தமிழ் நாடு உட்பட- இந்தக் கால அளவீடு நடை முறையில் இருந்திருக்கிறது.


இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன.


120 வருட அடிப்படையில் அடுத்த அளவு காலக் கணக்கு வருகிறது.
120 X 120 = 14,400 வருடங்கள் ஒரு ஏறு முகம்.
இந்தக் காலத்தை மார்கண்டேய முனிவர் நான்கு யுகங்களாகப் பிரித்துள்ளார். இதுவே மானுட யுகத்திற்கு அடிப்படை.
மகாபாரதத்தில் (3-187) மார்கண்டேய முனிவர் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் யுகக் கணக்கு பின் வருமாறு.


அவரும், கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களைப் பற்றிச் சொல்கிறார்.
கிருத யுகம் = 4,000 வருடங்கள்.
இதில் சந்தி வருடங்கள் முன்னும் பின்னும் வரும். கிருத யுகத்துக்கு சந்தி = 400 +400 வருடங்கள்.
த்ரேதா யுகம் = 3,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 300 + 300 வருடங்கள்.
துவாபர யுகம் = 2,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 200 + 200 வருடங்கள்.
கலி யுகம் = 1,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 100 + 100 வருடங்கள்.

இவற்றைக் கூட்டினால்

400 + 4000 + 400 = 4,800
300 + 3000 + 300 = 3,600
200 + 2000 + 200 = 2,400
100 + 1000 + 100 = 1,200
= 12,000
+ 10 % சந்தி முன்னும் , பின்னும் = 1,200 + 1,200 = 2,400
மொத்தம் = 12,000 + 2,400 = 14,400 வருடங்கள்.
இதுவே மார்கண்டேயர் தரும் மானுட அளவிலான சதுர் யுகக் கணக்கு.


முன்னம் நாம் பார்த்த 120 X 120 = 14,400 வருடங்கள் இதுவே.
இது ஏறு முகம்.
இதன் இறங்கு முகம் இன்னுமொரு 14,400 வருடங்கள்
மொத்தம் 14,400 + 14,400 = 28,800


இது ஒரு சுற்று.
மனித குலத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் காட்டும் ஒரு சுற்று இது.

28,800 வருடங்கள் கொண்ட இந்த சுற்று, முன்பு பார்த்தோமே, விண்வெளி அளாவிய சதுர் யுகம் - அதன் கலி யுகத்தில் 15 முறை வரும். (15 X 28,800 = 4,32,000 = கலி யுக அளவு )


சதுர் மஹா யுகத்தில் 150 முறை வரும். (150 X 28,800 = 43,20,000 = சதுர் மஹா யுக அளவு)

ஒரு கல்பத்தில் 150,000 முறை வரும். ( 150,000 X 28,800 = 432,00,00,000 = ஒரு கல்பத்தின் அதாவது பிரம்மனின் ஒரு பகல் பொழுது அளவு)

இந்த ஒரு சுற்று சூரியன் வான் மண்டலத்தை precession என்று சொல்லபப்டும் பின்னோக்கு வழியில் செல்ல எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஆகும்.
இது என்ன என்று விளக்குவோம்.
சூரியன் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தைச் சுற்றி வருகிறது. 20 சுற்றில் ஒரு கல்பம் முடிகிறது என்று பார்த்தோம்.


இப்படிச் சுற்றும்போது, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலம் ஒரே மாதிரி இருக்க முடியாது. சூரியனும் அதனுடன் நாம் இருக்கும் சூரிய மண்டலமும் நகர, நகர, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களின் ஊடே இடம் பெயர்வது தெரியும்.
இன்றைக்கு அறிவியல் கணக்கிட்டுள்ளபடி இந்த நகர்வு ஓர் இடப் பெயர்வு நிகழ ஒரு டிகிரிக்கு 72 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரீதியில் 360 சுற்றளவுள்ள வான் மண்டலத்தைக் கடக்க ஏறத்தாழ 26,000 வருடங்கள் ஆகும்.
இந்தக் கால அளவு நம் பாரதீய சித்தாந்தப்படி முன் சொன்ன 28,800 வருடங்கள்.


இந்தக் கால அளவு அடிப்படை அளவு என்று பார்த்தோம். அறிவியலுக்கும் சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருப்பதற்குக் காரணம், சூரியனின் இந்த வேகம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருக்காது, இருந்ததில்லை. இதைப் பற்றிய விவரங்கள், நிறைய இருக்கின்றன. அவற்றை இங்கே விளக்க இடமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்த சுழற்சியின் கால அளவே.


இந்தச் சுழற்சியை வேறு ஒரு பெயராலும் அறிகிறோம்.
அது, சப்த ரிஷி மண்டலச் சுழற்சி
அல்லது சப்த ரிஷி யுகம் என்பதே.
சப்த ரிஷி மண்டலம் என்பது வானின் வட பகுதியில் தென்படுவது. அதன் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டு துருவ நட்சத்திரத்தை அறிகிறோம். நமது பூமியின் அச்சானது துருவ நட்சத்திரத்தை நோக்கியே சுழல்கிறது.



சூரியனுடன் நாமும் சேர்ந்து வான மண்டலத்தின் பின்னணியில் நகர்வதை, துருவ நட்சத்திரத்தை நோக்கியுள்ள நம் அச்சு காட்டும் இடத்தைப் பொறுத்தே அறியலாம். இதையே வராஹமிஹிரர் வேறு விதமாகச் சொன்னார். (பிருஹத் சம்ஹிதா - அத்தியாயம் 12 ). மகாபாரதப் போர் நடந்து முடிந்து யுதிஷ்டிரர் அரசரான போது, சப்த ரிஷிகள் மகம் நட்சத்திரத்தில் இருந்தனர்.

அந்த அமைப்பு இப்படி இருந்திருக்கும்.







தற்சமயம் சப்த ரிஷிகள் சுவாதி நட்சத்திரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டுவித அமைப்புகளையும் மேல் காணும் படத்தில் காணலாம்.


இந்த வேறுபாடு, நட்சத்திரங்களின் பின்னணியில், நாம் நகர்வதால் வருகிறது. மகம் மமுதல் சுவாதி வரை உள்ள தூரம் 80 டிகிரி. ஒரு டிகிரிக்கு இன்றைய அறிவியல் கணக்கின் படி 72 வருடங்கள் ஆகின்றன என்று எடுத்துக் கொண்டால், 80 டிகிரிகள் கடக்க 5760 வருடங்கள் ஆகின்றன. அதாவது மஹா பாரத யுத்தம் முடிந்து 5760 வருடங்கள் ஆகி உள்ளன.



இதுதான் சபதரிஷி யுகம் செல்லும் வழக்கு. இதை காஷ்மீரப் பகுதிகளில் 'லௌகீக யுகம்' என்று வழங்கி வந்தார்கள். காஷ்மீரப் புத்தகமான 'ராஜ தரங்கிணி'யில் இந்த லௌகீக யுகத்தின் அடிப்படையில்தான் வருடக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் ஆட்சி வந்தது முதலே, இந்த வழக்குகள் அழிந்து விட்டன. அதனால் இந்த யுகத்தின் விவரங்கள் மறைந்து விட்டன.


இந்த யுகக் கணக்கு எப்படி இருந்தது என்று சரிவரத் தெரிந்தவர்கள் யாருமே இன்று இல்லை.
ராஜ தரங்கிணி சொல்லும் லௌகீக யுகம் யுதிஷ்டிரன் வானுலகம் சென்றவுடன். ஆரம்பித்தது . அந்த வருடம் கி. மு. 3076 ஆகும்.
அந்த வருடம் லௌகீக யுகம் ஆரம்பித்தது என்று ராஜ தரங்கிணி கூறுகிறது.
அதைத் தொடர்ந்து கி.பி. 11,324 வரை இறங்கு முகமாக இருக்கக் கூடும்.
அதற்கு முந்தின ஏறு முகம், கி-மு. 17,476 -இல் ஆரம்பித்திருக்க வேண்டும்.
அதுவே நாம் இப்பொழுது இருக்கும் மனித குலத்தின், அல்லது லௌகீக யுகத்தின் ஆரம்பம்.


இந்தக் காலக்கட்டத்தை 4:3:2:1 என்ற விகிதத்தில் கிருத யுக, திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று பிரிக்கலாம்.
அவை முறையே,

கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம்
கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம்
கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம்
கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்


கிருஷ்ணன் உலகை விட்டு நீத்த பிறகு வந்ததாகச் சொல்லப்படும் கலி யுகம், பிரபஞ்ச அளாவிய சதுர் மஹா யுகத்தில் உள்ள கலி யுகம்.
அது ஆரம்பித்து 5,112 ஆண்டுகள் ஆகின்றன.


சப்த ரிஷி யுகத்தின்கண் வரும் த்ரேதா யுகம் ராமன் பிறந்த யுகமாக இருக்கக்கூடும்.
முன் பகுதியில் புஷ்கர் பட்நாகர் என்பவர் தந்துள்ள ராமனது கால நிலவரம், இந்தத் த்ரேதா யுகத்திற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னால் வருகிறது.
ஆனால் வார்தக் என்னும் மற்றொரு ஆராய்ச்சியாளர் விண்வெளி மென்பொருளில் ராமனது பிறந்தநாளைக் கண்டுபிடுத்துள்ளார்
அவர் கொடுத்துள்ள ராமனது காலம் இங்கு சொல்லப்பட்டுள்ள த்ரேதா யுகத்தில் வருகிறது.


இந்த விவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கருத்துக்கள்:-

யுகம் என்று சொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. அவற்றுள் லௌகீக யுகம் எனப்படும் சப்த ரிஷி யுகம் மனித வர்க்கம் வாழ்க்கையை ஒட்டி அமைந்துள்ளது. அதன் அடிப்படையில், சோழர் சொல்லும் பரம்பரையும் , ராமன் சொல்லும் பரம்பரையும், பல ஆயிரம் வருடங்களுக்கும் மேலானவை.
லட்சக்கணக்கான ஆண்டுகளில் வரும் மஹா யுகம் விண்வெளியில் சூரியன் செல்லும் சுழற்சி சம்பந்தப்பட்டவை.
சமீபத்திய லௌகீக யுகம் கி.மு. 17,476 ஆண்டு ஆரம்பமாகியது. அது முதல் கொண்டு வரும் மனித நாகரீகத்தின் அம்சங்களே ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்.
இந்த ஆரம்பம் வேறொரு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று அறிவியலார் ஆராய்ச்சியின்படி ஏறத்தாழ அந்த காலக்கட்டத்தில்தான், பனி யுகம் முடிந்து, இன்றைய மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது. ரிக் வேத, இராமாயண, மகாபாரத , புராணக் கதைகள் ஆரம்பமானது இதற்குப் பிறகுதான்.
கிருத யுகம் என்று மேல சொலல்ப்பட்ட காலக்கட்டத்தில், மக்கள் சாதுக்களாக, ஆன்மீக வளர்ச்சி அடைந்தவர்களாய் இருந்திருக்கின்றனர். மகாபாரதத்தில் அனுமன், பீமனைச் சந்திக்கும் சம்பவம் ஒன்று வருகிறது. (மஹா பாரதம் - 3- 148) . அதில் அனுமன் யுகங்களை விவரிக்கிறார். அவர் சொல்லும் கிருத யுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்ற பிரிவுகள் இல்லை. பணமோ, பொருளோ கொடுத்து சாமான்களை விற்பதும், வாங்குவதும் இல்லை. இயற்கையில் கிடைத்ததைக் கொண்டு மக்கள் திருப்தியுடன் இருந்தனர். எல்லா மக்களும், ஆன்மீகத்தில் நிலை பெற்றிருந்தனர். ரிக் வேதம் அப்பொழுது எழுந்தது. அதன் பிறகு வந்த த்ரேதா யுகத்தில் இந்த மக்கள் பிரிவுகள் வந்தன. அப்போழுது சாம, யஜூர் வேதங்கள் வந்தன. அதற்குப் பிறகு வந்த துவாபர யுகத்தில் வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன என்கிறார்.
ஐரோப்பியப் பகுதிகளில் பனி உருகியதால், மக்கள் ஆங்காங்கே இடம் பெயர்ந்துள்ளனர். உதாரணமாக, இங்கிலாந்தும் பிரான்சும் முன்னாளில் நிலத் தொடர்பு கொண்டிருந்தது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கி-மு- 6,500 வாக்கில் கடல் எழும்பி வரவே அந்த நிலத் தொடர்பு வழி கடலுக்குள் மறைந்து விட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பனி யுகம் முடிந்ததால், உலகெங்கும், பனி உருகி, நிலப் பகுதிகள் தெரிய ஆரமபித்தன. பனி உருகியதால், கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. அதனால் கடலை ஒட்டிய நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகள் இந்தியாவைப் பொறுத்த மட்டில், குஜராத், தென்னிந்தியா ஆகிய பகுதிகள் ஆகும். இது அறிவியல் செய்தி.
அதில் முக்கிய இடம் பூம்புகார்.
மற்ற பகுதிகள் குமரிக் கண்டம் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.
ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பே ராமாயண, மகாபாரதம் நடந்து விட்டது என்பது வராஹ மிஹிரர் கொடுக்கும் சப்த ரிஷி அமைப்பின் மூலம் தெரிகிறது.
சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று மாக்ஸ் முல்லர் அவர்களால் சொல்லப்பட்டது கி-மு- 3000 ஆண்டுகளில். அந்தக் காலக் கட்டத்தில் மகாபாரதப்போர் முடிந்து விட்டிருக்கிறது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் என்பது மகாபாரதக் காலத்திற்குப் பிற் பட்டது அல்லது அப்பொழுது இருந்த மக்களின் தொடர்ச்சியே என்றும் தெரிகிறது

விதியின் விளையாட்டுக்கு சான்று .



ஆனால் உண்மையில் விதியைப் படைத்ததே மதிதான் என்பதை நுட்பமாகச் சிந்திக்கையில் உணர்ந்து கொள்ளலாம்.



மொத்தத்தில் விதியை உருவாக்கிய மதியே அந்த விதியை மதியாது போகும்போது, அது அந்த மதிக்குதான் மேலும் சங்கடங்களை உருவாக்குகிறது. எத்தனை பலம்மிக்கதாக அந்த மதி இருப்பினும் விதிமுன்னே அது அடங்கித்தான் சென்றாக வேண்டும்.




விதியை மதியால் வெல்லலாம் என்பதெல் லாம் எல்லா இடத்துக்கும் பொருந்தாது. சில விதிவிலக்கான இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.



விதி எப்பொழுதுமே வலியது. அதற்கு தேவர், மானிடர், அசுரர் என்கிற பேதமெல்லாம் கிடையாது. அது தன் கடமையைச் செய்யத் தொடங்கி விட்டால் அதைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அதை திசை திருப்பவோ யாராலும் முடியாது. இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை ஒருவர்கூட அதை வென்றதில்லை. விதியைப் பற்றி சிந்திக்கையில் மதியின் நினைப்பு பலருக்கும் வரும். எதற்கு இருக்கிறது மதி? மதியால் ஆகாத தும் உண்டா... விதி விதி என அழைப்பவர்கள் மதியைப் பயன்படுத்தத் தெரியாத மூடர்கள் என்று பகுத்தறிவில் மிகவும் பற்றுடையவராகக் காட்டிக் கொள்பவர்கள் கூறுவார்கள்.

அயோத்தி மாநகரை ஆட்சி செய்தவன் கன்மாடபாதன். தர்மமகாபிரபு. இந்நகரின் குருவான வசிஷ்டருக்கும், ராஜரிஷி விஸ்வாமித்திரருக்கும் கடும்பகை இருந்தது. ஒருமுறை கன்மாடபாதனை சந்திக்க வந்த விஸ்வாமித்திரர், ரிஷிகளுக்கென தனியாக தர்மசத்திரம் அமைக்க வேண்டினார். அதை ஏற்ற அரசன், அவ்வாறே செய்தான். ஒருமுறை அங்கு வசிஷ்டர் தர்மம் கேட்டு வந்தார். அவர் வந்த நேரத்தில், அவரது பரம எதிரியான விஸ்வாமித்திரர், அங்கிருந்த உணவுப் பொருட்களை பசுவின் கன்றுகளாக மாறும்படி செய்து விட்டார். தர்ம சத்திர அதிகாரி உள்ளே சென்றதும் இதைக் கண்டு அதிர்ந்தார். செய்வதறியாது விழித்த அவர், இதைச் சொன்னால் வசிஷ்டர் நம்புவாரோ மாட்டோரோ என்றெண்ணி, அவசர அவசரமாக ஒரு கன்றை சமைத்து படைத்து விட்டார்.

சாப்பாட்டின் முன் அமர்ந்ததுமே, கெட்ட வாடை வீசியதால், கோபமடைந்த வசிஷ்டர் நேராக அரசனிடம் சென்றார். கன்றை சமைத்து உணவிட்டதற்காக அவனை நரமாமிசம் தின்னும் ராட்சஷன் ஆகும்படி சபித்தார். தவறே செய்யாத அரசன் விதியின் பிடியில் சிக்கி, அறியாமல் நடந்த சம்பவத்துக்காக, சாப விமோசனம் கேட்டான். வசிஷ்டர் பதில் பேசாமல் போய்விட்டார். அரசனின் உருவம் விகாரமாகி விட்டது. அவன் நாட்டை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்கு போய், சாப விமோசனம் பெறுவதற்காக யாகம் ஒன்றைத் துவங்குவதற்காக எமதர்மராஜாவை நோக்கி தவமிருந்தான். எமன் வந்தார். வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் கொடுத்த சாபம், என்னை நினைத்து செய்யப்படும் யாகத்தால் சரியாகாது என எமன் சொல்ல ராட்சஷ ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது. எமனுடன் போராட்டத்தை துவக்கி விட்டார். எமனே! நீ பொய் சொல்கிறாய். நீ தான் உலகில் வாழ்பவர்களின் ஆயுள்காலத்தை நிர்ணயிப்பவன். உன்னால், முடியாதது ஏதுமில்லை. நீ என்னை சோதிக்க நினைத்தால், அச்சோதனைகளில் வெல்வேன், என்றான். எமன் எவ்வளவோ சொல்லியும் ராஜா கேட்கவில்லை. அவனுடன் யுத்தம் செய்து வென்று, எமலோகத்திற்கு தான் அரசனாகி, யாகத்தை நிறைவேற்றப் போவதாக கூறினார். இருவரும் யுத்தத்தை தொடங்கினர். எமன், தன் கையிலிருந்த தெய்வாம்சம் பொருந்திய சூலம் ஒன்றை ராஜா மீது எய்தான்.

ராஜா தர்மத்துக்கு அதிபதியான அந்த எமனையே வணங்கி, எமனே! தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மை என்பது நிச்சயமானால், நீ எறிந்த இந்த சூலம், நொறுங்கி சுக்கு நூறாகட்டும், என்றான். சொன்னது போலவே சூலம் நொறுங்கியது. எமதர்மன் இதைக் கண்டு மனம்கலங்கி, ராஜாவுடன் மல்யுத்தம் செய்தான். அதிலும் ராஜா பிடி கொடுக்கவில்லை. பின்னர் அவனது ஆலோசனைப்படி, கன்மாடபாதனே! உன் சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விஸ்வாமித்திரர் மட்டுமே, என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான். பின்னர், கன்மாடபாதன் விஸ்வாமித்திரரை தேடிச் சென்று வணங்கினான். விஸ்வாமித்திரர் அவனிடம், நீ வசிஷ்டரின் நூறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்பிடும் சாபத்தை அவர் தானே தந்தார்! அவரே அதற்குரிய வினையை அனுபவிக்கட்டும். அவ்வாறு செய்வதால், மேலும் அவரது கோபத்திற்கு ஆளாவோயோ என எண்ண வேண்டாம். ஏனெனில் அவரது சாபம் அவரையே தாக்குகிறது. வினை செய்தவர்கள் வினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். பிறகு என்னிடம் வா. சாபத்தை நானே நீக்கி விடுகிறேன், என்றார். அரசனும் அவ்வாறே செய்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் ஓடினான். அவர் அவனிடம், ஒரு காலத்தில் வசிஷ்டர் என் பிள்ளைகளை சாம்பலாகும்படி சபித்தார். அதுபோல, இப்போது அவரது பிள்ளைகளும் மாண்டு போனார்கள். என் பழி உன்மூலம் தீர்ந்தது. உனக்கு விமோசனம் பெற்றுத் தருகிறேன், எனக் கூறி, காட்டிலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சிவனை வரவழைத்தார் விஸ்வாமித்திரர். சிவதரிசனம் கண்டு, அரசனுக்கும் எல்லையற்ற ஆனந்தம். அவன் சாபம் நீங்கப்பெற்று, சுயரூபம் பெற்றான். மீண்டும் நாடு சென்று மகனோடு நீண்டகாலம் இனிது வாழ்ந்து கைலாயத்தை அடைந்தான்



கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்