கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நவரத்தினங்களின் பண்புகள்




முத்து (pearl)


முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.




வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.


முத்தின் மருத்துவ குணங்கள்


முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.


இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.





யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.



வைரம் (diamond)


உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .


கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.



வைரத்தின் மருத்துவ குணங்கள்


மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.


யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..! வைடூரியம் (cat's eye)




இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது . நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல் .மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும் .பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும் .மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும் .


சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும் .பூர்வீக சொத்து கிடைக்கும் .நிலையான வருமானம் அமையும் .முகத்தில் வசீகரம் உண்டாகும் .



வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்




வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்

அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் ,7 16 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும் ,2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...! மாணிக்கம் (ruby)


இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .


பண்புகள்


மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .



மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .


மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .


யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!


சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம் . எண்கணித படி 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும் , பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம். மரகத பச்சை (emerald)


ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.


பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.


மரகதத்தின் மருத்துவ குணம்


மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.





யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?


மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம் புஷ்பராகம் (topaz)


இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.


கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.



புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.


யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்


தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்
பவழம் (coral)



இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.


சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.


அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.


பவழத்தின் மருத்துவ குணங்கள்



ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.


யாரெல்லாம் பவழம் அணியலாம்


பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.


சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.


அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.


பவழத்தின் மருத்துவ குணங்கள்



ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.


யாரெல்லாம் பவழம் அணியலாம்


பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம். நீலம் (sappihire)




ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.


தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.





நீலகல்லின் மருத்துவ குணம்


கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.


யாரெல்லாம் நீலம் அணியலாம்


சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம் கோமேதகம் (hessonits )


புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.


உத்தியோக உயர்வை கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்


கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.





யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?


திருவாதிரை,சுவாதி,சதய நட்சத்திர காரர்கள்.மற்றும் எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம். எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!


அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!


ஞாயிறு
மாணிக்கம்,கோமேதகம்
..
திங்கள்
முத்து,வைடூரியம்
..
செவ்வாய்
பவழம்
..
புதன்
மரகதம்
..
வியாழன்
புஷ்பராகம்
..
வெள்ளி
வைரம்
..
சனி
நீலம்




சந்திர காந்தகற்கள் (moon stone),சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்


இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.



மருத்துவ குணங்கள்


தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.


யாரெல்லாம் அணியலாம் ..?

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.




சூரிய காந்த கற்கள்



இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும் .துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.





யாரெல்லாம் அணியலாம் ..?




1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம். நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு பார்வை






செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.


பதிக்கும் முறை





மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.


நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்


நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.


யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?


மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .



எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.


பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும். அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!




மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்





முத்து
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்




புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்




கோமேதகம்


உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு விரல்




மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்டரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்..ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.


ரத்தின நிபுணர்கள் ஏனோ... எந்த தொழிலுக்கு எந்த கல் ஏற்றது என்ற தகவலை வெளியிடுவதில்லை. எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.


புஷ்பராகம்


கல்வித்துறை
கலைத்துறை
எழுத்து துறை
பொருளாதார துறை
சமய துறை
அற நிலைய துறை


..
வைரம்


விவசாயம்
நிர்வாகம்
கோழிப்பண்ணை
பால் பண்ணை
பழ மரங்கள் பயிரிடுவோர்


கோமேதகம்


ஜோதிடர்
கைரேகை நிபுணர்
அரசியல் விமர்சகர்


முத்து


உலோகம்
இசைதுறை
கணித துறை


மரகதம்


அலங்கார பொருள் விற்பனை
துணி
எண்ணை
காகிதம்
ஏஜன்ஸி
காண்ட்ராக்ட்


மாணிக்கம்


அரசு சம்பந்த பட்ட தொழில்
விளையாட்டு சம்பந்த பட்ட தொழில்
நடிப்பு துறை


பவழம்


கட்டிட தொழில்
மின்சாரம்
காவல் துறை
இராணுவம்


நீலம்


வீட்டு மனை,வீடு விற்பனை
இரும்பு
ஒரே நேரத்தில் பல தொழில் செய்பவர்கள்


வைடூரியம்
சட்டம்
நீதிமன்றம் சம்பந்த பட்ட தொழில்
மருத்துவம்
அச்சு கலை
திரைப்படத்துறை
பத்திரிக்கைத்துறை




மேலே சொன்ன கற்கள் அனைத்தும் அந்தந்த தொழிலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியவை.எனினும் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதத்தின் பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த கற்களோடு ஜாதகரின் அதிர்ஷ்ட கல்லையும் இணைத்துப் போடுவது கூடுதல் சிறப்பு.







வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்




வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்-- நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்




நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல் -- நடு விரல்


பவழம்

உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்டரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்..ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.


ரத்தின நிபுணர்கள் ஏனோ... எந்த தொழிலுக்கு எந்த கல் ஏற்றது என்ற தகவலை வெளியிடுவதில்லை. எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.


புஷ்பராகம்


கல்வித்துறை
கலைத்துறை
எழுத்து துறை
பொருளாதார துறை
சமய துறை
அற நிலைய துறை


..
வைரம்


விவசாயம்
நிர்வாகம்
கோழிப்பண்ணை
பால் பண்ணை
பழ மரங்கள் பயிரிடுவோர்


கோமேதகம்


ஜோதிடர்
கைரேகை நிபுணர்
அரசியல் விமர்சகர்


முத்து


உலோகம்
இசைதுறை
கணித துறை


மரகதம்


அலங்கார பொருள் விற்பனை
துணி
எண்ணை
காகிதம்
ஏஜன்ஸி
காண்ட்ராக்ட்


மாணிக்கம்


அரசு சம்பந்த பட்ட தொழில்
விளையாட்டு சம்பந்த பட்ட தொழில்
நடிப்பு துறை


பவழம்


கட்டிட தொழில்
மின்சாரம்
காவல் துறை
இராணுவம்


நீலம்


வீட்டு மனை,வீடு விற்பனை
இரும்பு
ஒரே நேரத்தில் பல தொழில் செய்பவர்கள்


வைடூரியம்
சட்டம்
நீதிமன்றம் சம்பந்த பட்ட தொழில்
மருத்துவம்
அச்சு கலை
திரைப்படத்துறை
பத்திரிக்கைத்துறை




மேலே சொன்ன கற்கள் அனைத்தும் அந்தந்த தொழிலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியவை.எனினும் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதத்தின் பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த கற்களோடு ஜாதகரின் அதிர்ஷ்ட கல்லையும் இணைத்துப் போடுவது கூடுதல் சிறப்பு.



ஆங்கில முறைப்படி அதிஷ்ட கற்களை தேர்வு செய்வது எப்படி...?

ஆங்கிலேயர்கள் தாங்கள் பிறந்த மாதத்தின் படி ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.இப்படி தேர்ந்தெடுக்கும் முறை 1912 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பொற்கொல்லர் கூட்டத்தில் அங்கீகரிகப் பட்டது.






ஜனவரி
கார்னட்


பிப்ரவரி

அமிதிஸ்ட்

மார்ச்

அக்வாமெரின் (அல்லது) ப்ளட் ஸ்டோன்

ஏப்ரல்

வைரம்

மே

மரகதம்

ஜூன்

முத்து (அல்லது) சர்டோனிக்


ஜூலை

மாணிக்கம்


ஆகஸ்ட்

பெரிடாட் (அல்லது) சர்டோனிக்


செப்டம்பர்

நீலம்


அக்டோபர்

ஓப்பல்(அல்லது) டூர்மலின்


நவம்பர்

டோபாஸ்


டிசம்பர்

டர்காய்ஸ் (அல்லது) லாபிஸ் லஜூலி

வியாழன், 13 ஜனவரி, 2011

சித்தர்கள் வரலாறு




சித்தர்கள் வரலாறு

பதினெண் சித்தர்கள்:




1.நந்தீசர்2.அகத்தியர்3.திருமூலர்4.புண்ணாக்கீசர் 5.புலத்தியர்
6.பூனைக் கண்ணர்7.போகர்8.கருவூரார்9.கொங்கணவர்10.காலாங்கிநாதர்
11.பாம்பாட்டிச் சித்தர்12.தேரையர்13.குதம்பைச் சித்தர்14.இடைக்காடர்
15.சட்டை முனி16.அழுகண் சித்தர் 17.அகப்பேய்ச் சித்தர்18.தன்வந்திரி

நந்தீசர்:
நந்தீசர் கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார்.

அகத்தியர்:
அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன.

திருமூலர்:
இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர்.


புண்ணாக்கீசர்:
காயகல்பம் உண்டு, அதிக ஆண்டுகள் இருந்து, பல சித்துக்களைச் செய்தவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் சீடர் என்பர். இவர் கேரளத்தில் உள்ள நாங்குணாசேரி என்ற ஊரில் சமாதி பெற்றார் என்பதாகப் போகர் கூறுகிறார்.
மூப்பு, சுண்ண செய்நீர், ஞானப்பால், மெய்ஞ்ஞானம், யோகப் பாடல் போன்றன இவர் நூல்களாம். இவரது சீடர் மச்ச முனி.

புலஸ்தியர்:
அகத்தியரின் முதல் மாணாக்கராக விளங்கியவர். இவர் சிவராச யோகி என்ற பெயரும் பெற்றவர். புலம் என்றால் தவம். இவர் தவத்தினால் புகழ் பெற்றவர் ஆதலால் இப்பெயர் பெற்றார் என அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். இவரே முதலில் புராணங்களை வெளிப்படுத்தியவர் என்பர்.

பூனைக்கண்ணர்:
கண்களின் நிறம் மாறுபட்டிருந்ததால் பூனைக்கண்ணன் என்றழைக்கப்பட்டார் என்பர். இவர் எகிப்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வைத்திய யோக ஞான சாஸ்திரங்களைக் கற்று, பின்பு எகிப்து நாட்டிற்குச் சென்று அறப்பணிகளைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய செய்திகள் அதிகமாகக் கிடைக்கவில்லை.

போகர்:
இவர் காலாங்கி நாதரின் சீடராவார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து பிறகு சீனதேசத்தில் பல காலம் வாழ்ந்து, பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்து பழநியில் வசித்தவர். சீனத்திலிருந்து திரும்பும்போது இவருடன் வந்த சித்தரே புலிப்பாணி ஆவார்.
சீனத்தில் இவர் போ-யாங் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

கருவூரார்:
கொங்கு மண்டலத்தில் கருவூரில் பிறந்தவர். அதனாலேயே கருவூர்த் தேவர் என அழைக்கப்பட்டார்.
கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் கொங்கு நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் வரிசையில் இவரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்ப வைத்து நோக்கினால் இருவரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானர் என்பதை அறியலாம். கருவூர்த் தலபுராணம் இவரை அகத்தியரோடு இணைத்துக் கூறுகிறது. எனினும் பல அகத்தியர்கள் இருந்ததாக எண்ணப்படுவதால் இவரின் காலத்தை அறிவது கடினமே.

கொங்கணவர்:
மேலைக் கடற்கரை கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர்.பிறகு, நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர்.

காலாங்கி நாதர்:
வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது.

அகப்பேய்ச் சித்தர்:
மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால் அகப்பேய்ச் சித்தர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது.
அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.
வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.


பாம்பாட்டிச் சித்தர்:
தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்த சித்தர்களில் இவரும் ஒருவர். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்து வேடிக்கை காட்டுவதே இவர் தொழில். அவற்றின் விஷத்தைக் கக்க வைத்துச் சாதாரணமான தண்ணீர்ப் பாம்பு போல் ஆக்கிவிடுவார். விஷத்தை முறிக்கும் மூலிகைகளையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். விஷ வைத்திய ஆராய்ச்சியாளர் என்றே அவரைக் கூறலாம். மருத மலையில் விஷ வைத்திய ஆய்வுக் கூடமே நடத்தினார்.


தேரையர்:
அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது.

குதம்பைச் சித்தர்:
பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்குபவர் குதம்பைச் சித்தர். இவர் தம் பாடல்களில் காதில் அணியும் அணிகலன்களுள் ஒன்றான குதம்பையை முன்னிலைப் படுத்தி, ‘குதம்பாய்’ என்று பாடியதால்தான் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
யோக நெறி, பக்தி நெறி, புறப் பூசை ஆகிய அனைத்தையும் கடந்த மலோன நிலையை அடைந்த அவர், கீழ்ப்பட்ட நிலைகள் தேவையில்லை எனப் பாடுகின்றார்.

இடைக்காடர்:
நாட்டுப்புறப் பாடல்களில் திருவிழாக் காலங்களில் இன்றும் இப்பாடல்களைப் பாடி, ஆடிக்கொண்டு, ஒயிலாட்டம் முதலான கூத்துக்களை ஆடுபவர்களைக் காணலாம்.
அந்த அளவுக்குச் சித்தர் நெறியையும், சமய உணர்வையும் ஆழப்பதிக்கும் பாடல்களில் இடைக்காடர் பாடல்களையும் சேர்க்கலாம். எளிய சொற்கள், ஆழமான கருத்துகள், இனிய சந்தங்கள் இவையே இடைக்காடரின் தனிச் சிறப்புகள் எனலாம்.குறிப்பாக, இவர் பாடல்களில் கோனே, கோனாரே, தாண்டவக் கோனே என்னும் சொற்கள் அமையப் பாடுதல் இவர் இயல்பாகும்.

சட்டை முனி:
தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.


அழுகண் சித்தர்:
தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண

சித்தர்கள் என்பவர்கள் யார்?.




சித்தர்கள்
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.


அகத்தியர்
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;

…………….

மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “

- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்


சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்


ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத் வனதுர்கை மந்திரம்



ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தும் உத்திஷ்ட புருஷி கிம்

ஸ்வபீஷி பயம்மே சமுபஸ்திதம் யதி சக்யம்

அசக்யம் வா தன்மே பகவதி சமய சமய ஸ்வாஹா செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்



பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.


சதுர்புஜம் பாசதரம் கணேசம்

ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்

லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்

ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா

அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்

லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

மருத்துவ குறிப்புகள்


இங்கே சில பொருட்களின் தன்மைகள்



பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.


வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அண்டாது.

பொன்னாங்கண்ணி கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும். இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடு தணியும்.

அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.

பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.


ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித் தொல்லை, சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.

கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.

மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.

வெள்ளை கரிசலாங் கண்ணி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுக்கும்.

கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழா நெல்லி ஆகிய இலைகளை சம அளவில் அரைத்து பாக்கு அளவில் எடுத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

கீழாநெல்லி செடியின் வேரை பசுமையாக 20 கிராம் எடுத்து அரைத்து பால், தயிர், மோர் என ஏதாவது ஒன்றுடன் கலந்து பருகினால் கை, கால் வலி நீங்கும். தேனில் கலந்து பருகி வர அம்மை நோய் தணியும்.

அரச இலையை அரைத்து பூசி வந்தால் கால் வெடிப்பு, ரணம் குணமாகும்.

அகலில் வேப்பெண்ணெயை விட்டு இரவில் எரித்து வந்தால் கொசுக்கள் பறந்துவிடும்.

துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.

பிஞ்சு வில்வக் காயை அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, ரத்த பேதி குணமாகும்.

அறுகம்புல்லை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் ரத்த மூலம் நிற்கும்.

வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும். உடையாத பழுத்த கட்டியும் உடையும்.

வேப்பங்கொட்டையினுள் உள்ள பருப்பை மை போல் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் நஞ்சு நீங்கும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?

ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை...

இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கப் போகும்போதுபருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம‌் வய‌தி‌ல் நரைமுடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, நரைமுடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரைமுடி போயே போ‌ச்சு.தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.



ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.



பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.



நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.



கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.



தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.



வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.



இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.



கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.



இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.



முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.



மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.



பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.



ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.



பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.



தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.



தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது: தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக: ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற: உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

கண்கள் குளிர்ச்சி: கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மந்தம் அஜீரணம் குணமாக: கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

வாய் நாற்றம் போக: நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

தோல் வளம் பெற: ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

வரட்டு இருமல் தனிய: எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

கருப்பை கோளாறு நீங்க: அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

நாக மாணிக்கம் என்பது உன்மையா


நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.

எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.

இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.
இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.





இந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.அவற்றை நம்புவதும்நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது.சிலவற்றை மனித உணர்வாலும், சிலவற்றைப் பாசத்தாலும்,சிலவற்றை தியானத்தால் மட்டுமே உணரமுடியும்.


இந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க ஆரம்பித்தார்.முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார்.அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன்,அவரது அழியாத காவியம்:அர்த்தமுள்ள இந்துமதம்,பாகங்கள்20க்கும் மேல்!!!)

இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.

சித்தர்கள் திருவடி சரணம்


Hindu Temples Online from Karma India

திங்கள், 3 ஜனவரி, 2011

சித்த மருத்துவம்




சித்த மருத்துவம் முல்லைப் பூவின் மருத்துவ குணம்


முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

முல்லைப் பூவின் மருத்துவ குணம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி




தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »ரோஜாவின் மருத்துவ குணம்

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.

குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.

அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா
சித்த மருத்துவம் மூலிகை -அத்திப்பழம்






அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம் வெற்றிலை மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும் கத்தரிக்காயில் பலவிதமான மாறுபட்ட வண்ணங்கள் உண்டு என்றாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்றுதான். எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். தற்காலத்தில் விதையே இல்லாத கத்தரிக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக் கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம்.

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் காலி பிளவர் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆயுர் வேதத்தில் வயாக்ரா முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்;.
மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற
காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.

முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள் குப்பைமேனியும் அதன் மருத்துவ குணமும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி:இந்த சிறு தாவர இனத்தை சேர்ந்த தாவிரம் தமிழகம் எங்கும் எல்லா கிராமங்கள், நகரங்கள் எல்லாம் வளர்ந்து நிற்கும் ஒரு தாவரமாகும். இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குப்பைமேனியின் ஆங்கில பெயர் acalypha indica
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மந்திரம் தந்திரம் யந்திரம்



கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தளவுக்கு பாமரத்தனமாய் பதியவில்லை என நினைக்கிறேன்.நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு.

முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் "த்யான நிர்விஷ்யம் மனஹ" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும்.(குமரன் சரியான ட்ரான்ஸ்லேஷன் ப்ளீஸ்!)

சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள். இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவில் இவை மனிதகுல மேம்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பதை அனைத்து மதங்களும் உறுதியாக உணர்த்தியிருக்கின்றனர்.

இந்து மதத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் ஆகிய மூன்றும்,மூன்று மார்கங்களாய்(பாதை) சொல்லப்படுகிறது.மந்திரம் என்பது ஞான மார்கமாகவும் , தந்திரம் பக்தி மார்கமாகவும், யந்திரம் கர்மசந்யாச மார்கமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மூன்றும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படாமல் எந்த ஒரு வழிபாடும் நிறைவாகாது என்றும் சொல்லப்படுகிறது.


இப்பகுதியில் மந்திரம் தொடர்பாய் பார்ப்போம்....

இந்து மதத்தில் இறைவன் "வேதமந்த்ர சொரூப நமோ நமோ" என துதிக்கப்படுகிறார்.மந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் விரவிக்கிடந்தாலும் இப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகில் மந்திரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையே முதன்மையாக வைத்து எழுத விரும்புகிறேன்.ஏனெனில், இன்றுள்ள சூழலில் மந்திரங்கள் சொல்பவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே புரிய நாம் தேமேவென பேந்த பேந்த விழித்துக் கொண்டிருபதுதான் நிதர்சனம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

என்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்."ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

மேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா?, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில் எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்

மந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.

மானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.

'தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் நிராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.


மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்" என்பது சித்தர்களின் தத்துவம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டுமென நிணைத்தேன்,எவ்வித சமயச் சார்பு இல்லாது ஒரு சாமானியனின் பார்வையிலேயே தொடர்கிறேன்.இவையெல்லாம் சாத்தியமா/புளுகா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல...பதிவெழுத உதவிய நூல்களின் பட்டியலை இத்தொடரின் இறுதியில் தருகிறேன்.

இனி இந்தப் பதிவினில் ஒலி சார்ந்த மந்திரங்கள் சிலவற்றை தருகிறேன்.இவற்றை நான் பரிட்சித்துப் பார்த்ததில்லை,பார்க்கும் பொருமையும் இல்லை.படிக்கும் அன்பர்கள் யாருக்கேனும் இதனால் பயனேதும் விளையும் பட்சத்தில் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாயிருக்கும்.தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.

இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',
மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.

பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....


தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.


"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",


"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்



வாமதேவ மந்திரம்


"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்



"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்


ஈசான மந்திரங்கள்


"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.